Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாசிடிவ் எண்ணங்கள் நம் முன்னேற்றத்திற்குக் கைக்கொடுக்கிறதா? அவ‌சியமான‌ அலசல்

நேர்மறை (பாசிடிவ்) எண்ணங்கள் நமது முன்னேற்ற த்திற்குக் கைக் கொடுக்கி றதா? அவ‌சியமான‌ அலசல்

“பாசிடிவ்” எண்ணங்கள் மனித வாழ்வுக்கு வெற்றிய ளிக்கக் கூடியது என்று சொ ல்லப்படுகிறது. இத்தகைய எண்ணங்கள் நம் மனதில் எழும் “நெகடிவ்” எனப்படும் எதிர்மறை எண்ணங்களைத் தடுக்கவல்லது. அப்பொ ழுது நம் மனம் உற்சாகமடைந்து, பல சாதனைகளைப்

புரிய வழிவகுக்கும். இருப் பினும், நம் வாழ்க்கை இன் பமானதாய் அமைய “பாசிடி வ்” எண்ணங்கள் மட்டுமே போதுமானதல்ல என்றும் ஒரு சில ஆராய்ச்சியா ளர்கள் கூறுகின்றனர்.

“பாசிடிவ்” – நேர்மறை எண்ணங்களின் சக்தி

முதலில்“பாசிடிவ்” எண்ணங்க ள் எவ்வாறு நம்வாழ்க்கைக்கு நன்மையளிக்கின்றன என்ப தைப் பார்ப்போம். நல்ல எண் ணங்கள் நம் உடல் நலத்தை மேம்படச்செய்து, ஆயுளை நீட் டிக்கின்றன. இதை உறுதிப்படுத்த பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. யேல் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆராய்ச்சியில், த னது உடல் நலத்தைப் பற்றி நல்ல எண்ணங்களைக் கொண்டவர்கள் மகிழ்ச்சி யாகவும், ஆரோக்கியமாக வும் மற்றும் நல்ல ஞாபக சக்தியோடும் வாழ்கின்றனர் என நிறுபிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தங்கள் வயதுமுதிர்ச் சியைப் பற்றி கவலை கொண்டவ ர்கள் அதிகம் நோய் வாய்ப்படுவ தாகவும் தகவல் வெளியிட்டுள்ள னர்.

இதைப்போலவே, ரோபர்ட் கிரம் லி ங் என்பவர் நடத்திய ஆராய்ச்சியின் வழி, “பாசிடிவ் ” எண்ணங்கள் கொண்ட இருதய நோயாளிகள், சிகிச் சைக்குப் பிறகு 15 வருடங்கள் ஆரோக் கியமாக வாழ்கின்றனர் எனக் கூறியுள் ளார்.

அதுமட்டுமின்றி, நேர்மறை எண்ணங் கள் நம் சுய மகிழ்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. நல்ல எண்ணத்தோடு பிற ருக்கு உதவுதல், நன்றி உணர்வை வெ ளிப்படுத்துதல், தியானித்தல்போன்றவை அதிகம் நன் மை தரக் கூடியதாய் உள்ளது. இது நல்ல உணர்வை வலுப்படச்செய்வதோடு, கவ லையையும் போக்கச் செய்கி றது. இது நம் வாழ்க்கையை இன்பமாக நகர்த்த உறுதிச் செய்கிறது.

“பாசிடிவ்” எண்ணங்களுக்கு ம் நம் ஆரோக்கியத்திற்கும் தொடர்புண்டு என்பதை உறுதிப்படுத்தும் வகையாய் மற்றும் ஓர் ஆராய்ச்சி நட த்தப்பட்டுள்ளது. மகிழ்ச்சியா கவும், உற்சாகமாகவும் மற்று ம் மன அமைதியோடும் இரு ப்பவர்கள் சளிக் காய்ச்சல் போன்ற பிணியிலிருந்து தங் களைத் தற்காத்து கொள்கின் றனர் எனக் கூறப்படுகிறது. அதோடுமட்டுமின்றி, “பாசிடிவ்” எண்ணங்களைக் கொ ண்ட விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் திறன் மேம்படுவதாவும் நிறுபிக்கப்பட்டுள்ள து.

ஆனால் நேர்மறைஎண்ணங்கள் பள் ளி மற்றும் பணியிட முன்னேற்றத்திற் குக் கைக் கொடுக்கிறதா என சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

“பாசிடிவ்” எண்ணங்கள் நம் முன்னே ற்றத்திற்குத் தடைப்போடும் சாத்திய முண்டு

நேர்மறை எண்ணங்கள் நம் வாழ்க்கையை முன்னேற் றப் பாதைக்கு அழைத்துச் சென் றாலும், சிலசமயங்களில் அவை நம் முன்னேற்றத்திற்குத் தடைப்போடுகின்றன என சொ ல்லப்படுகிறது. இதைநிரூபிக்க, கேப்ரியல் எனும் உளவியல் பே ராசிரியர் ஒருவர் ஒரு சோதனையை நடத்தினார். அதி ல் மொத்தம் 25 பருமனானப் பெண் களின் உடல்எடையைக் குறைக்கு ம் சோதனை மேற்கொள்ளப்பட்ட து. அவர்களை உடல் எடையைக் குறைப்பதற்கு ஏற்றாற்போல “பா சிடிவ்” எண்ணங்களை நினைக்க வைத்தார். சில மாதங்கள் நீடித்த இந்த சோதனையின் முடிவில், இவர்களில் பெரும்பா லானோர் எதிர்ப்பார்த்தள வு உடல் எடையைப் பெற வில்லை. இதற்குமுக்கிய க் காரணம், இச்சோதனை யின்போது, “பாசிடிவ்” எண்ணங்களில் மட்டுமே கவனம் செலுத்திய இவர் கள் தங்களின் குறிப்பிட்ட உணவுமுறையைப் பின்பற் றாததுதான் எனக் கண்ட றிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒரு மனிதன் வெற்றியின் இலக்கை அடைந்துவிட்டதாக எண் ணி, கற்பனைச்செய்யும் பொழுது, அவன் தன் வெற்றிக் காகப் போராடுவதில் கவ னம் செலுத்துவதில்லை என்ற கருத்தை வெளியிட் டார். பிறகு, அவர் மனிதன் சிலநேரங்களில் முரண்பா டான எண்ணங்களையும் கொண்டிருப்பது நல்லது. இதன்மூலம் நாம் அடைய விரு ம்பும் இலக்குகளில் ஏதேனும் தடையிருப்பின் அதைக் கடக்க நாம் உற்சாகத் தோடுப் போராட ஆரம்பிப்போம் என தெளிவுப்ப டுத்தினார்.

Barbara Ehrenreich

இவர்களைத் தவிர, பார்பாரா எனும் எழுத்தாளர் ஒருவர், பாசிடிவ் எண்ணங்கள் மட்டு மே கொண்டுள்ளஒருவர் தன் உண்மையான உணர்வுக்கு மதிப்பளிப்பதில்லைஎன எழு தியுள்ளார். இதனைத் தொடர் ந்து, யோர்க்பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த ஜூலியா ஹெம்பில் என்பவரும், நேர் மறை எண்ணங்களைக் கொண்டவர்கள், தங்களின் தற்போதைய நிலைக்குத் தாங்களேக் காரணம் என தங்களை ஒரு குற்றவாளி யாகப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர் எனக் கூறியு ள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் கூறுவ துபோல, “பாசிடிவ்” எண்ண ங்களில் நன்மை, தீமைகள் இரண்டும் கலந்திருப்பதால் , நல்ல எண்ணங்களோடு நம் இலக்கை அடையும் உழைப்பிலும் ஈடுபடுகையில் வெற்றியடைவது சாத்தியம் என்றே எண்ணத்தோன்று கிறது.

=> இராஜேஸ்வரி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: