Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌வர் ஸ்டாரை எச்சரித்த‍ கிரண்பேடி – அதிர்ச்சியில் உறைந்த பவர்ஸ்டார்

ப‌வர் ஸ்டாரை எச்சரித்த‍ கிரண்பேடி – அதிர்ச்சியில் உறைந்த பவர்ஸ்டார்

‘திகார் என்ற பெயரில் திரை ப்படம் ஒன்றை இயக்குகி றார் இயக்குநர் பேரரசு. இத் திரைப்படத்தில் பார்த்திபன், உன்னி முகுந்தன், அகன் ஷாபுரி நடிக்கின்றனர். ஷபீர் இசை அமைக்கிறார்.

இப்படத்தின்

ஆடியோ நேற்று வெளியிடப் பட்டது. திகார் சிறை அதிகா ரியாக இருந்து ஓய்வு பெற்ற கிரண்பேடி ஐபிஎஸ் ஆடியோ வை வெளியிட கப்பல்ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள் ளையின் பேரன் பெற்றுக் கொ ண்டார்.

இந்த விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டு மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டி ருந்த அனுபவத்தை நக்கல், நையாண்டியோடு விவரித் து பேசினார். “ஜெயில்ல இரு ந்த 1200 போலீஸ்காரங்களு ம் எனக்கு ரசிகர் ஆயிட்டாங்க” என அவர் பேசியதை கேட்ட கிரண்பேடி கோபம் அடைந்தார்.

பிறகு கிரண்பேடிபேசும்போது, ‘திகார் சிறையில் நான் கைதி களுக்கு கல்வி போதிச்சேன். இங்க பேசின நடிகர் போலீஸ் காரங்க அவருக்கு ரசிகர்கள் ஆயிட்டதா சொன்னார். திகார் போலீஸ் அப்ப டிபட்டவங்க இல்லை . டாக்டருக்கு படி ச்சதா சொல்ற நடிகர், மத்தவங்களுக் கு டீச்சரா இருக்கணும். சீட்டிங் பண்ண க் கூடாது’ என்று பவர்ஸ்டாருக்கு எச்ச ரிக்கை விடுப்ப‍துபோல் ஆவேசமாக பேசினார், இதைக்கேட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: