Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அனிமேட்ட‍ட் எமோஷன்ஸ்களை இலவசமாக‌ அள்ளித்தரும் இணையம் – ஓர் அறிமுகம்

அனிமேட்ட‍ட் எமோஷன்ஸ்களை அள்ளித்தரும் இணையம் – ஓர் அறிமுகம்

முன்பெல்லாம் ஒரு செய்தியை அல்ல‍து தகவலை பறிமாறிக் கொள்ள‍ நேரடியாகவே சந்தித்து பறிமாறிக் கொ ண்டிருந்தனர். ஆனால் மனித சமூகத்தி ன் நாகரீகத்தின் அதீத வளர்ச்சியின் தாக்க‍மாக இன்றைய நவீன தொழில் நுட்பங்களின் விளைவாக பல்வேறு தகவல் தொடர்புச்சாதனங்கள் கண்டு பிடிக்க‍ப்பட்டு, அது மக்க‍ளின் ஏகோபித் த‍ வரவேற்பைப்பெற்று வானளாவ தன்

சிறகினை விரித்துக் கொண்டே செல்கிறது.

பல நேரங்களில் வீடியோ கால், வீடியோ கான்பரசிங் போன்ற வற்றில் மூலமாக பல ஆயிரக்கணக்கான மைல்களுக் கு அப்பால் இருப்ப‍வர்களின் மு கத்தைப்பார்த்துப்பேசி மகிழ்ந்து வருகிறோம். ஆனால் எல்லா நேரங்களிலும் இது முடிவதில் லை. சில நேரங்களில் கைப்பேசிகளில் பேச மட்டும் முடியும். அல்ல‍து சேட்டிங் எனப்படும் அரட்டையில் நமது எழுத்துக்களை மட்டுமே பகிர முடியும். இதுபோன்ற நேரங்களி ல் நமது உணர்வுகளை எளிதாக எதிரில் இருப் ப‍வர் புரிந்துகொள்ளும் வகையில் அங்கே அமைக்க‍ப் பட்டிருக்கும் எமோஷன்ஸ் என்ற பிரிவில் உள்ள‍ படத் தைப் பகிர்வோம். அல்லவா! இது வெறும் அசையாமல் இருக்கும் புகைப்படமாக இரு ந்தால் அதில் சுவாரஸ்யம் இருக்காதே! இதே அசைவுக் கொடுக்க‍ப்பட்ட‍ (அனிமே ஷன்)புகைப்படங்களைப் பகிர்ந்தால் எதிரி ல் இருப்ப‍வர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படு த்தும். இத்தகைய அசைவுக் கொடு க்க‍ப்பட்ட‍ புகைப்படங்களை இல வசமாக‌ அள்ளித் தரும் இணையம் ஒன்று இருக்கிறது. இதோ அந்த இணையத்தின் முகவரி http://free.motitags.com

இந்த இணையத்தின் முகவரிக்குச் சென்றதும் டவுண்லோட் செய்துகொண்டு உங்களுக்கு த் தேவையான அசைவுக்கொடுக்க‍ப்பட்ட‍ உணர்வுப் படங்களை இலவசமாக‌ பகிர்ந்து கொள்ளுங்கள்.

– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: