Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எனக்கு எடை கூடிடுச்சு, எப்ப‍டி குறைக்கிறதுன்னு தெரியல என்று புலம்புவர்களுக்காக

எனக்கு எடை கூடிடுச்சு, எப்ப‍டி குறைக்கிறதுன்னு தெரியல என்று புலம்புவர்களுக்காக

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

ஒருகாலத்தில்போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப் படியான உணவால் அல்ல து உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதி ப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. ‘எனக்கு எடை கூடிடுச்சு…  எப்படிக் குறைக்கிறதுன்னு தெரியலை’ என்று

பலரும் கவலையோடு பே சுவதைக்கேட்க முடிகிறது. உடல் எடையைக் குறை க்க வேண்டும் என்று சில நாட்கள் தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர் கள், பின்னர் அதற்கும் சே ர்த்து கூடுதலாக சாப்பிடு வது தான் நடக்கிறது.

‘ஜிம்’மில் பணம் கட்டி சிலநாட்கள் ஆர் வமாக உடற்பயிற்சி அல்லது ஜாகிங் என்று இருப்பவர்கள் அடுத்து அதை மற ந்தே விடுகிறார்கள்.

சிலரோ விளம்பரங்களை நம்பி, ‘கஷ்ட மில்லாமல்’ உடலைக் குறைக்க எண் ணி, மருந்து, மாத்திரைகள் என்று நாடு கிறார்கள். ஆனால், செயற்கைமருந்து ப் பொருட்களின்றி, இயற்கையான, ஆ ரோக்கியமான உணவுகளின் மூலமே உடல்எடயை கு றைக்க முடியும். அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் சில பழங்களைப்பற்றிய விவரங்க ள் இவை…

தர்பூசணி :

தர்பூசணி பலருக்கும்பிடித்த பழம். கு றிப்பாக, பயண வேளைகளின் போது தாகம் தணிக்க இது மிகவும் உதவுகிறது. தர்பூசணியி ல் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண் டால் உடல்வறட்சி அடையாம ல் இருப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இத னால் உடல் எடையை அதிகரிக் காது.

பப்பாளி :

இதில் கொழுப்பு, கலோரிகள் மிகவும்குறைவாக இரு ப்பதால், உணவுக்கட்டுப்பாட்டின் போது பப்பாளியைச்சேர்த்துக்கொண் டால், உடல் எடை குறைவதுடன், வயிற்றுப் பிரச்சினைகளும் தீரும்.

லிச்சி :

நார்ச்சத்து அதிகம் கொண்ட லிச்சி, மிகவும் இன் சுவையான பழம். இந்த ப் பழமும் உடல் எடையைக் குறைக் க உதவியாக இருக்கும்.

பிளம்ஸ் :

பிளம்சில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடுகிறது.மேலும் உடலில் தங்கியுள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றிவிடும்.

மாம்பழம் :

பலரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தி ல் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ள ன. உடல் எடையைக் குறைக்க விரும் பும் நபர்களுக்கு உகந்த பழம் இது.

=> ராகவேந்தர்

Leave a Reply