Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனித மூளை – அறிவியல் அதிசயம் – நூறு ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்க‍ப்பட்ட‍ உண்மை

மனித மூளை – அறிவியல் அதிசயம் – நூறு ஆண்டுக ளுக்கு பின் கண்டுபிடிக்க‍ப்பட்ட‍ உண்மை

மூளை அமைப்பின் முக்கிய சாஸ்திரம்: 100 வருடங்க ளுக்கு பின் வெளிக்கொணர்ந்த நரம்பியல் நிபுணர்    

மூளைக்குள் நரம்பு இழை குவியலாக இருப்பதை ஆரா ய்ச்சியாளரான

ஜேசன்யேட்மென் கண்டுபிடித் துள்ளார்.

வாஷிங்டன் பல்கலைக்கழகத் தை சேர்ந்த ஆராய்ச்சி யாளரான ஜேசன் யேட்மென், கடந்த சில வருடங்களுக்கு முன் ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் பி. எச்.டி பயின்று கொண்டிருக்கும் இதனை கண்டுபிடித்துள் ளார்.

மொழிகளை கண்டறிவதிலும், படிப்பதிலும் மூளையின் அமைப்பு எந்த விதத்தில் பங் களிக்கிறது என்பது குறித்து பயின்று வரும் யேட்மெ ன், மூளைக்குள் நரம்பு இழை குவியலாக உள்ளது முக்கிய மானஒன்று என எண்ணினா ர். ஏனென்றால் அவரும் அவர து சக நண்பர்களும் நரம்பு இழை குவியலாக இருப்பது குறித்து மருத்துவ இலக்கியத் தில் எங்கும் கண்டதில்லை. எனவே அவர்கள் இது புதிய கண்டுபிடிப்பாக இருக்கும் என கருதினர்.

ருத்துவ துறையில் இருக்கும் வேறு சிலரிட ம் இது குறித்து கூறிய போது, அவர்களுக்கு புதி ய தகவல் கிடைத்தது. அவர்கள் கண்டுபிடித்த தாக கூறிய நரம்பு இழை குவியல் பற்றி ஏற்கனவே பழைய மருத்துவ பாடப்பு த்தகத்தில் இடம் பெற்றுள்ளதையும் தெரிந்து கொண்ட னர்.

மூளை பற்றி பழமையான கூற்றுகள் மற்றும் கண்டு பிடிப்புகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், 100 ஆண்டு பழமையான அந்த மருத்துவ புத்தகத்தில் ஆழ மாக தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். அதில் ஜெர்மனியை சேர்ந்த நரம்பியல் நிபுணரான கார் ல் வெர்னிக்கே, நரம்பு இழை குவியல் குறித்து கண்டுபிடி த்ததுடன், அதை 1881 ஆம் ஆண்டில் மூளை பற்றிய த னது வரைபடத் தில் வெர்ட்டி கல் ஆக்சிபிடல் பேசிகுலஸ் (Vertical Occipital Fasciculus) என்று பெயரிட்டுள்ளதை யேட்மென் கண்டுபிடித்தார்.

தான் கண்டுபிடித்ததை நூறு ஆண்டுகளுக்கு முன்பே மற் றொருவர் கண்டுபிடித்து விட் டார் என்று தெரிந்தவுடன் தனது ஆராய்ச்சியை யேட் மென் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மூளையின் அமைப் பு பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முக்கியமான கூற்று, தற்போ தைய மருத்துவ இலக்கியங் களில் ஏன் காணாமல் போன து எனயேட்மென்யோசித்தார் .

பின்னர் இது குறித்து தனது துப்பறியும் பணியை அவர் தொடர்ந்தார். என்ன காரண த்தால் மூளை பற்றிய இந்த சாஸ்திரம் காணாமல் போனது என்று துப்பறிய தொடங்கினா ர். தொடர்ந்து சில வருடங்கள் ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள பழைய மரு த்துவ நூல்களை ஆராய்ந்தார். அப்போது மூளை பற்றி ய வெர்னிக்கேவின் சாஸ்திரம் காணாமல் போனதற் கான அதிசயமான காரணத்தைக் கண்டுபிடித்தார்.

வெர்னிகேவுக்கு வழிகாட்டியாக இருந்த நரம்பியல் நிபுணர் தியோ டர் மெய்னர்ட், தனது கூற்றில் மூளை யில் முன்பக்கமிருந்து பின் பக்கமாக நரம்பியல் பாதை கிடை மட்டமாக செல்லும் என்று கூறியிருந்தார். ஆனால் வெர்னிக்கே கண்டுபிடித்த நரம்பு இழை கூட்ட மானது செங்குத்தாக சென்றது. மெய்ன ர்ட் கூற்றை அப் போது இருந்த மருத்துவ விஞ்ஞானிகள் பொ துவாக நம்பியதால் அதற்கு முரணாக வெர்னிக்கேவின் கண்டுபிடிப்பு இருந்தது. என வே அதை ஏற்றுக்கொள்ள அவ ர்கள் மறுத்துள்ளனர்.

ஆனால், வெர்ட்டிகல் ஆக்சிபிடல் பேசிகுலஸ் (Vertical Occipital Fasciculus) என்ற மூளை யின் அமைப்பு மிக முக்கி யமானது என்று யேட் மேன் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். நண்பரி ன் முகத்தை கண்டறிவதிலு ம், வார்த்தைகளை படித்து அதை மூளையின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதற்கு ம் இந்த அமைப்பு மிகவும் முக்கியம் என்பதையேட்மென் தற்போது உறுதிப்படுத்தியுள் ளார்.

இதன் மூலம் அறிவியல் பூர்வ மான கண்டுபிடிப்பு நூறு ஆண் டுகளுக்கு பின் உண்மைதான் என்று நிரூபணமாகியு ள்ளது.

 இது விதை2விருட்சம்இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: