Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்க தோல்விகளைத் தோள்களில் தாங்கியவரா? (தோல்வி அடைந்தவரா?) – இதோ உங்களுக்காக . . .

நீங்க தோல்விகளைத் தோள்களில் தாங்கியவரா? (தோல்வி அடைந்தவரா?) – இதோ உங்களுக்காக . . .

வெற்றி என்பது நம் தனிப்பட்ட இலக்குகளாலும், நடவ டிக்கைகளாலும் தீர்மானிக்கப்படுவதேயன்றி நம்மை

மற்றவருடன்  ஒப்பிடுவதும், நமது வெற்றி எது என மற்றவர் நினைப்பதும் வெற்றியை தீர் மானிக்காது. நீங்கள் யாரை எல்லாம் வெற்றி அடைந்தவர் கள் என் று நினைக்கிறீர்களோ அவர்களிடம் என்ன ஒற்றுமை காண்கிறீர்கள்? நீங்கள் கடந்து வந்த வெற்றியை அடைய என்னென்ன செய்தீர்கள்?

தொழிலின் வெற்றி என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும்குறிக்கோள்களை சார்ந்த து. விற்பனையைபெருக்குதல், தொட ர் வணிகம்செய்தல், தொழிலை மேம் படுத்துதல், கனவைநோக்கி முன்னே றுதல், சக ஊழியருடன் நட்புறவை மேம்படுத்துதல் அல்லது கடினமான பொருளாதார சூழலை சமாளித்தல் என இவை எல்லாவற்றிலும் நாம் எடுத்து வைக்கும் சிறிய, அளவான, சீரான படி கள் மூலம்தான் வெற்றியை பார்க்க முடியுமே தவிர ஒரே முயற்சியில் அல்ல ..

“தோல்வி என்பது ஒரேநா ளில் ஏற்படும் பேரழிவு அல்ல. நாம் தினமும் எடுக்கும் முடிவுகளில் உள்ள சிறு பிழைகளே”.
===>  ஜிம் ரான்

வெற்றி நம்மை சில குறிப்புகள் மற் றும் முன்னறிவிப்புகள் மூலம் வழி நடத்துகிறது. வெற்றியும் தோல்வி யும் ஒரே இரவில் அடையப்பெறுவ தில்லை. நாம் எடுத்த முடிவுகளும், செயல்பாடுகளுமே எதிர்பார்த்த வெற்றியை அடையாததற்கான காரணம். நெறிபடுத் தப்பட்ட விதிமுறைகளே வெற்றியின் பாதையை வகு க்கின்றன. அந்த விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் தவறான விளைவுகளை காணும்போது நமது தவறுகளை கண்டறிந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்டீபன்கிங், ஓப்ரா, தாமஸ் எடிச ன் போன்ற வெற்றி யாளர்கள் ஆரம்பத்தில் ஏற்பட்ட தடைகளைக்கண்டு தளரவில் லை. அவர்களின் வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கையும், குறிக்கோளை நோக்கிய பய ணமும் ஆகும். அவர்கள் நீண் ட வெற்றிகரமான பயணத்தை விரும்பியதால், தங்களுக்கெ ன ஒரு பாதையையும், கடின உழைப்பையும் மேற் கொண்டு அதில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினர். அவர்களைப் போன்றோர் இன்னமும் உழைக்கின்றனர். ஏனெனில், தங்களை புதுப்பி த்துக்கொண்டே இருப்பவர்க ள்தான் வெற்றியாளர் ஆகிறா ர்கள்.

மனிதர்களின் தோல்விக்கான 7 காரணங்கள்:

அடிக்கடி தோல்வியை சந்திப்பவ ர்கள் கீழ்க்கண்ட ஒருவராக இரு ப்பார்கள்..

1.தொழிலில் சம்மந்தமில்லாதவ ர்களாக மாறி விடுபவர்கள்

நீங்கள் தொழிலில் தொடர்புடை யவர்களாக கருதப்படுகிறீர்க ளா என்பது இந்த 21ம் நூற்றா ண்டின் வளர்ந்து வரும் தொழி ல்நுட்பம், நுகர்வோரின் மாறி வரும் தேவைகள் மற்றும் சமூக ஊடகங்களின் செயல் பாடுகள் இவைகளுக்கேற்றார் போல் எந்த அளவுக்கு உங்களை மேம்படுத்திக் கொண் டீர்கள் என்பதை பொறுத்ததாகு ம். நீங்கள்சொந்த தொழில் செ ய்பவரோ, பிறருக்காக வேலை செய்பவரோ யாராக இருப்பினு ம் இன்றைய கால கட்டதிற்கு ஏற்றார்போல் கருத்து பரிமாற் றத்திற்கான நவீன வழிகள் மற் றும் எல்லாவிதத்திலும் மேம்பட்ட யுக்திகளைக் கை யாளும் தொழில் முனைவோர் மனப்பாங்கு போன்ற வையே வெற்றியைத் தேடித்தரும்.

2.மாற்றத்தை விரும்பாதவர்கள் அல்லது மாற்றம் மேற்கொள்ள தாமதிப்பவர்கள்

புதுமையையும் மாற்றங்களையும் உங்கள் வாழ்க்கையோடு இயைந் ததாக பழக்கிக் கொள்ளுங்கள். இவை இனியும் 5 வரு டத்திற்கொரு முறை செயல் படுத்த வேண்டிய காரியங்க ள் அல்ல. புதுமைகளும் மாற்றங்களும் தினசரி நிகழ்வுகள். மாற்றம் என்பது வளர்ச்சிக்கான பாதை. பழ மைவாதியாக இல்லாமல் செயல்வீரர்களாக இருங்க ள்.

3.தவறான அடிப்படை கொ ள்கை உடையவர்கள்

நேர்மறை மனநிலையே ஒருவருக்கு தனி அடையாள த்தை உருவாக்கும். இந்த நேர்மறை எண்ணங்களை விட சக்திவாய்ந்த மாற்றம் உண் டாக்கும் ஆயுதம்வேறொன்று மே இல்லை. உங்கள் பாதையை மறிக்கும் தவறான கொள்கைக ளையும் எதிர்மறை எண்ணங்க ளையும் விட்டொழியுங்கள். நேர்மறை சிந்தனைகளாலும் சிறந்த செ யல்களாலும் அவற்றை மாற்றுங்கள். இது கவர்ச்சிகர மான விளைவுகளை ஏற்படுத்தும்.

4.போதியதிறன் இல்லாதவர் கள்

உங்கள் திறமை, தகுதி மற்று ம் அதற்கான சான்றிதழ் படிப் புகள் ஆகியவற்றை இன்றை ய நாளுக்கேற்றார்போல் மேம்படுத்திக் கொள்கிறீர்க ளா என அவ்வப்போது உறுதிசெய் து கொள்ளுங்கள். நீங்கள் எந்த துறையில் இருப்பினும் இந்தகால சிறந்த முறையை செயல்படுத்து வதையும், உங்களை தகவமைத் து  கொள்வதையும் உறுதிபடுத்தி க் கொள்ளுங்கள்.

5.தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளா தவர்கள்

இன்றையகாலத்தில் தனிப் பட்ட அடையாளம் என்பது தொழில் வளர்ச்சியின் ம திப்பு மிக்க மூலதனமாகும் . நீங்கள் உங்களை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள், உங்கள் செயல்கள் என்னெ ன்ன, அவை யாருக்கு பயன ளிக்கின்றன இவற்றை இந்த உலகுக்கு தெரியப் படுத்தும் விதத்தில்தான் நீங்கள் தனி த்துவம் பெறுகிறீர்கள். உங் களை மதிப்பு மிக்கவராக காட்டிக்கொள்வதே வெற்றி க்கு மிக முக்கிய வழி.

6.ஒழுங்கு, நோக்கம், சமநிலை தவறியவர்கள்

நாம்செய்யும் செயல்களில் இருந் து திசை திரும்புவதும், அவற்றில் குழப்பமடைவதும் இயற்கையான ஒன்று. ஒலிம்பிக்வீரர்களை எடுத் துக்கொள்ளுங்கள், அவர்கள் பயி ற்சியாளர்களுடன் இணைந் து தங்களை முழுவதுமாக தினசரி பயிற்சியில் ஈடுபடு த்திக்கொள்கிறார்கள். அவர் களிடம் பெரும் தியாகங்க ளும், முழு ஈடுபாடும், தினச ரி தொடர் பயிற்சி மேற்கொ ள்ளும் பழக்க மும் உள்ளது.

இந்த வீரர்களின் மனப்பான் மையுடன் நீங்கள் செயல்ப ட்டால், எந்த ஒருமுயற்சியு ம் வெற்றியைத் தரும். ஒழு ங்கான நேர்த்தியான செய ல்களை மேற்கொள்ள மன உறுதியும் வளைந்து கொடுக்கும் பண்பும் வாழ்க்கை யையும் வேலையையும் ஒரு ங்கிணைத்து வாழும் யுக்தியு ம் அவசியம். இது பழக்க வழ க்கங்களை உருவாக்குவதை விட அரிய செயல்தான். அதே நேரம் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழவும் மற ந்து விடாதீர்கள்.

7.ஆழ்ந்த தன்னம்பிக்கை இல்லாதவர்கள்

ஒரு செயலை என்னால் செய்யமுடியும், நான் செய் து முடிப்பேன் என்று நீங் கள் நம்பவில்லை எனில் கண்டிப்பாக நீங்கள் அதை செய்யப்போவதில்லை. “ இது தான் நான் உண்மையிலே யே செய்ய விரும்புவது, இதை செய்வதில் நான் சிறந்தவன், நிச்சயம் வெற்றி அடைவேன்” என்ற ஊக்கம் உங்களிடம் இல் லையெனில் அது உங்கள் முய ற்சிகளை வீணாக்கி விடும். இதை போன்று நினைக்கவில் லை என்றால் பரவாயில்லை. ஆனால் தவிர்க்காதீர்கள். சில நேரங்களில் நமது தன் னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ளவோ அல்லது மீட்டெடுக்கவோ உதவி தேவைப்படு ம். துவக்கம் முதலே சரியான மன ப்பாங்கையும்,உழைப்பையும் ஒரு நிலைப்படுத்தி தினமும் அடிப்ப டை பயிற்சிகளை செய்யுங்கள். உங்களுக்கு குறிப்புகள் கிடைக்கி ன்றனவா? வழிகள் புலப்படுகின்ற தா? வெற்றிக்கான முன்னறிவிப்பு கள் தென்படுகின்றதா? ஒரு வேளை இதற்கு உங்கள் பதில் ‘இல்லை’எனில் நீங்கள் என்ன செய்யவேண்டும், எதைமாற்றி க்கொள்ள வேண்டும்?

=> எஸ். வித்யா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: