Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழ கடை பிடிக்க‍ வேண்டிய முக்கிய விரதம்

பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழ கடை பிடிக்க‍ வேண்டிய முக்கியவிரதம் கார்த்தி கை சோமவாரம்
 
சிவபெருமானைக் குறித்து நோற் கப்படும் விரதங்களுள் சோமவார விரதமும் ஒன்று. சந்திரனுக்குரிய நாளா ன திங்கட் கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. க்ஷய ரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட

சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றான். அவனுக்குச் சிவபெ ருமான் அருள் புரிந்ததுடன், அவ னுடைய ஒரு கலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திர சேகரர் என்ற பெயரையும் பெற் றார். சந்திரனின் நல்வாழ்வுக் காக அவனுடையமனைவி ரோகி ணி அவனுடன் சேர்ந்து இந்த விர தத்தைக் கடைப்பிடித்தாள். அன்றுமுதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் , கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய் நொடிக ள் தாக்காதிருக்கவும் இந்த விரதத்தைக் கடைப்பிடி க்கின் றனர்.
 
சோமவார விரதம் ஆண்டு மு ழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச் சோ ம வாரங்கள் (திங்கட் கிழ மைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன. இந்த நாட்க ளில் சிவாலயங்களில் சங் கா பிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடை பெறும். 108அல்லது 1008 சங்குகளில் நீரை நிர ப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவ பெருமானுக்குத் திருமுழுக்கா ட்டுகின்றனர். கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் ஸ்ரீ சந்திரசேகர மூர்த்திக்கு வெண் மலர்கள் சூட்டி, வெண் பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தியடை வதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: