Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நினைவுத்திறனை வளர்த்துக்கொள்ள அறிவியல் தரும் அறிவுரைகளும் ஆலோசனைகளும்!

நினைவுத்திறனை வளர்த்துக்கொள்ள அறிவியல் தரும் அறிவுரைகளும் ஆலோசனைகளும்!

நினைவுத்திறன்

நாம் தினமும் பலவகையான செயல்களைச் செய்கி றோம், ஆனால் செய்கின்ற அனைத்தையும் நம்மால் நினைவில்கொள்ள முடியாது. உதாரணமாக நம்முட ன் பழகியவர்கள், நாம் படித்த கட்டுரைகள் என நமது நினைவுகளை

ஆராய்ந்து பார்த்தால் குறைந்தளவு மட்டுமே நம்மால் நினைவுகூற முடியும். இது அனைவ ருக்கும் இருக் கின்ற  இயற்கையான உணர்வுதான், அதுபோல ஞாபக சக்தியினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.

நமது ஆசையினை செயல்படுத்த நாம் அடுத்த நாடுவ து அறிவியலைத்தான்.  ஆனால், அறிவியலில் இதற் கென தனி மந்திரங்கள் எல்லாம் கிடையாது. முறை யான பயிற்சிகள் மற்றும் செயல்களால் இதனை வளர்த்துக் கொள்ள முடியும். நினைவுத்திறனை வளர்த்துக் கொள் ள அறிவியல்பூர்வமாக வெளிவந்த ஆராய்ச்சி முடிவு கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1.   உறக்கம் – நினைவுத்திறனுக்கு கொடுக்கும் புதிய ஆற்ற ல்களின் தொகுப்பு
சரியான தூக்கம் இருந்தால் நினைவுத்திறன் பல மட ங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என பல ஆராய்ச்சி முடி வுகள் சான்றுகளுடன் நிரூபித்துள்ளன. ஒவ்வொரு முறை நாம் தூக்கம் முடிந்து எழும்போதும் நமது நினைவுகள் மூளையுடன்இணைக்கப்படும். இதுகுறித் த ஆராய்ச்சி ஒன்றில் ஒரு சில ரை கணக்கில் எடுத்துக் கொண் டு அவர்களுக்கு சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளு மாறு கூறினர். பின்னர் அவர்க ளை தூங்க அனுமதித்தனர். அ வர்களின் தூக்கத்திற்கேற்ப நினைவுத்திறன் அடுத்தநாளில் மாறியிருப்பதை கண் டறிந்தனர்.

சரியான தூக்கம் கிடைத்து எழுபவர்கள் முந்தைய நாளி ல் நடந்த தேவையில்லாத விஷயங்கள் அனைத்தையும் மறந்து, குறிப்பிட்ட செய்திக ளைமட்டும் நினைவில் வை த்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தூக்கம் வித்தியாச மான நினைவுத்திறனை மேம்ப டுத்தலாம் எனவும் இதில் தெரிய வந்துள்ளது. ஆனால் இதை ஏன் நாம் முழித்திருக்கும்போது செய் ய முடிவதில்லை. நமது மூளை பெரும்பாலான செயல்களை தடையில்லாமல் செய்யநினைக்கிறது, அப்போதுதான் அது வேகமாகவும் செயல்படும். அது நாம் தூக்கத்தில் இருக்கும் போதுதான் நடக்கும், அதனால் தான் தூங்கும்போது நமது நரம் புகளின் நியூரான்கள் புத்துண ர்ச்சி பெற்று அடுத்த நாளுக்குத் தயாராகின்றன.

2.உடற்பயிற்சிக்கும் நினைவுத்திறனுக்கும் உள்ள தொடர்பு

நாம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்களைப் பற்றி பல கட்டுரைகளில் படித்திருப் போம். தற்போது அந்த பயன்க ளுடன் இதையும் சேர்த்துக்கொ ள்ளுங்கள். படிக்கும் கால கட்ட த்தில் நாம் மேற்கொள்ளும் உட ற்பயிற்சிகள், நமது மனதையும் மூளையையும் புத்து ணர்வுடன் வைத்திருக்க உதவும் என வும், படிக்கும் விஷயங்களை மனதி ல் நிறுத்த உதவும் எனவும் ஆய் வின் முடிவில் தெரியவந்துள்ளது.

முக்கியமாக உடலின் காற்று சம்பந் தப்பட்ட உடற்பயிற்சிகள் நமது நினைவுத்திறனை வலுப்படுத்துவதி ல், முக்கியப்பங்கு வகிப்பதாக ஆரா ய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வுகளை எலிகளுக்கு செய்து உறுதியும் செய்துள்ளனர்.

3.காஃபி குடிப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கும்

நீங்கள் தினமும் காஃபி குடிப்பவர்க ள் என்றால் இது உங்களுக்கு மகிழ் ச்சியைத் தரும் செய்திதான். ஜனவ ரி 2014 இல் நடத்தப்பட்ட ஆய்வில் காஃபிக்கும் நினை வுத்திறனுக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ள னர். இரண்டு கப் காஃபி கொடுப்பதா ல் நாம் படித்த விஷயங்களை அடுத்த நாள் நினைவுக் கு கொண்டுவருவது எளி தாக உள்ளது என பலர் கூறியுள்ளனர். ஆனால், இது பற்றிய தெளிவான ஆய்வு முடிவுகள்இன்னும் சரிவர வெளியிடப்படவி ல்லை.

4.‘நினைவக அரண்மனை’ – நினைவினை மேம்படுத்த உதவும்

தொடர்ச்சியாக எதையாவது நினைவில்வைத்துக்கொள்ள வே ண்டும் என்றால் இந்த ‘நினைவக அரண்மனை’ கண்டிப்பாக உத வும். உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் சென்று தேவையான பொருட்களை சரியான பிரிவினைப் பார் த்து அடுக்கி வைக்கும் முறையி னை நினைவில் வைத்துக் கொ ள்ளுங்கள். இதைப் போல் தான் இந்த நினைவக அரண்மனையு ம், நாம் நம் வீட்டில் பொருட்க ளை அடுக்கி வைப்பதுபோல இ ங்கு நினைவுகளை சரியான பா தையில் கொண்டு சென்று நினைவில் வைக்க வேண் டும்.

வீட்டில் அடுக்கி வைத்த அதே பொருளை திரும்ப எடுக்கும்போது நாம் அடுக்கி வைக்கும்போது எந்த பாதை யில் சென் றோமோ, அதே பாதையி னை மீண்டும் மேற்கொ ள்வோம். அதேபோல்தான் நினைவினை திரும்ப எடு க்கும்போதும், நாம் அதை நினைவி ல் வைக்க என்ன செய்தோமோ அ தே முறையினை பின்பற்ற வேண் டும்.

5.மின்காந்த தூண்டலால் நினைவு த்திறனை அதிகரிக்கலாம்

மின்காந்தத் தூண்டலின் உதவியால் நமது நினைவுத் திறனை அதிகரிக்க முடியு ம் என ஆகஸ்ட் 2014 இல் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மருத்து வ முறைகளால் செய்யப் படுகிறது. இவ்வாறு அடிக் கடி மின்காந்தத்தூண்டல் செய்துகொண்டவர்கள் பெரும்பாலான விஷயங்களை நினைவுகூற முடிந்ததாக கூறினார்கள். ஆனால் இத னால் பக்க விளைவுகள் ஏதாவது ஏற்படுமா? என்பது குறித்த ஆய்வுகளை நரம் பியல் வல்லுநர்கள் மேற் கொண்டுள்ளனர். அதனால் இவற்றை தற்போது முயற் சிக்க வேண்டாம்.

6.நினைவுத்திறனை அதிக ரிக்கும்மாத்திரைகள்–எதிர் கால ம்

இதற்கென தனி மாத்திரை களை இதுவரை எவரும் கண்டு பிடிக்கவில்லை. ஆ னால் எதிர்காலத்தில் இத ற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மூளைக்கும் நினை வுகளுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ச்சிகள் எலிகளின்மீது நடைபெற்று வ ருகின்றன. இவை பற்றிய தெளி வான ஆய்வுமுடிவுகள்  கிடைக் கும் பட்சத்தில் அவற்றை மனித னின்மீது செயல்படுத்துவார்கள் .ஆனால், இதுஅவ்வளவு எளிதா ன விஷயமல்ல. நமது நினைவு த்திறன் ஒரு சர்ச்சைக்குரிய புதிரான அமைப்பு, பலதரப்பட்ட ஆய்வுகளுக்குப் பின்புதான் மனி தனின் மீது இந்த மாத்திரைகள் போன்ற மருத்துவ ஆயுதங்க ளைச் செயல்படுத்து வார்கள்.

7.      மூளைக்கான சிப் – அதிநவீன எதிர்காலம்

இதற்கான காலகட்டம் வெகு தொலைவில் இல்லை.  அமெரி க்காவின் பாதுகாப்பு அமைப்பு சுமார் 40மில்லியன் டாலர்களை , மூளைசம்பந்தப்பட்ட நினைவு த்திறன் ஆய்வுகளுக்கு செலவிட முடிவெடுத்துள்ளது. புதிய நினைவுகளை எப்படி எளி தாக நினைவில் ஏற்றுவது என்பது குறித்த பல புதிய விளக்கங்களைக் கொடுக்க இந்த ஆய்வு உதவும்.

பென்டகனில் இருந்து கிடைத்த செய்தியின்படி நினை வுத்திறன் சம்பந்தப்பட்ட இந்த ஆராய்ச்சிக ளின் உதவி கொண்டு இராணுவம் மற்றும் இராணுவ வீரர்களின் பல த்தினை பல மடங்கு அதிகரிக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை சாத்தியப்படுத்த விஞ்ஞானி கள் முதலில் நினைவுகள் எந்தமு றைப்படி சேமிக்கப்படுகின்றன என்ப து குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொ ள்வர். அதன் பின்பு அதே முறையில் நினைவுகளை மீளக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந் துவிடலாம் என்கின்றனர் அவர்கள். பொறியியல் வல்லுநர்கள் விஞ்ஞானிகளு டன் இணைந்து செயல்பட்டு இது சம்பந்தப்பட்ட கரு விகளை உருவாக்க முடியுமா என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்க ளின் ஊகிப்பின்படி இன்னும் நான்கு ஆண்டுகளில் நினைவுத் திறனால் பாதிக்கப்பட்ட வர்களை சரிசெய்ய தேவையான விஷயங்களை கண்ட றிந்துவிடுவார்கள்.

எப்படியெல்லாம்நாம்நம் நினைவுகளை மேம்படுத்தநி னைத்தாலும், முறையான பயிற்சிகள் இருந்தால் எந்த வித மருத்துவ ஆயுதங்களி ன் துணை இல்லாமலே நாம் நமது நினைவுகளை நினை வில் வைக்க முடியும். என்ன இப்போது படித்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டீர்களா?

=>விவேக் பி.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: