அன்புடன் அந்தரங்கம்-30-11-2014-போலீஸ் வேலைப் பார்க்கும் எந்த ஆணும் நிம்மதி யாக வாழவில்லை; அவர்களது குடும்பமும் நிம்மதியாக இல் லை.
அன்புள்ள அம்மாவுக்கு,
என் வயது, 44; மத்திய ஆயுத கா வல்படையில், தலைமை காவ லர் பதவியிலிருந்து, தற்போது
விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். வாழ்க் கையில் சந்தோஷமும், மன நிம்மதியும் இன்றி வாழும் எனக்கு வழிகாட்டுங்கள். 1991ல் பணிக்கு சேர்ந்தேன். 1995ல், திரு மணம் நடந்தது. 1997ல், ஒரு பெண் குழ ந்தையும், 2000ம் ஆண்டில், ஆண் குழந் தையும் பிறந்தது. 2005 முதல், மனைவி
மற்றும் குழந்தைகள், கிறிஸ் துவ மதத்துக்குமாறிவிட்டதா ல், 2008ல் விவாகரத்து வாங் கிவிட்டேன். குழந்தைகள் இர ண்டும், அவள்வசம் உள்ளனர்.
அடுத்து, 2009இல், இரண்டாவ து திருமணம் செய்தேன். என் மனைவிக்கும், இரண்டாவதுதிரு மணம்தான். அவளுக்கு, 12 வய தில், ஒருபெண்இருக்கிறாள். அப் படி இருந்தும் வரதட்சணை, சீர் என எதுவும் வாங்காமல், மிக எளிமையாக கோவிலில் திரும ணம் நடந்தது.
என் மனைவிக்கு, 15 வயதிலேயே சொந்த மாமாவுடன் திருமணம் நடந்து, மனக்கசப்பின் காரணமாக, ஒரு பெ ண் குழந்தையுடன் பிரிந்து விட்டா ள். பின், 2009ல் என்னுடனான திரு மணத்திற்கு பின், நான்தான் அந்த குழந்தையை பத்தாம்வகுப்புவரை , அசாமிலும், தமிழகத்திலும் படிக் க வைத்தேன். நான் வீட்டிற்கு ஒரே மகன். எனக்கு, இரண்டு வீடுகள் மற்றும் காலிமனைக
ள் உள்ளன. என்தந்தையார், கட ந்த ஆண்டு மறைந்துவிட்டதால், தாயார் மட்டுமே உள்ளார். நான் வெளியூரில் வேலையில் இருப் பதால், என் மனைவி கீழ் போர் ஷனிலும், என் தாயார் மாடியிலு ம் இருந்தனர்.
எனக்கு மாமியார் இல்லை; மா மனார் கோவில் அர்ச்சகர். மாதத் திற்கு பத்து நாட்கள் இங்கு வந் து தங்கி, என் மனைவியிடம் ஏதாவது சொல்லிக் கொ டுத்துவிட்டுபோய் விடுவார். நான் விடுமுறையில் வரும்போ து எல்லாம் சண்டைபோடுவாள். மாடியில் இருக்கிற என் தாய், தகப்பனாரை பார்க்கச் சென்றா ல், அதற்கும் பயங்கர சண்டை போடுவாள். எப்போது விடுமு றை முடியும் கிளம்பலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பேன். மாமனார் அடிக்கடி வந்து தங்குவதால், ஒரு முறை சத்தம் போட்டேன்.
தற்போது, 23ஆண்டுகள் செய்த வே லையை விட்டு நிம்மதியாக குடு ம்பத்தோடு இருக்கலாம் என, விரு ப்ப ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்தா ல், தற்போது மனைவி அவள் சொ ந்த ஊரில் அவள் அப்பாவுடன் இருக்கிறாள். நான் கூப்பிட்டாலும் வர மறுக்கிறாள். கணவனை விட, அப்பாதான் முக்கியம் என்று அப்பாவுடனேயே இருக் கிறாள். நான்குழந்தையையும், இவளையும் காணச் செ ல்லும்போது, பேசக்கூடாத வார்த்தைகளை எல்
லாம் பேசி, ஒருநாள்கூட என்னை அங்கு தங்கவிடமாட்டாள். தற் போது, மகளைவிடுதியில் சேர்த் துவிட்டாள்.
அவளும் அதே பள்ளியில்தான் ஆசிரியையாக பணி புரிகிறாள். நான் மாதச் செலவுக்கு வேண்டிய பணத்தை அனுப்பி விடுகிறேன். 23 ஆண்டுகளாக, குடு ம்பத்தை விட்டுப் பிரிந்து இருந்த எனக்கு, இப்போது சேர்ந்து வாழ ஒரு வாய்ப்புக் கிடைத்தும், மனை வி இதுபோன்று இருப்பதால் நிம்ம தி, சந்தோஷமில்லாமல் இருக்கிறே ன். அவள், என்னுடன் சேர்ந்துவாழ, எ
ன்ன வழிஉள்ளது. வயதான என் தாயாரை தனியே விட்டு, மனைவிக்கு அடிமையாக வாழ, எனக்கு மனம் வரவில்லை. என க்கு, இவளை விவாகரத்துசெய்ய மனமில்லை. கடந்த, 2011ல் எங் களுக்கு ஒரு ஆண் மகன் பிறந் தான். அவனையும், என்னிடம் ஒட்டவிட மாட்டேன் என்கிறா
ள். மேலும், காவல் நிலையத்தி லும், நீதி மன்றத்திலும் என்னைப் பற்றி, அவதூறாக புகார் கொடுத்துள்ளா ள். எப்படி இவளுடன் வாழ்வது என்ற மனச் சிதைவுடன் வாழ்ந்து வருகிறேன். நல்லமுறையில், நா ங்கள் வாழ்வத
ற்கு ஒரு வழி கூறுங்கள்.
அவளுக்கு,’வாரமலர்’ படிக்கும் பழக்கம் உள்ளதால்தான் இக்கடிதத்தை எழுதி உள் ளேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்புள்ள சகோதரருக்கு,
திருமணம் செய்து மனைவி, குழ ந்தைகளுடன் சேர்ந்து வாழாமல், 23 ஆண்டுகள் வெளிமாநிலத்தில் வேலை பார்த்துள்ளீர்கள். தூரத் தேசத்து விருந்தாளிபோல, ஆண் டிற்கு ஒருமுறை வந்து போகும் கணவனின்மீது, மனைவிக்குபாச பிணைப்பு எப்படி வரும்? அதனா லேயே, உங்களது இரு திருமணங்களும், நீங்கள் எதி ர்பார்த்த சந்தோஷத்தை உங்களுக்கு தரவில்லை. ஒவ் வொரு பணியும், ஒவ்வொரு விதமான தொழில் துயர த்தை பரிசளிக்கும்.
எனக்குத் தெரிந்து, போலீஸ் வேலைப் பார்க்கும் எந்த ஆணும் நிம்மதியாகவாழவில் லை; அவர்களது குடும்பமும் நிம்மதியாகஇல்லை. மந்திரித் து வைத்த முட்டை போன்றது, போலீஸ் பணி. தினமும், பனி ரெண்டுமணி நேரவேலை விடு முறை அடிக்கடி கிடைக்காது, குற்றவாளிகளை, கை யாண்டு கையாண்டு மனமும், உதடுகளும் இரும்பு
போல் இறுகிப்போகும். பணி யில் இருக்கும் போது காட்டும் முரட்டு முகமே வீட்டிலும் தொடரும்.
உங்களது முதல் மனைவி, கணவன் இல்லாததனிமையி ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்; மனஆறுதல் தேடியிருக்கி றார்.அனேகமாக, அவளது தோ ழிமூலம், அவருக்கு கிறிஸ்தவ மதம் அறிமுகமாயிருக்கலாம். முதல்மனை விக்கும், உங்களுக் கும்நடந்த விவாகரத்திற்கு, மு ழு க் காரணம், உங்களது பணி தான்.
உங்களது இரண்டாவது மனைவி, விஷயத்துக்கு வரு வோம். உங்களுக்கு இருக்கு ம் சொத்துகள்மீது, அவருக்கு பெரியதாய் விருப்பம் இல்லை. நீங்கள் மாதாமாதம், குடும்பச் செலவிற்கு அனுப்பும் பணத்தி ன்மீதும் ஈடுபாடில்லை. தனி மை, அவரைவாட்டி வதைத்தி ருக்கிறது.
பசிக்கு கிடைக்காத உணவு, அகால வேளையில் கிடை த்து என்ன பயன்? அந்த வெ றுமையில் தான், உங்களது மனைவி உங்களை வெறுத் து ஒதுக்கி, பெற்றோர் வீட்டி ல் தஞ்சம் புகுந்திருக்கிறார்.
சகோதரரே… எந்த தாய், தந் தையும் தங்கள் குழந்தையின் வாழ்க்கையை கெடுக்க நினைக்க மாட்டார்கள். வயதான உங்கள் மாமனார், தன் மகளிடம் இருக்கலா ம் என வந்து தங்கினால் என் ன? அவருக்குத்தான் வேறு யார் உள்ளார்? உங் களுக்கு உங்கள் தாயார் மேல் எத்தனை கரிசனம் உள்ளதோ அதே அளவு, உங்கள் மனைவிக்கும் அவர் தந்தைமேல் கரிசனம் இருக்காதா? பெற்ற பாசம் என்பது ஆண் பிள்ளைகளு
க்குத் தான் இருக்க வேண்டு மா? பெண்ணாய்பிறந்து ஒரு வனை மணந்து விட்டால், அவள் பெற்றோர்மேல்உள்ள பாசத்தையுமா துடைத்து எறிய வேண்டும்?
திருமண பந்தத்தில், ஆண், பெண் இருவருமே பரஸ்பரம் இரு பக்கத்து உறவினர்க ளிடமும் வேறுபாடு காட்டாத அன்பைச் செலுத்த வே ண்டும். அப்போதுதான், அ வர்கள் இல்லறமும், ஆத் மார்த்தமான மகிழ்ச்சியுட ன் இருக்கும். உங்கள் மா மனார் மேல் உங்களுக்கு ஏற்படும் கசப்புணர்வே, உங்கள் மேல் எதிரொலிக் கிறது. அதைத் தவிருங்கள்.
உங்களது வெளியூர் பணி, உங்கள் மனைவியை ஒரு விதமாய் பாதித்திருக்கிறது என்றால், உங்களது நெரு ப்பு தோய்ந்த அதிகாரத் தோரணை வார்த்தைகள் வே றுவிதமாய் பாதித்திருக்கின்றன. ஒரு மானுக்கும், ஒரு சிங்கத்திற்கும் திருமணம் நடந்திருக்கிறது. சிங்கத்தி ன் சுபாவமும், கர்ஜனையும் மானை மிரளவே வைக்கு ம். மானை அனிச்சையாக குலை நடுங்க வைக்கிறோ மே என்று சிங்கத்திற்கு புரியாது. உங்களது கர்ஜனைகளால் தான், காவல் நிலையத்திலும், நீதிமன்றத்தி லும் புகார் செய்திருக்கிறார் உங்கள் மனைவி.
வாரமலர் இதழ் படிக்கும் பழக்கமுள்ள உங்கள் மனை விக்கு சில வார்த்தைகள்:
என் அன்புக்குரிய குட்டிய ம்மா… கொதித்து எழுந்தது போதும், அமைதி பெறு. உன் கணவர் தான் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, உன்னுடனேயே இருக்க ஓடி வந்து விட்டாரே… இன் னும், ஏன் அவரை தண்டி க்கிறா ய்? திருமணமான பெண்ணுக்கு, கணவன் வீடுதான் சாசுவதம். தந்தை வீட்டில் தவமிருந்தது போ தும். அவரை, உனக்குஇணக்கமாக்கு. உன்மாமியா
ரை கூடுதல் சுமையாக பாவிக் காதே; அவரது இருப்பை அங்கீகரி. நீஒரு ஆசிரியை; பொறுப்பில்லாத ஒரு முர ட்டு மாணவனை திருத்து வதுபோல, கணவனை உன் கட்சிக்கு மாற்று. நாளை உன் மகள் படித்து, வேலை க்கு போய் திருமணத்திற்கு தயாராவாள். அப்போது,
உன் கணவனின் பங்களிப்பு மிக அவசியம்.
ஒருவரை கடுமையாக தண்டி க்க ஒரே வழி, அவரை மன்னி ப்பதுதான். உன் போலீஸ் கண வனை மன்னித்து ஏற்றுக் கொள். மீதி வாழ்நாளாவது அர்த்தபூர்வமாய் கழியட்டும். வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்