Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நைட்ஷிஃப்ட் வேலை பார்ப்ப‍வர்களின் இதயமும், மூளையும் செயலிழக்கும் – அபாய எச்ச‍ரிக்கை

நைட்ஷிஃப்ட் வேலை பார்ப்ப‍வர்களின் இதயமும், மூளையும் செயலிழக்கும் – அபாயம் எச்ச‍ரிக்கை

தற்போதைய நிலைமைப்படி பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் என யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்ற மனபாங்கில் இருக்கின்றனர். அவர்களின்

எண்ணமெல்லாம் சம்பளம் எதுவாக இருந்தாலும் பர வாயில்லை, நாம் வீட்டில் இருந்தால்தான் நமக்கு பிரச்சனை என்றவாறே உள் ளது. இதை சாதகமாகப் பய ன்படுத்திக்கொண்ட பல பெ ரிய நிறுவனங்கள் குறை ந்த சம்பளத்திற்கு இளைஞர்களை வேலைக்கு எடுத்து அவர்களிடம் ஷிஃப்ட் வாரியாக வேலை வாங்குகிறார் கள். இதனால் அவர்களி ன் நிறுவனத்திற்கு போ துமான அளவிற்கு இலா பம் கிடைத்துக்கொண் டே இருக்கும். ஆனால் இப்படி வெவ்வேறு ஷிஃ ப்ட்களில் வேலைபார்ப்ப வர்களுக்குத்தான் பிரச்சனைகள் அதிகம் வரும் வாய்ப் புள்ளது.

நைட்ஷிஃப்ட் பிரச்சனைகள்:

சாதாரண வேலை நேரங்க ளைத் தவிர மற்ற நேரங்களி ல் பார்க்கப்படும் இந்த நைட் ஷிஃப்ட் வேலைகள் 6 ஆண் டுகளுக்கு தொடரும்பட்சத்தில் அவர்களின் மூளை மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் என தற்போது கண்டறிந்துள்ளனர். அத்துட ன் அந்த நிலைமையில் இரு ந்து வெளிவர அவர்களுக்கு 5 ஆண்டுகள் தேவைப்படும் என வும், அந்த 5 ஆண்டுகள் அவர் கள் சாதாரண வேலை நேரங் களில் வேலை செய்யவேண்டும் எனவும் இந்த ஆய்வி ன் முடிவில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் நடத்திய இந்த ஆய்வில் சாதாரண வே லை நேரத்தினைத் தவிர வேலைக்கு செல்லுபவர் கள் பற்றி ஆராயப்பட்டது . அதில் இவ்வாறு வேலை பார்ப்பவர்களின் மூளையின் நினைவுத்திறன், வேகம், அறிவாற்றல் மற்றும் புரி ந்து கொள்ளும்திறன் போ ன்றவை மழுங்கடிக்கப்ப டுவதாக தெரியவந்தது. மேலும் இதில் நைட் ஷிஃ ப்ட் வேலைக்குச் செல்ப வர்களின் மனநிலை மற் றும் பகல்பொழுதில் வேலைக்குச் செல்பவர்களின் மனநிலை ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. அதில் தொடர்ந்து 10 ஆண்டுக ள் நைட்ஷிஃப்ட் வேலை க்குச் சென்றவர்கள், அ டுத்த ஆறு வருடங்கள் கழித்து எந்த நிலைமையில் இருக்க வேண்டுமோ அந் த நிலையில் தற்போதே இருப்பதா கக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதேபோன்ற வேலைகள் தொடரு ம் பட்சத்தில், அவர்களுக்கு இதய ம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறினர்.

சரியான கால அட்டவணைப்படி வேலைக்குச் செல்வது உங்க ளின் உடல்நிலை யினை சரி யாக வைத்திருக்க உதவும். உதாரணமாக ஒருசிலநர்சிங் ஹோம்களில் பார்க்கலாம். அவர்களின் கால அட்டவ ணை மிகவும் சரியாகவும், அனைவருக்கும் உகந்ததாகவும்இருக்கும். எந்தளவிற் கு வேலை கொடுக்கப்படுகிறதோ அந்தளவிற்கு ஓய் வும் அவர்களுக்கு வழங் கப்படும். அதுமட்டுமின் றி அவர்களுக்கான உட ல்நிலை சரிபார்த்தல் சரி யான கால இடைவெளி யில் நடத்தப்படும். இதன் மூலம்அவர்களின் உடலி ல் ஏற்படும் பாதிப்பினை முன்கூட்டியே அறிய முடியும்.

பணத்தினை மட்டுமே இலக்காக கொண்டு வாழ்பவர் கள் ஒருநாளும் அவர்களின் உடல்நிலையினை கவனிக் க மாட்டார்கள். உடல் உழை ப்பு தேவைதான் ஆனால் தேவையில்லாத உடல் உழைப்பு பாதிப்பில்தான் நம்மை நிறுத்தும்.

=>விவேக்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: