தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அற்றிய வீரிய உரைகள் இதோ
தருண் விஜய்க்கு பாராட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது, அவ்விழா நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு . .
சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கத் தில், வெற்றித் தமிழர் பேரவை சார்பி ல் தமிழுக்காக குரல்கொடுத்து வரும் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண் அவர்களுக்கு, பாராட்டுவிழா நடத்த ப் பட்டது.
அவ்விழாவின் அழைப்பதழ் எனக்கும் வந்தது. நானும் சென்றேன். மாலை 5.30 மணிக்கு எல்லாம் விழா நடை பெறும் மியூசிக் அகாடமிக்கு நுழைந் தேன். அங்கே
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வந்தவ ர்களையெல்லாம் புன்முறுவலோடு வ ரவேற்றார்.
விழா சரியாக மாலை 6.30மணிக்கு தொட ங்கியது. விழாவில் முன்னாள் துணை வேந்தர்கள் அவ்வை நடராஜன், க.ப.அற வாணன், க.திருவாசகம், ம.ராஜேந்திரன் ஆ கியோர் பேசினர். விழாவில் மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் அமை ச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், துரை முருகன், தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, நடிகை குஷ்பு, கவிஞர் காசி முத்து மாணி க்கம் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். முன் னதாக வெற்றித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ம.முத் தையா வரவேற்றார்.
இந்த விழாவை தலைமை ஏற்று சிறப்புற நடத்தியவர் சென்னை உயர்நீதிமன்றத் தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்கள். மேலும் அவ்விழாவின் மே டையை அலங்கரித்தவர்க ள் அனைவரும் பேசினார் கள். அங்கு பேசியவர்களி ல் சிலரது பேச்சை இங்கே குறிப்பிடுகிறேன்.
தமிழர் வெற்றிப் பேரவையின் நிறுவனர்-தலைவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் பேசும் போது,
தமிழும் ஆட்சி மொழியாக வே ண்டும்; தமிழ் வழக்காடு மொ ழியாக வேண்டும்; திருக்குறள் தேசியப் பெருமை பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல. இன்று அதைச் சொல்கிற குரல் தான் புதியது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்; இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வர். மாநிலங்களவை உறுப்பினர்; ஆர். எஸ்.எஸ் காரர் என்று அறிய ப்பட்டவர். இந்தக் கோரிக்கைகளை உயர்த்திப் பிடித்துக் குரல் கொ டுக்கிறார் என்பதுதான் தமிழ்நாட் டுக்கு ஆனந்தம்கலந்த ஆச்சரிய ம்.
வடக்கு என்றாலே தமிழை மறுப் பது; இந்தியை ஆதரிப்பது என்ற கருத்து தருண் விஜய் அவர்களா ல் இன்று உடைக்கப்படுகிறது. எல்லாவற்றிலும் விதிவிலக்கு உண்டு. எல்லா ரத்தமும் சிவப்ப ல்ல, வெட்டுக்கிளிக்கு வெள்ளை ரத்தம் என்பதுபோல வடநாட்டார் எல் லாம் தமிழுக்கு விரோதிகள் அல்லர். விதி விலக்காக வாய்த் திருக் கிறார் தருண் விஜய்.
நம்முடைய முன்னோடிகளும், தலைவர்களும் மொழியை ஏன் முன்னிறுத்திப் போராடினார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மொ ழி இருக்கும் நீளம் வரைக்கும் தான் நிலம் நமக்குச் சொந்தம். ஒரு காலத்தில் தமிழ்பேசும் நிலப் பரப்பு குமரி முனைக்குத் தெற்கே 700 மைல் நீண்டிருந்ததாக அடி யார்க்கு நல்லார் தெரிவிக்கிறார். ‘வட வேங்கடம்’ வரைக்கும் நீண் டு கிடந்த தமிழ் நிலம் இன்று வெறும் 50,216 சதுர கிலோமீட்டராகச் சுருங்கி விட்டது. மொழியை இழந்தால் இருக்கும் சின்ன ப் பரப்பையும் இழந்துபோவோம்.
இலங்கையில் இனம் அழிக்கப்பட்டு தமிழ் நாட்டில் மொழியும் நசுக்கப்பட்டால் தமிழர் கள் நிலம்-முகம் இரண்டையும் இழந்து போ வார்கள். அதிகார மையங்களிலும், கல்வி நிலையங்களிலும், ஊடகங் களிலும் தமிழ் நிலை பெற்றால்தான் நாம் இருக்கும் நிலத் தை இழக்காமல் இருப்போம். இந்த தொலை நோக்கு பார்வைக்கு தோள் கொடுக்க வந்தி ருக்கும் தருண் விஜய் அவர்களைத் தமிழ் உலகம் பாராட்டுகிறது. அவரது கோரிக்கை களுக்கு இந்த கூட்டம் கைதட்டிக்கைகொடு க்கிறது. தெற்கே இருந்து வருவது தென்றல், வடக்கே இருந்து வருவது வாடை என்பார்கள். இன்று வடக்கே இரு ந்து தென் றலாய் வந்தவரை வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் ஏற்புரையை விழாவின் நாயகர் திரு. தருண் விஜய் எம்.பி. அவர்கள் வழங்கி, பேசியதாவது:-
(இவர் பேசும் போது பல தமிழ் வார்த் தைகளை உச்சரிக்கும்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களா கிய நமக்கு மெய் சிலிர் த்தது கரவொ ளியால் அரங்கமே அதிரும் அளவிற் கு கேட்டது. இதோ அவரது ஆங்கிலப் பேச்சின் தமிழாக்கம்)
உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தாலும், தமிழ் அன்னையின் மக னாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இலக்கியங்கள், காப்பியங்கள் நிறை ந்த தமிழ் மொழியில் திருக்குறள் ஒரு பொக்கிஷமாகும். திருக்குற ளையும், திருவள்ளுவரையும் தெரியாதவர்கள் இந்தியாவை பற்றி தெரிந்திருக்க முடியாது. உலக அளவில் பெருமைப் படும் தமிழ்மொழி பிறந்த தமிழ்நாட்டி லேயே, தமிழ் மொழி பேச மறுக்கின்றனர்.
குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி யாக இல்லாதது வருத்தமளிக்கிறது. பாமர மக் களுக்கு புரியாத மொழியான ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இமயமலையை விட உயரமான தமிழ்மொழியை நாடு முழுவது ம் எடுத்து செல்வதற்காக, முதல்கட்டமாக வட மாநிலங்களில் 500 இடங்களில் தமிழ்மொழி கற்பிக்கும் மையங்கள் வரும் ஜனவரி மாதத்திற் குள் தொடங்கப்பட உள்ளன. அதுவும் டேராடூனி ல் இருந்து தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.பின் வெற்றித் தமிழர் பேரவையின் மாநகரச் செயலாளர் வி.பி.குமார் நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.