Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க‌ ஆரோக்கியத்தைக் கெடுக்கும் "மனத்தளர்வு" நோயின் பாதிப்புக்களும், மீள்வதற்கான வழிகளும்,

உங்க‌ ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மனத்தளர்வு நோயின் பாதிப் புக்களும், மீள்வதற்கான வழிக ளும்,

எந்த ஒரு கோளாறும், ரொம்ப நாள் நீடிக்கக்கூடாது; அப்படி போனால் பெரிய சிக்கலுக்கு காரணமாகி விடும். அதேபோல், மனத் தளர்ச்சி (டிப்ரஷன்) பிரச்ச னையையும் உடனே கவனிக்க வேண்டும்.

டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். மனதளவில் எந்த விதமான

உணர்ச்சிகளும், இவற்றுக்கு வழி வகுத் தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலை கள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.

எப்போதும் முகத்தை உம்மென்று வைத் திருந்தால், மனத்தளர்வு நோய் ஏற்படும். உம்மனாமூஞ்சியாக இருக்காமல், சிரித்த முகமாக இருக்கவேண்டும். தனக்கு நேர் ந்த நிலைமையால், எப்போதும் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் இருப்பது, சிரிக்கக்கூட யோ சிப்பது, எந்த ஒரு விஷயத்திலும் மனம் ஒப்பா மை மனத் தளர்ச்சி யை ஏற்படுத்தும்.

இதனால், முகத்தில் புன்முறுவல் வராது; அப்படி யே வந்தாலும், அதை அடக்கிக்கொண்டு விடுவ ர். அர்த்தமில்லாத கோபம் வரும்; தேவையில்லா த குழப்பம்வரும்; அதுவே டிப்ரஷனில் விட்டுவிடு ம்; அதன்பின் கேட்க வே வேண்டாம். ரத்த அழுத்தம்; சர்க்கரை நோய், கதவை தட்ட ஆரம்பித்து விடும்.

எல்லாநோய்களுக்கும் இருப்பதுபோ ல, இதற்கும் பரம்பரை பாதிப்பும் ஒரு காரணம். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் அடுத்த காரணம்.

மூளையில் உள்ள ஒருவித ரசாயன மாற்றம்தான் டிப்ரஷனை அதிகப்படு த்துகிறது.

ஆண்களைவிட, பெண்களிடம்தான் அதிகமாக இந்த பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பரம்பரையில் யாருக்காவது இருந் தால், வாரிசு வழியில் அது தொடர வாய்ப்பு உண்டு. மூன்று தலைமுறை க்கு முன் இப்படி ஒருவருக்கு இருந்தால், இந்த தலைமுறையில் ஒருவருக்கு நேரலாம்.

பெற்றோர், உறவினர் உட்பட நெருங்கி யவர்கள் மரணம், டிப்ரஷனுக்கு கார ணமாகிறது.

சிலமருந்துகளின் பக்க விளைவுகளா லும்கூட இந்த பாதிப்பு வரும்.

கோபம், ஆத்திரம், தோல்வி மனப் பான்மை போன்றவையும் டிப்ரஷ னில் விட்டு விடும்.

துாக்கம்வராது; சோர்வு ஏற்படும்; அடிக்கடி தலைவலி வரும். சிறிய விஷயங்களுக்குகூட அழுகை வரும்; எப்போதும் ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

பசி அறவே இருக்காது; சாப்பிட பிடிக்காது. படிப்பிலும், வேலை யிலும் ஈடுபாடு காட்ட முடியாது; உடலில் ஒருவித வலி இருந்து கொண்டே இருக்கும். டாக்டர் பரிசோதித்து, டிப்ரஷனுக்கு எது முக்கிய காரணமாக உள்ளது என்பதை கண்டுபிடிப்பார்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலு ம் அவர்களால் பரிந்துரை க்கப்படும்  ‘ஆன்டி டிப்ரஷன்’ மாத்தி ரைகள் உள்ளன; அவற்றை சில நாள் சாப்பிட்டு வந்தால், டிப்ரஷன் அள வு கட்டுப்படும். இரண்டு வாரத்தில் குணம் தெரியும்; முதலில், நல்ல துாக்கம் வரும்; மன திடத்தை ஏற்படுத்த உடல், மனது பயிற்சிகள் உள்ளன.

தாழ்வு மனப்பான்மை, கோபம் எல்லாம் பறந்து விடும். கட்டுப்பாட் டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவுஅல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: