Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒருத்தரை குறிவைத்து தொடர்ச்சியாக 4 முறை கொடூரமாக தாக்கிய மின்ன‍ல் – அபூர்வ தகவல்

ஒருத்தரை குறிவைத்து தொடர்ச்சியாக 4 முறை கொடூரமாக தாக்கிய மின்ன‍ல் – அபூர்வ தகவல்

மேஜர் சம்மர்ஃ போர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர் பு ஆச்சரியமானது. இவர் தனது வாழ்க்கையில் ஒவ் வொரு முறையும் மின்ன‍லால் தாக்க‍ப்பட்டு, பின் அதிலிருந்து மீண்ட பிறகு மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் இவரைப்பற்றிய அபூர்வ செய்தி இதோ 

அவர் முதல்

உலகப் போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற் கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப் பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். இது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார்.

இறந்தபின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: