Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதன் பின்னணியில் நமது பிரதமர் நரேந்திரமோடி . . . .

இதன் பின்னணியில் நமது பிரதமர் நரேந்திரமோடி இருப்ப‍தாக ஒரு கருத்து! – . . .?

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களிலு ம் தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான மொபைல் போன் S.M.S. மற்றும் இமெயில் போன்றவற்றில்

ஒருவர் தெரிவிக்கும் கருத்து பதிவுசெய்யும் விஷயங்கள் ஒரேநேரத்தில் பலரையு ம் சென்றடைகின்றன.

அத்தகைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் மற்றும் அவர்களுக் கு ஆதரவானவர்கள் அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவி த்ததும் தகவல் தொழில்நுட்ப சட்டம்-66ஏயின்படி கரு த்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்படுவது அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தி ற்கு எதிரானது” என உச்ச நீதி மன்ற த்தில் சிலர் வழக்கு தொடர்ந்திருந் தனர். அந்த வழக்கில் மத்திய அரசு நேற்று முன்தினம் தன் கருத்தை பதிவு செய்தது.

இதைவிசாரித்த உச்சநீதிமன்றம், “சமூக வலைதளங்க ளில் தகவல் தொடர்பு சாத னங்களில் தனிநபர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்து களுக்கு அரசியல் எதிர்ப்பு விமர்சனங்கள் வந்தன என் பதற்காக அத்தகைய கருத் துக்களை பதிவு செய்பவர்க ளை கைது செய்வதோ தண்டிப்பதோ கூடாது என்பது தான் அரசின் இப்போதை ய எண்ணம்.

உதாரணமாக டுவிட்டர் வலைதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேருங்கள் என வலைதளங்களில் யாராவது பிர சாரம் செய்தால் அவர்கள்மீது தகவ ல் தொழில்நுட்ப சட்டம்-66ஏ படி நட வடிக்கை எடுக்க வேண்டும். இணையம் என்ற இந்த ஒரு ஊடகம் மட்டும்தான் தணிக்கை இல்லாத ஊடக மாக இருக்கிறது; அது தொடர வே ண்டும்.

சில சமயங்களில் நாட்டின் நலன், பாதுகாப்பு போன்ற விவரங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற் றக் கோரி வலைதள நிறுவனங்க ளை அரசு கேட்டுக்கொள்ளத்தான் செய்யும். அதை தவறு என கூறமுடியாது. எல்லா நாடு களிலும் அந்த நடைமுறை உள்ளது” என்று தெரிவித் தனர்.

வலைதள நிறுவனங்கள் சார்பி ல் ஆஜரான மூத்த வழக்கறிஞர் K.K.வேணுகோபால் ”அரசியல் காரணங்களுக்காக கருத்து சுத ந்திரம் பறிக்கப்படக் கூடாது. சமூக வலைதளங்களில் சுதந்தி ரமாக கருத்து தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும். கருத்து பதிவு செய்ததற்காக கைது போன்ற நடவடிக்கைகள் சர்வா திகார நடவடிக்கைகள் ” என்றார்.

தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவில் மாற்றம் முந்தைய மன்மோகன் சிங் அரசில் கொண் டுவரப்பட்டது. அதை மாற்ற வே ண்டும் என இப்போதைய மோடி அரசு முனைந்துள்ள து.

இதற்கு பின்னணியில் பிரதமர் மோடிதான் உள்ளார் என்றகருத்தும் தெரிய வந்துள்ளது. கருத்து சுதந்தி ரத்திற்கு எதிரான அந்த பிரிவு நீக்க ப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதன் அடிப்படையிலே யே மேற்கண்டமுடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. மத்திய அரசின் இந்நிலைப்பாடு சமூக வலை தளங் களில் கருத்து பதிவு செய்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய மகத்தான பணிக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி சொல்வோம்.

Mkvel Kulandaivel from facebook

Leave a Reply