Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி இணையதளம் மூலம் இ-விசா பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு

இனி இணையதளம் மூலம் இ-விசா பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு

ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளு க்கு இணையம் மூலம் இ-விசா வழங்கும் திட்ட ம் நவம்பர் -27 முதல் அறிமுகப்படுத்தபட உள் ளதாக தெரிய வந்துள் ளது. இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில்

இருப்பதாக மத் திய உள்துறை அமை ச்சர் ராஜ்நாத்சிங் உடன் சுற்றுலா த்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக, ரஷ்யா, பிரேசில் ஜெர்மனி, தாய்லாந் து, உக்ரைன், ஜோர்டான், நார்வே, மொரிஷியஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளதாக வும் பின்னர் அமெரிக்கா உள் ளிட்ட 43 நாடுகளுக்கும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட உ ள்ளதாக தெரியவந்துள்ளது .

நீண்ட கால திட்டம்:

சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக இத்திட்டத்தினை கொண்டு வர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக் கை எழுந்து வந்த சூழலில், இந்த திட்டம் அறிமுக  ப்படுத்தப்பட உள்ளது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக இருக்கும் என இந்திய சுற்றுலா கழக தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்துள் ளார்.

டில்லி, மும்பை, சென் னை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோவா ஆகிய சர்வதேச விமான நிலையங்களிலுமு் இத்திட்டத்தை செயல்படு த்த முழு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 நாட்களில் இ-விசா:

இத்திட்டத்தினால் மேற்கூறிய 43 நாடுகளிலிருநது இந்தியா வரும் பயணிகள், விமான நிலையத்தில், இதற்கான வலைதளத்தில் கட்டணம் செலுத்தி நான் கு நாட்களில் இ-விசாவை பெற்றுக்கொள்ளலாம்.

முன்னதாக, தென் கொரி யா, ஜப்பான், பின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து உ ள்ளிட்ட 13 நாடுகளுக்கு ஆன்லைன் விசா திட்டத்தி னை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த வசதியால் வெளிநாட்டு சுற்றுலாப் பய ணிகளுக்கு நிச்சயம் வரப்பிரசாதமாக இருக்கும். கடந் த ஜனவரி முதல்-நவம்பர் வரை 51.79 லட்சம் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்து சுற் று ப்பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: