Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி “முடியாது” என்று ஒருபோதும் சொல்லாதீர்!- வாழ்க்கைக்கான வீரிய விதைகள்

இனி “முடியாது” (I Can’t, Impossible) என்று ஒருபோது ம் சொல்லாதீர்கள்! –  வாழ்க் கைக்கான வீரிய விதைகள்

ஆழ்மனதில் நுணுக்கமான, அறிவுப் பூர்வமான, ஆக்கப் பூர்வமான விஷயங்களை நாம் பதிய வைப்பதில்லை. நல்லதையே நினைத்தி ருந்தால் நல்லதே நடக்கும். நம்பிக்கைதான் ஆணிவேர். தீய எண்ணங்களால்

ஆழ் மனதை நிரப்பினால் தீயவை தான் பிரதிபலனாகக் கிடைக்கும். நீங்கள் என்னவிதைகின்றீர்களோ , அதைத்தான் அறுவடை செய்கிறீ ர்கள். ஆக, கம்ப்யூட்டர் மாதிரி ஆழ் மனதில் பதியும் விஷயங்க ளுக்கேற்ப அதன் பலா, பலன்கள் அமைந்தி ருக்கும்.

யாராவது, ஏதாவது சொன்னால் ‘முடியாது’ என்ற பதி ல் தான் வரும். இது மனிதர்க ளின் இயல்பு. “உன்னால் முடியு ம் தம்பி” என்று நம்புகிறவர்கள் எத்தனை பேர். ‘பிடிக்காது, வரா து, முடியாது’ என்று ஏன் எதிர்மறையான எண்ணங்க ளை வளர்த்துக் கொள்கிறீர்கள்.

எடுத்த எடுப்பிலேயே, முயற்சி ஏதும் செய்யாமலே, இது நம்மால் முடியாது என்று சொல்வீர்களா னால், ஆழ்மனதில் அதன் தாக்கம் உரம்பெற்று, தீயபலனையே தரு ம். இது சிந்திக்கும் திறனைப் பா திக்கிறது. முன்னேற்றத்தைத் தடு க்கிறது. முயற்சி மேற்கொள்ள இடம் தராமல் ‘ஸ்டி ரைக்” செய்கிறது.

முயற்சிசெய்து பார்ப்போம் என்று பிரயத்தனம் மேற் கொள்ளும் போது ஒரு முனை ப்பு ஏற்படுகிறது. முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தருமன் றோ. முயற்சி பலன்தரும் என் ற நம்பிக்கை லேசாக நம் மன தில் துளிர்விட ஆரம்பிக்கிறது . கடைசிவரை முயன்று பார்ப் போம் என்றஉறுதி ஏற்படுகிற து. பலன் கிட்டாவிட்டாலும் மு யற்சியாவது செய்தோமே என்ற மனநிறைவு ஏற்படுகி றது. முயற்சி திருவினையாகும்போது நல்ல பலனும் கிடைக்கிறது.

எண்ணிய எண்ணி யாங் எய்துவர்
எண்ணியர் திண்ணியராகப் பெறின்

என்பது வள்ளுவர் வாக்கு. அந்த எண்ண ம் வலிமையு  டையதாக இருந்தால் அதனால் நிச்சயம் பலன் கிட்டுகிறது. எண்ணும் போதே எதிர் மறையான எண் ணங்களை எண்ணாமல் ஆக்க பூர்வமான தாக பயனுள்ளதாக, வெற்றி தரும் எண்ணங்க ளைத்தான் எண்ண வேண்டும்.

வருகின்ற வாய்ப்பினை தன் இறுகத் தாளிட்டுத் தடுத் து விடுகிறீர்கள். எதையும் செய்யும் துணிவை அது நசு க்கிவிடுகிறது. மேலும்வெற்றி வாய்ப்பினைப் பறித்து விடுகி றது.

மூளையின் சிந்தனைத் திறன் ஆளுமை ஆற்றல், எதையும் சாளிப்போம் என்றதைரியம், ஊக்கம், கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றஎண்ணம் எல்லாம் விரலுக்கு இறை த்த நீராய்ப் பயனற்றுப் போ கின்றன.

செயல்திறன் கதவுகளை மூடாமல் நன்கு திறந்து வை யுங்கள். உங்களுக்குச் சங்க டத்தைத் தரும், ஏமாற்றத் தைத் தரும் நம்பிக்கையைச் சிதைக்கும் எண்ணங்களைக் குப்பை எனத் தூரத் தள் ளுங்கள். வீட்டைக் கூட்டி குப்பையை வெளியே கொ ட்டினால் வீடுசுத்தமாவது போல, மனம் சுத்தமாகு ம், தெளிவாகும். சலன மின்றி இருக்கும். அமை தியான அந்த ஆழ்மனதி ல் நல்ல கனவுகளை நிர ப்புங்கள். இன்பகரமான நினைவுகளை அசைபோடுங் கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பயனுள்ள நல்ல விஷயங்களைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பாருங்கள். அந்த எண்ணம் வலுப்பெற்று ஊக்கமடைந்து, உயிர்ப்புடன் மலர்ச்சி அடையும்போது என்னால் முடியும் என்ற உறுதியான நம்பிக்கை வெளிப்படுவதைக் காணலாம்.

மெழுகுவர்த்தி லேசாக எரிந்து, இருளை அகற்றி, எங்கும் ஒளி வீசுவதுபோல உங்கள் உள்ளத்தில் ஒளி தோன்றுகிறது. வழி பிறக்கி றது, உற்சாகம் பெருகுகிற து. கம்ப்யூட்டர் பட்டனைச் சரியாகத் தட்டினால் நீங்கள் எதைப் பெற விரும்புகி றீர்களோ அது கம்ப்யூட்டர் திரையில் தெரிய ஆரம்பி ப்பது போல, மனத்திரை யில் செயல்திறன் உருவாகி றது.

உங்களுடைய தோல்வி மனப் பான்மை, மனச் சோர்வு, இய லாமை பற்றிய பயம் எல்லாம் விலகுகிறது. உங்கள் வாழ்க் கையில் புதிய அத்தியாயத் தைத் துவங்குகிறீர்கள்.

ஆகவே, இனி “முடியாது” (Impossible) என்று ஒரு போதும் சொல்லாதீர். அச்சொல்லை உங்கள் மன அகராதியிலிருந்து அப்புறப்படுத்தி விடுங் கள். முடியா து என்பது முன்னேற்றத்திற்கான தடைக் கல்லாகும்.

முடியாது என்று ஒன்றுமே இல்லை என்று திரும்பத் திரும்ப நினைவு கூறுங்கள். பிரச்சனை யை எப்படியும் சமாளித்தேயாக வேண் டும். நாம் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளத் தான் வேண்டும். லட்சிய த்தை அடையும் வரை மனம் தளரக் கூடாது என்று உறுதியான சங்கல்பத்தை மேற்கொள்ளுங்கள்.

சரியான முடிவை மேற்கொள்ளும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது. சாத்திய க்கூறுகளைத் தெளிவாக ஆராய்ந்து முடிவு மேற்கொள்வதே எனது லட்சியம். அந்த லட்சியத்தை எப்படியும் அடைந் தே தீருவேன் என்று எண்ணுங்கள்.

நிச்சயம் என்னால் சிகரத்தை எட்ட முடியும். சாதனையாளர்களின் பட்டிய லில் நானும் இடம் பெறுவேன். வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து முயற்சியை மேற்கொள்வேன் என்பதே ஆக்கபூர்வ மான சிந்தனை.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஆக்கப்பூர்வ மான சிந்தனையை வளர்த்துக் கொள்வதுதான். நம்பிக்கை தான் மன உறுதி. ஆழ்மனதில் இவற்றை உர‌மிடுங்கள். பயிர் நன்றாக வளர்ந்து உயரிய மகசூலைத்தரும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

%d bloggers like this: