தமிழில் மின்னஞ்சல் அனுப்ப எளிய வழி இருக்க, கவலை உனக் கெதற்கு?
என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி? என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை எதற்கு?
ஆம்! நண்பர்களே! ஜிமெயிலில் தமிழிலேயே வாக்கியங்களை
அமைத்து அதை நீங்கள் யாருக்கு அனுப்ப வே ண்டுமோ, அனுப்பலாம் .
சரி முதலில் மின்னஞ்சல் எப்படி அனுப்ப லாம் என்பதை பார்ப்போம்.
முதலில் நீங்கள் ஜிமெயிலுக்குச் செல்லு ங்கள். பின் அதிலுள்ள மின்னஞ்சலையும், கடவுச்சொல் (Password)ஆகிய இரண்டை யுமே டைப்செய்து உள்ளே நுழையுங்கள். இப்போது இன் பாக்ஸ் இல் உள்ள மின்னஞ்சல்கள் வரிசையாகப் பட்டியலிடப்பட்டிருக்கும். இந்த பட்டியலுகு உங்களுக்கு இடது புற த்தில் மேலே Compose என்று ஆங்கிலத்தில் இருக்கும். அதனை அழுத்தினால், புதிதாக தோன்றும் ஒரு பெட்டி யில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை டைப் செய்யுங்கள். இ ல்லை ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க விரும்பினால்,
கீழேஉள்ள பட்டையி ல் ஜெம் கிளிப் படம் உள்ள பொத்தானை அழுத்து ங்கள், அதன் மூலமாக நீங்கள் இணைக்க வேண் டிய ஆவணத்தை தேடி கண்டுபிடித்து அதனை சரியாகச்சுட்டுங்கள் (ஆவணத்தை இணைப்பது மட்டுமல்ல கீழே உள்ளபட்டையில் நீங்கள் டைப் செய்த மின்னஞ்சல் செய்தியை அலங்காரமாக்கவோ அல்லது அழகூட்டவோ செய்வத்
குண்டான அனைத்து வசதி களும் இங்களே கொட்டி க்கிடக்கிறது) அதன்பிறகு நீங்கள் அனுப்ப வேண் டிய செய்தியின் பொருளை, மேலுள்ள சப்ஜட் என்ற இடத்தில் டைப்செய்யுங்கள். பின் இதற்கு மேலுள்ள பெட்டியில் நீங்கள் யாருக்கு மின்னஞ்சல் அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்கள து மின்னஞ்சலை டைப்
செய்யுங்கள் (மின்ன ஞ்சல் டைப்செய்யும் போது மிகுந்த கவனம் தேவை, ஒருமுறைக்கு இருமுறை சரி பார்க் க வேண்டும். ஒருசிறுபிழையோ, இடைக் கோடோ அடிக்கோடோ, காலியிடமோ, புள் ளியோ கூடுதலாகவோ அல்லது தவறாக இடம் பெற்றால் நீங்கள் அனுப்பும் மின்னஞ் சல் நீங்கள் அனுப்புவருக்குச்செல்லாமல் உங்களுக்கே
திரும்ப வந்து விடும்). அதன் பிறகு அந்த பெட்டியின் கிழே உள்ள பட்டை யில் send என்று ஆங்கிலத்தில் இருக்கிறத ல்லவா அதை அழுத்தினால் உங்கள் மின்ன ஞ்சல் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்களு க்கு சரியானமுறையில் போய் ச்சேர்ந்திரு க்கிறது என்றுஅர்த்தம்.
சரி தமிழில் எப்படி டைப் செய்வது என்பதை பார்ப்போமா?
முதலில் உங்கள் மின்னஞ்சல் பக்கத்தில் உள்ள வலது மேற்புறத்தில் தோன்றும் மின்னஞ்சல் முகவரிக்கு பக்கத்தில் செட்டிங்க்ஸ் என்ற வார் த்தையை சொடுக்குங்கள். பின் தோன்றும் மெ னுவில் முதலில்இருக்கும் லேங்வேஜ் என்ற ஆங்கில வார்த் தைக்கு நேர் எதிராகத் தோன்று ம் (yours mail id. Mail Display Languages என்ற வாசகத்திற்கு
அருகில் இருக்கும் பெட்டியை சொ டுக்கி ஆங்கிலம் என்ற மொழியைத் தேர்ந்தெடு க்கவும் பிறகு, அதன் கீழுள்ள Enable Transliteration – type phonetic English – Learn More – Default Transliteration languages என்ற வாசகத்திற்கு அருகில் உள்ளபெட்டியைசொடுக்கி அதில் வரும் மொழிகளில் தமிழைத் தேர்ந்தெடுக்கவு ம். பிறகு கீழே உள்ள சேவ் அண்டு கன்ட்
டினியூ என்ற வாசகத்தை சொடுக் கினால், உடன்அதிலிருந்து வெளி யே வந்து உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸ் இருக்கும் பக்கத்திற்கு சென்று விடும்.
அதன் பிறகு மேற்சொன்னபடி ஜி மெயில் கணக்கை திறந்த உடன் தோன்றும் இன்பாக்ஸ் பகுதிக்கு வலது மேறபுறத்தில் த என்ற எழுத் து தனித்து இருக்கும் அந்த எழுத் தை அழுத்திவிட்டு, மேற்படி இடது மேற்புறத்தில் இருக்கும் கம்போஸ் என்ற பொத்தானை அழுத்துங்கள், இப்போது நீங்கள் தமிழில் அமைக்க விரும்பிய வார்த்தைகளை, அப்படியே தமிழ் உச்சரிப்போடு ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள்.
நீங்கள் டைப்செய்யும்போது ஆங்கிலத்தில் தெரியும் அந்த வார்த்தை நீங்கள் ஸ்பேஸ் பாரையோ அல்லது எண்டரையோ அழுத்து ம்போது தமிழில் சட்டென தமிழில் மாறுவ தை நீங்கள் காணலாம். ஒருவேளை உங்க ளுக்குவேண்டிய எழுத்துக்கள் வராமல் தவ றான எழுத்துக்களை காண்பித்தால் நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும்போதே அந்த எழுத்துக்கு தொடர்புடைய பிற எழுத்துக்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தற்காலிகமாகத் தோன்றும் நீங்கள் அதில் சென்று சரியான எழுத்துக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதுபோன்றேதொடர்ச்சியாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப்செய்யும் எழுத்து க்கள் அடங்கிய வார்த்தைகள் நீங்க ள் அடுத்தடுத்த வார்தைகளோ அல் லது அடுத்த பத்திக்கோ செல்லும் போதே மாறிக்கொண்டே வரும். ஒரு தமிழில் ஒரு முழுமையான மின்னஞ்சல் ஒன்றை நீங்களே தயார் செய்துவிட்டீர்களே. நீங்கள் தயார் செய்த மின் னஞ்சலை நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டு மோ அவர்களது மின்னஞ்சலை தமிழில் டைப் செய்தால் அந்த மின்னஞ்சல் முகவரியை ஏற் காது. அய்யய்யோ என்ன சார் சொல்றீங்க இவ் வளவுநேரம் கஷ்டப்பட்டு டைப்செய்துவிட்டு பின் அனுப்ப முடியாது என்று சொல்கீறீர்ளே என்று கேள்வி கேட்பது எனது செவிகளில் விழு கிறது இதற்கும் வழி இருக்கிறது. முன்பு நீங்கள் தமிழில் டைப் செய் வதற்கு மேலே
த என்ற எழுத்து தனித்திருந்தது அல்லவா? அந்த எழுத்தை மீண்டும் ஒருமுறை ஆழுத்திவிட்டு பின், நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவ ரியினை டைப்செய்தால் ஆங் கிலத்தில்தெரியும். முழுமையாக சரியான மின்ன ஞ்சல் முகவரியை டைப்செய்துவிட்டு மேற்கூறிய படியே கீழுள்ள SEND என்ற ஆங்கில வார்த்தை யை அழுத்திவிடுங்கள். உங்கள் மின்னஞ்சல் பறந்துசென்று நீங்கள் அனுப்பியவருடைய இன்பாக்ஸில் போய்ச்சேரும். அவ்வளவுதான்.
– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி