Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திடீரென்று திருமணம் முடிந்தாலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் – நடிகை பத்மபிரியா

திடீரென்று எனது திருமணம் முடிந்தாலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் – நடிகை பத்மபிரியா

பிரிகேடியர் ஜானகிராமன்-விஜ யா  தம்பதிகளின் மகளான பத்ம பிரியா. கடந்த 2003ஆம் ஆண்டில் சீனு வசந்தி லட்சுமி எண்ர தெலு ங்கு படம் மூலம் அறிமுகமாகி, பின் தமிழில்  ‘தவமாய் தவமிருந் து’  படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு  அறிமுகமானவர் 

நடிகை பத்மப்ரியா. அதற்கு பிறகு ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’, ‘இரும்புக் குதிரை முரட்டு சிங்கம்’ மற்றும் ‘தங்க மீன்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித் திருக்கிறார். இறுதியாக ‘பிரம்மன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

தமிழ்ப் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளிலும் நாயகியாக நடித்திரு க்கிறார். ‘மிருகம்’ படத்தில் நடித்ததிற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது பெற்றவர்.  பத்ம பிரியா தனது நீண்ட நாள் காதலரான ஜாஸ்மின் ஷா  என்பவரை மும்பையில் இன்று பத்மப்ரியா திருமணம் செய் துகொண்டார். இதில், இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கல ந்துகொண்டார்கள்.

இருவருமே நியூயார்க் பல்கலைக்கழகத் தில் மாஸ்டர் டிகிரி படித்தபோது அறிமுகமாகி பின்பு காதலர்களாக மாறினார்கள். மணமகன் ஜாஸ் மின் ஐஐடியில் மெக்கா னிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு, அமெரிக்காவில் பொதுநிர்வாகம் பற்றிய படிப்பில் மாஸ்டர் டிகிரி வாங்கி உள்ளார். அமெரிக்காவில் தற் போது ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார் .

த‌னது காதல் கணவரை திருமணம் செய்து கொண்டாலும் அவரது அனுமதியுடன் எங்கள் திருமணத்திற்குப்பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று பத்மபிரியா கூறியுள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: