காலங்கடந்த திருமணம் வாழ்க்கைக்கு உதவுமா? -ஒரு பார்வை
திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய
இருவரும் ஒத்துப்போகவேண்டும். அதற்குரிய பருவத் தில் திருமணம் செய்துகொள்ளு ம் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்க ள்.
காலங்கடந்து திருமணம் செய்து கொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறை ந்து வருகிறது.
அதற்கு காரணம், இருவருக்கும் வயது முதிர்ச்சியும்- பிடிவாத முயற்சியும் அதிகரிப்பது தான். அதனால் ஒருவர் கருத்தை இன்னொருவர் ஏற்க மறுக்கிறார் கள். முற்காலத்தில் பெண்களை சீக்கிரமாக திருமணம் செய்து கொ டுக்கும் வழக்கம் இருந்தது.
அப்போதுதான் பெண்கள், புகுந்த வீட் டில் சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடு த்து வாழ்வார்கள் என்று சொல்லப்ப ட்டது. கணவரை விட மனைவி வயது குறைந்தவராக இருக்க வேண்டும் என் பதும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதில் ஒரு விஷய த்தை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
பக்குவமானபருவத்திற்கு முன்பே செய் யப்படும் பால்ய விவாகமும் தவறானது. காலங்கடந்து செய்யப்படும் முதிர் திரு மணமும் பிரச்சினைக்குரியது. `பருவத் தே பயிர் செய்’ என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல திருமணத்திற்கும் பொருந் தும்.
காலங்கடந்த நாற்று கழனிக்குஉதவாது என்பதுபோல் , காலங்கடந்த திருமணமும் வாழ்க்கைக்கு உதவாது. இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் படித்து வேலைக்கு ப் போய் கைநிறைய சம்பாதி க்க ஆசைப் படுகிறார்கள். அது நல்ல விஷயம் தான்.
அதனால் திருமண வயதை தாண்டிய பின்னும் திருமணத் தை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுவிட்டு திருமணம் செய்துகொள்ள முன் வரும்போது, அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் வா ழ்க்கை அமைவதில்லை. காலங் கடந்து திருமணம் செய்துகொள் ளும் தம்பதியினர், மீதமுள்ள கால த்தை வளமாக அமைத்துக் கொள்ள அவசரம் காட்டுகி றார்கள்
இருவரும் தங்களுடைய வருமானம் முழுவதும் எதிர் கால சேமிப்பாக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப் போது பெற்றோருக்கும், உறவுக ளுக்கும் செய்யும் கடமைகளைக் கூட பெரிய பாரமாக நினைத்து விடுகிறார்கள். கணவர்தன் பெற் றோரை பராமரிப்பது மனைவிக்கு வெட்டிச் செலவா கத்தெரியும்.
மனைவி தன் பெற்றோரை பராமரிப்பது, கணவருக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். அது வே தர்க்கம் உருவாக காரணமாகி விடும். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், திருமண த்திற்கு முன்பு வெகுகாலம் சுதந்தி ரமாக வாழ்ந்து பழகிவிட்ட காரண த்தால் திடீரென்று ஒருவர் வாழ்க் கைக்குள் வந்து, தன்னை கட்டுப்படுத்துவதை ஏற்றுக் கொள்வதில்லை.
அதனால் தம்பதியினரில் ஒருவர் எடுக்கும் முடிவை மற்றவர் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலு ம் அவர்கள் தங்கள் பக்க நியாயத்தை முரட்டுத்தனமாக எடுத்துச் சொல்வார் கள். அதனால் மோதல் வெடிக்கும். இருவரின் பெற்றோரும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற சிந்தனை, காலங் கடந்து திரு மணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு பெரும்பா லும் ஏற்படுவதில்லை.
அதனால் ஒருவரது பெற்றோரை இன்னொருவர் ஏதா வது ஒரு விதத்தில் குறை சொ ல்லத் தொடங்குவார்கள். அது வும் பிரச்சனைகளை தோற்று விக்கும். கால ங்கடந்து திரும ணம் செய்துகொள்ளும் இருவ ரும் ஒருவருக்கொருவர் விட்டு க்கொடுக்க முன்வருவதில் லை. தனித்துப் போகவு ம் முற்படுவதில்லை.
தங்களை மற்றவர் வழிநடத்தவும் அனுமதிப்பதில்லை . இப்படிப்பட்ட மனநிலையில் அன்பு என்ற சொல்லுக்கு முற்று ப்புள்ளி வைத்துவிட்டு வாழ்க் கையில் அதிரடியான போராட்ட ங்களை ஆரம்பித்து விடுவர். வெகுகாலம் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஆணாக இருந்தாலும், பெண் ணாக இரு ந்தாலும் அவர்கள் எதிர்பாலினர் பலரிடம் பழகும் வாய்ப்பை ஏற்ப டுத்திக் கொள்கிறார்கள்.
அந்தப் பழக்கம் மிகவும் சக ஜமாகி கொண்டுவரும் நி லையில் இதன் பிரதிபலிப் பு குடும்ப வாழ்க்கையில் விழும் பொழுது பல சிக்க ல்கள் தோன்றுகின்றன. இது ஆரோக்கியமான தாம் பத்ய வாழ்க்கைக்கு உலை வைத்துவிடும். அத்தகைய குடும்பங்களில் அடிக்கடி பூகம்ப ங்கள் வெடிக்கும். அற்பத்தன மான காரணங்களுக் கெல்லாம் சண்டை வரும்.
ஆனால் அதன்மூலகாரணம் இ ன்னொன்றாக இருக்கும். கால ங்கடந்த திருமணங்களால் குழ ந்தைப்பேறும் கேள்விக்குறியாகிறது. இது அவர்களு டைய திருமண வாழ்வை சிதைத்து எதிர்காலத்தை பாதித்துவிடும். எப்போதும் புதுமணத் தம்பதிகள் என் றால் மனதில் குதூகலமும் ஆனந்தமும் இருக்கும்.
ஆனால் காலங்கடந்து திரும ணம் செய்துகொண்டால் அந் த குதூகலத்தையோ, நாணத் தையோ காண முடியாது. அதற்கு பதிலாக அகங்காரமு ம், ஆதிக்கமும்தான் மேலோங்கி நிற்கும். இது மகிழ் ச்சியான மண வாழ் க்கைக்கு உத வாது. காலங்கடந்த திருமணங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதி யாகவும் மகிழ்ச்சியைத் தராது.
வேறுவழியில்லாமல் திரும ணம் செய்துகொள்ள வேண்டி யிருந்தால் பெண், அந்த வாழ் க்கைக்கு தக்கபடி தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வே ண்டும். அனுசரித்து செல்ல வேண்டும்.
அது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கை க்கும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந் து கொள்ள வேண்டும். இது ஆணு க்கும் பொருந்தும். திருமணத்தில் காலதாமதம் ஒரு குறைதான். ஆனால் அந்த குறையே வாழ்க் கையை கறையாக்கி விடாத அள வுக்கு வாழவேண்டும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவுஅல்ல