Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாயை மூடிப் பேசுங்கள் – (தலைவர்களே உங்கள் திருவாயை கொஞ்சம் மூடுங்கள்)

வாயை மூடிப் பேசுங்கள்

–  தலைவர்களே உங்கள் திருவாயை கொஞ்சம் மூடுங்கள்

டிசம்பர் 2014 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

.

பேசிப் பிரச்சனைகளைக் கிளப்பிவிடுகிற இன்றைய அரசியல் தலைவர்களைவிட, பேசாமலே ஆட்சியிலி ருந்த மன்மோகன்சிங் பாராட்டுக்குரியவர் என்று ஏகோ பித்துச் சொல்லுமளவிற்கு இன்றைய

சில அரசியல் தலைவர்களின் பேச்சு விமர்சனத்திற்கு ள்ளாகியிருக்கிறது.

சுவும் அல்லாவும் இராமரின் பிள் ளைகள் என்ற புதிய கண்டுபிடிப் பை அறிவித்து அதிரவைத்திருக்கி றார் ஒரு மத்திய அமைச்சர். முன் னாள் பிரதமரின் நினைவு நாளில் சீக்கியரின் குரு பிறந்திருக்கிறார் என்று பஞ்சாபியருக்கு கொம்பு சீவி விட்டிரு க்கிறார் மற்றொருவர்

ஜ‌னநாயக சிற்பி நேருவின் பிறந்த நாளைக் கூட கட்சி விழாவாக மாற்றிய பெருமை காங்கிரஸ்க்கு உண்டென்றா ல், புரட்சிகரமான பிரதமராக விளங்கிய இந்திராவின் நினைவிடத்திற்குச் செல் லாமல் புறக்கணித்து, தனது காழ்ப்புண ர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறது பார திய ஜனதா கட்சி

காமராஜர் பெயரைச்சொல்லி காலம் தள்ள‍முடியாது என்கிறார் ஒருஇளைஞ ர். மூப்ப‍னார் என்ன‍ தியாகியா ? என்று முண்டு தட்டுகிறார் பெரியாரின் வழி வந்தவர்.

மைனாரிட்டி அரசு என்று அதிமுக விம ர்ச்சித்த‍தும் தவறு… பினாமி அரசு என்று திமுக கொச்சைப்படுத்துவதும் தவறு, பிரத மரை விமர்சனம் செய்கிறார் ஒரு தலைவ ர்.. அந்த தலைவரைப் பார்த்து, நீ ஒழுங்காக ஊர் போய் சேரமுடியாது என்று மிரட்டுகி றார் மற்றொருவர்.

ஒவ்வொருநாளும் எதையாவ து உளறி, ஏடாகூடமாக மாட்டி க்கொள்ளும் பீகார் மாநில முத ல்வரின் வாயைமூடுவது எப்ப‍டி என்று எவரேனும் கண்டுபிடித் தேயாகவேண்டியது கட்டாயம்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனாவும் பா.ஜ•கவும் போடுகி ற அறிக்கைச் சண்டை நம்மூர் குழாயடிச் சண்டையை விடக் கேவலம். நாடாளுமன்றம்..சட் ட‍மன்றம். மாநகராட்சி. கிராம ப் பஞ்சாயத்து என எல்லா நி லைகளிலும் நம்மால் தேர்ந் தெடுக்க‍ப்பட்ட‍வர்கள் அடிக்கிறக் கூத்து அநாகரீகத்தி ன் உச்ச‍க்கட்ட‍ம்.

மறைந்துபோன தலைவர்களை விமர்சி ப்ப‍து அநாகரீகம் – என்ற அடிப்படை அரசியல் அரிச்சுவடிக் கூடத்தெரியாத வர்களை தலைவர்களாகப் பெற்றிருப்ப‍ து இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டு ள்ள‍ அவமானம் என்று தான் சொல்ல‍ வேண்டும்.

வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் காமராஜரும் அண்ணாவும், பெரி யாரும், இராஜாஜியும் பொது இ டங்களில் பொதுவாழ்க்கையில் காட்டிய அன்பும் நட்பும் இன்றுள் ள தலைவர்களுக்கிடையே வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை நினைக்கை யில் வருத்த‍மே.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று பாடிய பாரதியும், நாகாக்க என்று வலியுறுத்திய வள்ளுவரும் அகிம்சையை ஆயுதமாய் ஏந்திய அண்ண‍ல் காந்தி யடிகளும் பிறந்த ஞானபூமி, அரசியல் சாக்கடையால் முடை நாற்ற‍ம் வீசாமலிருக்க•..

அய்யா, தலைவர்களே உங்கள் திரு வாயை கொஞ்சம் மூடுங்கள் என்பதே உரத்த சிந்தனையுள்ள‍ ஒவ்வொரு குடிமகனின் உடனடி கோரிக்கை!

//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\///\\\

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)

தொடர்புக்கு கைபேசி 94440 11105

//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\///\\\

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: