Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொள்ளை லாபம் பார்க்கும் டீ, காப்பி தொழில்! – ஆச்சரியத் தகவல்!

கொள்ளை லாபம் பார்க்கும் டீ, காப்பி தொழில்! – ஆச்சரியத் தகவல்!

லாபம் கொழிக்கும் டீ காப்பி கடை தொழில். (தமிழர்களுக்கு தெரியல.. கேரளா நாயர்களு க்கு தெரிந்து இருக்கிறது)

பால்விலை உயர்வின் காரண மாகத் தமிழ்நாட்டில் டீ, காப்பி விலை குவளைக்கு ரூ.1 – ரூ. 2 வரை உயர்கிறது. இதனால்

சாதாரணத்தெருவோர டீ/காப்பி கடைகளில்

ரூ.9/-க்கு ஒரு குவளை டீ ………ரூபாய் 11 க்கு காப்பியும் விற்கப் போவதாக அறிவிப்பு.

இதன் அடிப்படையில் ஒரு புறம் சாதாரண மக்களின் பசி ஆற்றும் டீ இப்போது ஆடம்பர பானமாக மாறும் அவலம் ஏற்படதான் போகு து.

மறுபக்கம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 38 க்கு விற்கப் படுவது..அன்றாடம் வீட்டில் டீ காப்பி குடிக்கும் குடும்பத்தாருக்கு டீ காப்பி என்றால் வயிற்றில் புலியை கரைப்பதாக ஆகும்.

ஆவின் பாலை நம்பி பிள்ளையைப் பெற்ற பெண்களுக்கு..இந்த விலை உயர்வு தாய்பாலை பீச்சி புட்டி பாலாக குழந்தைக்கு விட்டு தன் அலுவலங்க ளுக்கு செல்லும் அவல‌மாக மாறும். தாய் பால் நின்றுபோன பெண்களின் நிலையை உங்கள் பார்வைக்கே விட் டு விடுகிறேன்.

இந்தவிலை உயர்வு ரோடோரம் டீ காப்பி கடை நடத்துபவர்களுக்கு ஒருவிதத்தில் லாபமாக அமைய லாம்.

ரூபாய் 9 x குறைந்தது 500 டீ = ரூபாய் 4500 ஒரு நாள் வருமானம்
ரூபாய் 4500 x 30 = ரூபாய் 1,35,000 ஒரு மாத வருமானம்

மாத செலவுகள்:

கடை வாடகை, ஆட்கள் கூலி, பால், இதர எல்லாம்சேர்த்து அதிக பட்சம் ரூபாய் 75,000 ஆனாலும்…மாத லாப ம் குறைந்தது ரூபாய் 60,000 எட்டும். இன்று பன்னாட்டு சாப்ட்வேர் கம்பனி களில் கூட இந்த சம்பளம் கிடைப்பது அரிதே. ஹ்ம்ம்ம்.

இது டீ மட்டுமே கணக்கில் எடுத்து க்கொள்ள‍ப்பட்ட‍து. மேலும் காப்பி, பால், லெமன் டீ, கரீன் டீ, மசாலா டீ, இஞ்சி டீ,  போன்விட்டா, ஹார் லிக்ஸ், பூஸ்ட், போன்றவற்றிற்கு கூடுதல் விலை நிர்ணயம் வேறு. அதுமட்டுமா? உருளைக் கிழங்கு போண்டா, சாதாரண போண்டா, கஜுரா, வாழைக்காய்  பஜ்ஜி, பிரெ ட் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, மெதுவடை, மசால் வடை, சமோசா, பிஸ்கட்வகைகள், கேக், பன் போன்ற வைகள் ஒரு நாளைக்கு எவ்வ‍ளவு விற் கும் என்று நீங்களே கணக்குப்போட்டு ப்பாருங்கள் நீங்களே வியப்பில் வாயை ப்பிளப்பீர் கள்.

அதுமட்டுமா? சில தேனீர் கடைகளில் மேற்காணும் வகைகளோடு சேர்ந்து பழச்சாறுகளையும் சேர்த்து விற்கின்றனர். என்ன‍ மலைப்பாய் இருக்கிறதா?

பாரப்ப‍தற்கு சாதாரண டீ கடை தா னே என்ன‍ வருமானம் வந்து விடப் போகிறது என்று நினைத்தோம் ஆனால் இவ்வ‍ளவு வருமானம் வரு வதால்தான் நம்மூரில் தெருவுக்கு நான்கைந்து டீக் கடைகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டிருக்கின்றன•

குறிப்பு

மேலே, டீக் கடையில் வரும் வருமா னத்தை மட்டுமே கணக்குப் பார்க்கப் ப‍ட்டுள்ள‍து. ஆனால் இந்த தொழிலு க்குத் தேவை மிதமிஞ்சிய  (அசாதா ரணமான‌) உடல் உழைப்பையும் முதலீடாக செய்ய‍ தயாராக இருப் ப‍வர்க ளால் மட்டுமே இது சாத்தியம் என்பது கூடுதல் தகவல்.

முகநூலில் கண்டெடுத்த‍ தகவலை, கூடுதல் வரிகளுடன் மெருகேற்றி யது விதை2விருட்சம்.

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: