Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்-7:12:14-உன் காதலனுக்கு, உன் உடல் தான் முக்கியம்

அன்புடன் அந்தரங்கம்-7-12-14 உன் காதலனுக்கு, உன் உடல் தான் முக்கியம்

அன்புள்ள அம்மா,

நான் தனியார் பள்ளியில் பணி புரியும், பட்டதாரி ஆசிரியை. திருமணமாகி, ஆறே மாதத்தில் விவா கரத்து பெற்றவள். என் பள்ளியில் பணிபுரியும் திருமணமாகாத ஆசிரியர் ஒருவரின் குணநலன்களா ல் ஈர்க்கப்பட்டு, அவரை காதலிக்க

ஆரம்பித்தேன். அவர், என்னைவிட 3வயது இளையவ ர். எனக் காகவும், என் குடும்பத்துக்காகவும் நிறைய பணம் செலவழித்துள்ளார். கடந்த, 9 ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வருகிறோம்; பலமுறை உறவும் வைத்துள்ளோம்.

இந்நிலையில், அவர் வீட்டில், அவருக்கு திருமண ஏற் பாடு செய்ய ஆரம்பித்தனர். அதனால், அவர், என் வீட்டி ற்கு வந்து, என்னை பெண்கேட்டார். கூடவே, 30சவரன் நகை போட வேண்டும் என்றும் கூறினார்.

என் தந்தையோ, வேலைவெட்டிக்கு போகாத, மதுவுக் கு அடிமையானவர். அம்மா, சத்துணவு கூடத்தில், குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார். இரண்டு தங்கைகளும் உள்ளனர். என் குடும்பத்துக்கு என் சம்ப ளம்தான் பெரிய ஆதரவு. நிலைமை இப்படியிருக்க, என் வீட்டில் இத்திருமணத்துக்கு எந்த முயற்சியும் எடு க்கவில்லை.

என் காதலர், அவரது வீட்டில் எங்கள் விஷயத்தை கூறியுள்ளார். வயது மற்றும் ஜாதியை காரணம் சொ ல்லி, திருமணத்துக்கு மறுத்து, வேறு பெண்ணைப் பார்த்து, திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

தற்சமயம், என் பெற்றோர், எனக்கு மாப்பிள்ளை பார்த் து, நிச்சயம் செய்துள்ளனர். என் காதலரோ, நாங்கள் நெருக்கமாக இருந்ததை எல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளார். எனக்கு திருமணம் நிச்சயமானதைக் கூறி, அந்த வீடியோ பதிவை திருப்பிக் கேட்டேன். ஆனால், அவரோ, ‘என்னால், உன் வாழ்வில் எந்த பிரச் சனையும் வராது; நம் காதலின் நினைவாக இருப்பது இதுமட்டும்தான்…’ என்று கூறி, அதை கொடுக்க மறுக் கிறார். வற்புறுத்தி கேட்டபோது, ‘உன் பெற்றோரால் தான் நாம் ஒன்று சேர முடியவில்லை; அதனால், தற் போது என் திருமண வாழ்வும் சந்தோஷமாக இல்லை. இப்போது, உன்னுடன் பேசவும் தடை விதிக்கின்றனர். நீயும், உன் குடும்பமும்தான் என் தற்கொலைக்கு கார ணம் என்று எழுதி வைத்து செத்து விடுவேன்…’ என்று மிரட்டுகிறார்.

அம்மா, இப்போது நான் என்ன செய்வது? திருமணம் செய்து கொள்வதா, திருமணத்திற்கு பிறகு அந்த வீடி யோவை காட்டி, என்னை, ‘பிளாக் மெயில்’ செய்தால் என்ன செய்வது? தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருக்கிறது. எனக்கு நல்வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

— இப்படிக்கு கண்ணீருடன்
உங்கள் மகள்.

விரக்தியின் விளம்பில் நிற்கும் மகளுக்கு,

விவாகரத்தான நீ, 9 ஆண்டுகளாக உன்னைவிட 3  வயது இளையவரை காதலித்து வருகிறாய். உன்னை திருமணம் செய்துகொள்ள, உன் வீட்டாரிடம் உன் காத லன், 30சவரன் நகைகேட்டது கொடுமை. இதற்கு, நீயும் கூட்டுக்கையாக இருந்திருக்கிறாய். உங்களது திரும ணத்திற்கு சம்மதிக்கும் மனநிலையில்உள்ள பெற்றோ ரை, உங்களுக்கு எதிராக நிலைநிறுத்தி உள்ளீர்கள்.

உன்னை காதலிக்கும் போது நீ விவாகரத்து ஆனவள், மூன்று வயது மூத்தவள், வேறு ஜாதியை சேர்ந்தவள் என்பதெல்லாம் உன் காதலனுக்கு தெரியாதா? உன் னை திருமணம் செய்ய, உண்மையில் உன் காதலன் விரும்பியிருந்தால், தன் வீட்டை எதிர்த்து, உன்னை பதிவு திருமணம் செய்திருப்பானே… ஏன் செய்யவில் லை கண்ணம்மா?

உன் காதலனுக்கு, உன் உடல் தான் முக்கியம்; அவனு டைய சுயநலத்திற்கு, அவன் திருமணம் செய்து கொள் வான். ஆனால், நீயோ மறுமணம் புரிந்து கொள்ளாது, அவன் கேட்கும் போதெல்லாம் அவனுக்கு உடல் சுகம் அளிக்க வேண்டும் என நினைக்கிறான். வக்கிர புத்தி கொண்ட அந்த சதிகாரன், உங்களின் ஒன்பது ஆண்டு நெருக்கமான உறவுகளை வீடியோ எடுத்து, உனக்கு எதிராக பயன்படுத்த காத்திருக்கிறான்.

உன் பெற்றோரால் தான் உங்கள் திருமணம் நடக்கவி ல்லை. அதனால், தற்கொலை செய்து கொள்ளப் போவ தாக மிரட்டுவது, எமோஷனல் பிளாக்மெயில். உன் மறுமணத்திற்கு பின், உன்னிடம் வீடியோவை காட்டி காட்டி, மிரட்டி, உறவு வைத்துக்கொள்வான். அதனால், முன்னெச்சரிக்கையாக செயல்படு.

அவன் அந்த வீடியோ பதிவை கொடுக்காவிட்டால், உங்கள் இருவருக்குமான உறவை, அவனது மனைவி யிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டு. அதற்கும் அவ ன் மசியாவிட்டால், காவல்துறையில் புகார் செய்வே ன் எனக்கூறு. ஒத்துவராவிட்டால், மெய்யாலுமே அவன்மீது புகார்செய். காவல்துறையில் உன் அடையா ளத்தை வெளிப்படுத்தாமல் விசாரிக்க வேண்டு. உன் காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, வீடியோ பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப் படும் வரை, மறுமணத்திற்கு அவசரப்படாதே.

‘கர்மம் செய்யாமல் விடுவதைக்காட்டிலும், கர்மம் செய்வதுமேல்’ என்றும், ‘பரமாத்மாவை அடைந்து விட்ட ஞானிக்கு, பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத் தும், தூங்கி எழுந்தவன், கனவில் கண்டது போலாகி விடும். அதானாலேயே, அவனுக்கு உலகியல் பொருள் எதிலும் சிறிதும் விருப்பம் இருக்காது…’ என்று கூறுகி றது பகவத் கீதை. அதனால், தற்கொலை எண்ணத்தை கை விட்டு, ஆசிரியை பணியை முழுமையாக செய்து பரமாத்மாவை அடைந்து விட்ட ஞானியின் மனநிலை பெறு.

உடல் சுகத்தை தாண்டி, உலக வாழ்வில், ஆழமான அர்த்தம் நிறைந்த ஒரு வாழ்வும் இருக்கிறது. திருமண உறவிலும், உடல்களுக்கு அப்பால், மனங்களின் சங்க மமே உன்னதமாக போற்றப்படுகிறது. உன் மறுமணம் குறுகிய நோக்கங்களுக்குள் சிக்கி விடாமல், பெரிய வெற்றி அடையவேண்டும். உனக்கு பொருத்தமாய் துணை கிடைக்கும்வரை, ஒற்றைக்கால் கொக்கு போ ல காத்திரு. உன் கடந்த காலம் தெரிந்து, உன்னை ஏற்றுக் கொள்கிறவன் கிடைத்தால் உத்தமம். திருமண த்திற்கு பின் குழந்தைகளை பெற்று தாய்மையை அனு பவி. உன் ஒன்பது ஆண்டு பாவங்களுக்கு பிராயச்சித் தமாக முதியோர் இல்லம் மற்றும் அனாதை இல்லங்க ளுக்கு தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள். பெற் றோரை குறை கூறாமல் அன்பாய், ஆதரவாய் பராமரி. உன் வெற்றிகரமான மறுமணத்திற்கு வாழ்த்துகள்.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

One Comment

  • Shajeer

    நல்ல கற்பனை திறமை இருக்கு இந்த “தினமலம்” ஆசிரியருக்கு.. எப்படித்தான் யோசிப்பீங்களோ ? இப்படி கிளுகிளுப்பான கட்டுக்கதைகளை..

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: