Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்களும், கண்ணீரும் – அரிய தகவல்களுடன் ஒரு மருத்துவ அலச‌ல்

கண்களும், கண்ணீரும் – அரிய தகவல்களுடன் ஒரு மருத்துவ அலச‌ல்

கண் நோய் பற்றிய தகவல்கள்:-

கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில் எந்த நேரமும் கண்களிலிருந் து கண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இது இயல்பானது. ஆனால் சிலருக்கு சில வேளைகளில் கண்ணிலிருந்து நீர் அதீதமா

க வழிகிறது. இது ஏன்?

கண்ணீரின் கடமைகள்

காரணம்என்னவென்றால், கவலையை வெ ளிக்காட்டுவதை விட கண்களுக்கு மேலும் பல கடமைகள் உள.

கண்களை ஈரலிப்பாக வைத்திருப்பது முக் கிய கடமையாகும். கண்கள் ஈரலிப்பாக இ ருப்பதால்தான் கண்களை நாம் மூடித் திறக்கும்போதும், பார்வையைத் திரு ப்புதற்காக கண்களை ஆட்டும் பொழு தும் உராய்வு இன்றி வழுவழுப்புடன் அதனால் இயங்க முடிகிறது.

கண்களுக்கு தேவையான போசணை யில் ஓரளவு அதனூடகவும் கிடைக்கி றது.

தூசி மற்றும் உறுத்தக் கூடிய பொருள் களிலி ருந்து கண்களைப் பாதுகாக்கி றது. கண்கள் மாசு மறுவின்றி பளிங் குபோல கண்ணீரினால் பேண ப்படுவதால்தான் எமது பார்வை தெளிவாக இருக்கிறது.

கண்ணில் தொற்று நோய்கள் ஏற்படாமல் காப்பதும் கண்ணீர்தான்.

நமது கண்களின்மேல் ம டலுக்கு கீழே பல சிறிய கண்ணீர் சுரப்பிகள் உள் ளன.

அவற்றிலிருந்து நாசிக்கு அருகே கண்களில் இரு க்கும் நுண்ணிய துவார ங்கள் ஊடாகவே கண் ணீர் வருகின்றது.

இந்தக் கண்ணீரின் ஒரு பகுதி ஆவியாகி மறைந்துவிட, மீகுதி கண்ணீர்க் குழாய்களுடாக நாசியினுள் வழிந்துவிடும். இது தொட ர்ச்சியாகநடை பெற்றுக்கொண்டிருக் கும் வழமையான செயற்பாடு. இக் குழாய் அடைபடுவதாலும் கண்ணீர் அதிகமாக வழியலா ம்.

திடீரென அதிகமாக கண்ணீர் வடிதல்

ஆனால் நாம் உணர்ச்சி வசப்படும் போ தும், கண்களுக்குள் ஏதாவது விழுந்து உறுத்துப்படும்போதும் அதிகமாகக் கண்ணீர் வடிகிறது. இது வித்தியாசமா ன செயற்பாடு. இது கண்ணீர்ச் சுரப்பி  யிலிருந்து வெளியேறுகிறது. இது தற்காலிகமாக நடைபெறுவதாகும்.

தொடர்ந்து தொலைகாட்சி பார்க்கும் போது அல்லது கணனியில் வேலை செய்யும்போது கண்ணீர் வடிகிறது என ப் பலர் சொல்வதை க் கேட்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

வழமையாக எமது கண்கள் அடிக்கடி இமைக்கிறது. அதாவது தானாகவே வெட்டி மூடுகிறது. இச் செயற்பாட்டின்போது மேலதிக கண் ணீர் கண்ணீர்குழாய் ஊடாக வெளி யேறிவிடுகிறது.

ஆனால்தொடர்ந்து உற்றுப்பார்க்கும் போது கண்களை வெட்டி மூடும் செ யற்பாடு குறைகிறது. இதனால் கண் ணீர் குழாய் ஊடாக வடிவது குறைந் து தேங்குவதாலேயே கண்ணீ ராக வடிகிறது.

கண்ணில் கிருமித்தொற்று (Conjuntivitis) ஏற் படும்போதும் கண்க ளிலிருந்து நீர் போல வடிவ துண்டு.

தொடர்ச்சியாக கண்களிலிருந்து நீர் வழிதல்

ஆனால் இதைத் தவிர நீண்டகாலத்திற்கு தொட ரும் அதிக கண்ணீர் சுரப்பதை chronic epiphora என்பார்கள்.

இவ்வாறான நீண்டகாலம் தொடரும் கண்ணீர் சுரப்பதற்கு மருத்து வ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

தொடர்ந்து கண்ணீர் வழிதலின் காரணங் கள்.

சூழல் காரணமாகலாம். இரசாயனப் பொ ருட்கள், புகை, வெங்காய மணம் போன்ற கண்களை உறுத்தக் கூடிய ஏதாவது ஒன் று காரண மாகலாம்.

ஓவ்வாமை காரணமாகலாம். சுழலிலுள்ள தூசி, மகரந்தம் போன் றவற்றால் ஏற்படும் ஒல்வாமை (Kernal Conjunctivitis) காரணமாகலாம். குளு க்கோமா போன்ற ஏதாவது கண் நோய் களுக்கு தொடர்ந்து கண்களுக்கு ஊற் றும் துளி மருந்துகள் கூட சிலருக்குக் கார ணமாகலாம்.

கண்நோய் எனப்படும் கண்களில் ஏற்ப டும் கிருமித் தொற்று infective conjunctivitis மற் றொரு காரணமாகும். வைரஸ் கிருமித் தொற்று எனில் நீர்போலவும், பக்றீரியா தொற்று எனில் சற்றுத் தடிப்பாக பூளையாகவும் வரும். காலை யில் கண் விழிக்கும்போது அதனால் கண்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். அன்ரிபயடிக் கண்துளி களை மருத்துவர் தருவார்.

ஓரிரு இமை முடிகள் உட்பக்கமாக சிலருக்கு வளர்வதுண்டு. Entropion என்பார்கள். இதுவும் மற்றறொரு காரணமாகும்.

வரட்சியான கண்கள் முக்கிய காரணமாகும். வயதாகும்போது பொ துவாக ஏற்படும் பிரச்சனை இதுவாகும். அடிக்க டி கண்களை வெட்டி மூடுதல், கடுமையாக காற் று வீசுமிடங்களைத் தவிர்த்தல், புகைத்தலை நிறுத்தல் போன்றவை உதவும். செயற்கைக் (Artificial tears) கண்ணீரை உபயோகிப்பதும் உதவும்.

கண்ணீர்க் குழாய் ஏற்படும் அடைப்புகளால் வழ மையாக நாசிக்குள் வழிவது தடைப்படுவதால் கண்ணீராக ஓடக் கூடும். இதற்கு சிறிய சத்திரசிகிச்சை உதவும். மாறாக நுண் துவாரங்களி ல் ஏற்படும் அடைப்பு மருத்துவர் நீரி னால் கழுவுவதன் மூலம் அகற்றுவா ர். சில குழந்தைகள் பிறக்கும்போது அக்குழாய் முழுமையாக வளர்ச்சிய டையாததால் கண்ணீர் தொடர்ந்து வரும். சிலவார ங்களில் அக்குழாய் முழுமையாக வளர்ந்ததும் கண்ணீர் பெருகுவ து குறைந்து விடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: