Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நான் கடவுளைக் கொன்றுவிட திட்டமிட்டிருக்கிறேன்

நான் கடவுளைக் கொன்றுவிட  திட்டமிட்டிருக்கிறேன்

நான் கடவுளைக் கொ

ன்றுவிட  திட்டமிட்டிருக்கிறேன்

ஆம்
இன்றைக்கு எப்படியாவது
கடவுளைக் கொன்றுவிட
திட்டமிட்டிருக்கிறேன்
இனியும் பொறுமையில்லை
முழுமையாக உதிர்ந்து விட்டன
சகிப்புத்தன்மையின் செதில்கள்
வந்துவிட்டார் கடவுள்
எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது
பின்புறமிருந்து முகத்தில்
துணியைப் போர்த்தி
வசமான பிடியுடன் இறுக்குகிறேன்
திமிறிக் களைத்து தோற்று
உடல் தளர்ந்து பிரிகிறது
கடவுளின் உயிர்
குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில்
வழியும் இரத்தத்தை சுவைத்தபடி
தொலைவில் வந்து பார்க்கிறேன்
தகன மேடையில் யாரோ
கிடத்திக் கொண்டிருக்கிறார்கள்
எனது உடலை.

=> ஆண்டனி ராஜ்குமார்

Leave a Reply