Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான் . . .

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான்  . . .

அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் தொடங்கி, தொடர்ச்சியாக பல் வேறு வெற்றிப்படைப்புக்களைக் கொடுத்து, ஆறு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த

ஒரே பெயர் என்றால் அது சூப்பர்ஸ்டார், இந்த பட்ட‍ம் ரஜினிகாந்த் -க்கு மக்களே விரும்பிக் கொடுத்த‍ பட்ட‍ம்.

அதுபோல், க‌ளத்தூர் கண்ண‍ம்மா திரைப் படம் மூலம் அறிமுகமான கமல் ஹாசன் அவர்களுக்கு உலக நாயகன், கலை ஞானி, காதல் இளவரசன் போன்ற பல்வேறு பட்ட‍ங் கள் உள்ள‍ன• இருப்பினும் தனது ரசிகர் மன் றங்களை, நற்பணி மன்றங்களாக மாற்றிய ஒரே  நடிகர் இவரே என்றால் அது மிகையா காது. மேலும் நடிப்புக்காக பல விஷயங்க ளைத் தியாகம் செய்தவரும், மேலும் தமிழ் திரையுலகை அடுத்த‍ கட்ட‍த்திற்கு முன்னே ற்ற‍ப்பாதையில் கொண்டு சென்று கொண் டிருப்ப‍வரும் நம்ம‍ உலக நாயகன் கமல் ஹாசன்தான்.

மேலும் உலக நாயகன் கமல், ரஜியுடன் தான் சேர்ந்து நடிக்க‍ விருப் ப‍தாக தெரிவித்துள்ளார். அதுபற்றிய விரிவான செய்தி இதோ

1970 மற்றும் 80–களில் ரஜினியும் கமலும் நிறைய படங்களில் இணைந்து நடித்தனர். இவர்கள் சேர்ந்து நடித்த அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், 16 வயதி னிலே, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட பட ங்கள் வெற்றிகரமாக ஓடின. அதன்பிறகு இருவரும் தனித்தனியாக பிரிந்து கதாநாயகர்களாக நடித்தனர்.

இருவரையும் சேர்த்து வைத்து மீ ண்டும் படம் எடுக்க முயற்சிகள் நடந்தும் அது நடக்கவில்லை. எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக கமல் ஹாசன் தற்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

ரஜினியும் நானும் சேர்ந்து நடித்தால் அந்த பட த்தை ரஜினி டைரக்டுசெய்ய மாட்டார். நானோ அல்லது வேறு டைரக்டரோ இயக்குவோம். நா ங்கள் இணைந்து நடித்தால் அது சுவரஸ்யமா ன விஷயமாக இருக்கும்.

நான் நடித்த தெனாலி படத்தின் வெள்ளிவிழா நடந்த போது ரஜினி என்னுடன் மோட்டார் ‘பைக் ’கில் பயணித்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தி னார்.

அவர் பேசும்போது ‘‘கமல் என்னை வைத்து பைக் ஓட்ட துவங்கியதும் நன்றாக ஓட்டவருமா’’ என் று கேட்டேன். அப்போது கமல் அப்படியே கீழே விழுந்தாலும் நான்தான் விழுவேன். உங்களை கீழே விழவிட மாட்டேன் என்றார். எங்கள் சினிமா வாழ்க்கை யிலும் அப்படித்தான் நடந்தது. அவர் என்னை கீழே விழவிடவில்லை. 1983ல் சினிமாவை விட் டு வெளியேற முயன்றபோது கமல் எனக்கு சமா தானம் சொன்னார் என்று அந்த விழாவில் ரஜினி குறிப்பிட்டார். எனவே நானும் ரஜினியும் ஒரு பட த்தில் இணைந்து நடிக்க‍ப் போகிறோம். அதற்கான‌ சூ ழ்நிலைஉள்ளது. இதுகுறித்துகடந்த 5வருடமா க பேச்சு வார்த்தை நடக்கிறது. அந்த படத்துக் கான எதிர்பார்ப்புகளைநினைத்துதான் பயமா க இருக்கிறது. இவ்வாறு கமல் கூறி னார்.

இந்த செய்தியை மாலைமலரில் படித்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: