சமையல் குறிப்பு – க்ரீன் கபாப் (சைவம்)
சமையல் குறிப்பு – க்ரீன் கபாப் (சைவம்)
நேற்று மட்டன் கபாப் என்ற அசைவ உணவைப் பார்த் தோம். இன்று
க்ரீன் கபாப் என்ற சைவ உணவைப் பார்ப்போமா
தேவையானவை:
கடலைப் பருப்பு – ஒரு கப்
நறுக்கிய கொத்தமல்லி – அரை கப்
புதினா இலை – கால் கப்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
பிரெட் தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி – கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து… கொ த்தமல்லி, புதினா, பச்சைப்பட்டாணி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்விட்டுகெட்டியாக அரைத்துக்கொள்ள வும். அரைத்த விழுதுடன் சீரக த்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், பிரெட் தூள், சோளமாவு, இஞ்சி–பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து நீளமான உருளை வடிவத்தில் உருட்டி, ஐஸ்கிரீம் குச்சியால் குத்தி (இட்லி தட்டில்) ஆவியில் வேக வைக்கவும். 10நிமிடம் கழித்து எடுத்து, தக்காளி சாஸ் அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாற வும்.
இந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்தும் சுவைக்கலாம்.
மேலும் இதனுடன் கூடுதலா ன சிறிதளவு துருவிய பனீர் சேர்த்தால், இதன் சுவை அபா ரமாக இருக்கும்
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!