Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்குறி பற்றிய ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ண‍ங்கள் – இது ஆண்களுக்கான அலசல்

ஆண்குறி பற்றி ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ண‍ங்கள் – இது ஆண்களுக்கான அலசல்

ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ண‍ங்களும் சிந்தனைகளும் ஆண்களிடம் பல்கிப் பெருகியுள்ள‍ன• அவை என்னென்ன என்பதை இந்த

ஆண்களுக்கான அலசல் என்ற பகுதியில் காண்போம்.

ஆண்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளில் 90%  ஆண்குறி சார்ந்தவையாக இருக் கின்றன என்கிறார்.

1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.

2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டுவிந்து 40–100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.

6. சுய இன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.

7.இரவில் உறங்கும்போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.

8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.

9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.

10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.

11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்தி ற்கு கொண்டுபோய் விடுவான்.

12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.

என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீ ர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.

விளக்கங்கள்


1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில் லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத் தினை அடைந்துவிடும்.

2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணு றுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.

3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரச்சனை. பெரு ம்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன் றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
5. ஒருமுறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உட ல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.

6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகா து. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)

7. இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு சுய இன்பம் செய்து வெளியேற்றாவிட்டால், உங்கள் வீட்டில்மோட் டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணீர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவ று என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கை யே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.
8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.

9. இப்படியெல்லாம் கதைகள்தான் சொல்லமுடியும். உண்மையில் நடக்காத காரியம் இது.
10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.

11.சித்திரமும்கைப்பழக்கம் என்றுசொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தணியலாம் என்கிறார் மாத்ரூ.
12.திருமணத்திற்குமுன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய் தாலும் போய்விடும் அல்லவா.

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.

=.மரு. செம்மலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: