Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (மேஷம் முதல் மீனம் வரை)

2015 ஆம் ஆண்டிற்கான 12 இராசிகளுக்கும் உரிய பலன்களை கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து.  

(மேஷம் முதல் மீனம் வரை)

1. மேஷ ராசி நேயர்களே!

தங்கத்தின் தரம்கூட குறையலாம். ஆனால், உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டி ல் பிறந்தாலும் விண்ணை

முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங் கள்தான். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று வலுவாக அமர்ந்திருக் கும் நேரத்தில் இந்தப் புத்தாண் டு பிறப்பதால் தைரியம் கூடும். குழப்பங்கள் நீங்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறை மூலமாக பழைய சிக்கல்க ளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை உணருவீர்கள். தன்கையே தனக் குதவி என்பதையும் அறிவீர்கள். உதவிசெய்து உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வதை நினைத்து அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள். சகோ தர, சகோதரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வீடு, மனை விற்பது, வாங்குவதில் இருந்து வந்த தேக்க நிலை, மந்த நிலை மாறும். நீங்கள் எதிர் பார்த்த விலைக்கு வீடு விற்கும். அதேபோல உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். உங்கள் தனாதி பதி சுக்கிரன் வலுவாக நிற்பதால் எல்லா வகையிலும் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவி க்குள் நெருக்கம் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு ப்ளா ன் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடை க்கும். அரசால் அனுகூலம் உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை தந்து புது வண்டி வாங் குவீர்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமாக புதன் நிற் பதால் நட்பு வட்டம் விரிவடையும். புதியவர்கள் நண்ப ர்களாவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்வதற்கான வழி, வகைப் பிறக்கும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் சில ராஜதந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். எதிர்ப்புகள் அடங்கும். வழ க்குகள் சாதகமாகும். வேற்றுமொழி, வேற்று மதத்தை சார்ந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
12வது வீட்டில் கேது நிற்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறை வேற்றுவீர்கள். குலதெய்வ கோயிலை புதுப்பிக்க உத வுவீர்கள். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் ஜூன் மாதம் வரை 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல் இருக்கும். செலவினங்களும் அதிகமாகும். சிறுசிறு வாகன விபத்துகளும் வரக்கூடும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். கோபத்தால் நல்லவர்களின் நட் பை இழக்க நேரிடும்.
பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். அவர்களின் படிப்பு, ஆரோக்யத்தில் அதிருப்தியான சூழ்நிலை உரு வாகும். ஆனால், ஜூலை மாதம் முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால் அதுமுத ல் மனநிம்மதி உண்டாகும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். கையை விட்டுப்போன, ஏமாந்த தொகையும் கைக்கு வந்து சேரும். அரசு காரியங்களும் நல்ல விதத்தில் முடிவ டையும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கல் யாண முயற்சிகள் பலிதமாகும்.
அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். குழப்பிக் கொ ண்டிருந்த நீங்கள், இனி தெளிவடைவீர்கள். பிள்ளைக ளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப் பட்ட முயற்சிகள் பலிதமாகும். வேலைக்கு விண்ணப் பித்து காத்திருந்த வர்களுக்கு நல்ல நிறுவனத்திலிரு ந்து அழைப்பு வரும். அஷ்டமத்துச் சனி கடந்த காலத்தி ல் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என அவ்வப்போ து ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னாடி இகழ்ந்து பேசுவார்கள் மனைவியுடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும்.
பழைய பிரச்னைகளெல்லாம் நினைவுக்கூர்ந்து பேசிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களுக்கு உதவி செய் கிறேன் என்று வாக்குறுதி தந்துவிட்டு உதவாமல் போ கக் கூடும். பணப் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வருடம் பிறக்கும்போது அஷ்டமத்துச் சனி நடைபெற்று கொண் டிருப்பதால் சின்னச் சின்ன காரியங்கள் கூட தடைப் பட்டுத்தான் முடிவடையும். புதியவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்கு அழைத்து வரவேண்டாம்.
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி செலவுகளும் இருக்கும். பணப் பற்றாக்குறையும் இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கை யொப்பமிட வேண்டாம். தூக்கம் குறையும். சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல் போகும். தவறு செய்யாமலேயே உங்களை சிலர் குற்றவாளியாக்க முயற்சி செய்வார்கள். கூடாப்பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கியும், தூக்கியும் பேச வேண்டாம். அடுத்தவர்களு க்கு பணம் வாங்கித் தருவதிலும், திருமண விவகா ரங்களிலும் குறுக்கே நிற்காதீர்கள்.

வியாபாரிகளே! சின்னச் சின்ன நஷ்டங்கள் இருக்கும். சில நேரங்கள் வியாபாரத்தில் ஆர்வமில்லாமலும் போகும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓரளவு லாப ம் கிடைக்கும். ஜூலை முதல் டிசம்பர் வரை உள்ள காலக்கட்டமும் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். உணவு, மருந்து, கெமிக்கல், கட்டுமானப் பொருட்களாலும் லாபமடைவீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்களால் சிக்கல்கள் வரும். வே லையாட்களும் உங்களுடைய கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்து கொள்ளாமல் பொறுப்பற்று நடந்து கொள்வார் கள். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வே ண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிய நிலை வரும். ஜூலை மாதத்திலிருந்து தொழிலில் நிம்மதியும், லாபமும் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களே! உயரதிகாரிகளுடன் மோதல்கள் வரும். சக ஊழியர்களுடனும் சின்னச் சின்ன சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். ஜூன் மாதம் வரை உத்யோ கத்தில் பிரச்னைகளும், நிம்மதியற்ற போக்கும், மரி யாதைக் குறைவான சம்பவங்களும் இருக்கும். ஜூலை மாதத்திலிருந்து உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உதாசீனப்படுத்தப்பட்ட உங்க ளுக்கு மரியாதைக் கூடும். அதிகாரிகளின் மனசு மா றும். தொந்தரவு கொடுத்து வந்த அதிகாரி இடம் மா றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சம்பள பாக்கியும் கைக்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நல்ல திருப்பு முனை உண்டாகும்.
மாணவ-மாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடைபெறு வதால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். விளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். வகுப்பறை யில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள்.
கன்னிப் பெண்களே! வருடத்தின் முற்பகுதியில் காத லில் ஏமாற்றமும், உயர்கல்வியில் தேக்கமும், மந்தமு ம் ஏற்படும். ஜூலை மாதத்திலிருந்து கல்வியில் ஆர்வம் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை கிடைக்கும். வருடத்தின் இறுதிப் பகுதியில் திருமணம் கூடி வரும்.
கலைத்துறையினரே! முற்பகுதி உங்களுக்கு தொந்த ரவு தந்தாலும் பிற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். பெரிய நிறுவனத்திலிருந்தும் அழைப்பு வரும்.
அரசியல்வாதிகளே! எதிர்க் கட்சியினரை விட நீங்கள் இருக்கும் கட்சியில் உங்களுக்கு எதிர்ப்புகள் இருக்கு ம். சகாக்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

விவசாயிகளே! வருடத்தின் பிற்பகுதியில் மகசூல் பெ ருகும். வருமானம் உயரும். இந்தப் புத்தாண்டு முற்பகு தி பாகற்காயாக இருந்தாலும் பிற்பகுதி பனங்கற்கண் டாக இனிக்கும்.

பரிகாரம் :
திருநெல்வேலி தலத்தில் அருளும் நெல்லையப்பரை தரிசியுங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

 


2. ரிஷப ராசி நேயர்களே!

காரசாரமாக கை ஓங்கிப் பேசத் தயங்கும் உங்கள் உள் மனதில் எப்போதும் காதல் கசிந்து கொண்டிருக்கும். வெகுதொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில்  கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்ற லை கொண்ட நீங்கள், நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள். உங்கள்  ராசியை சனிபகவான் பார்த்துக் கொண்டிருக்கும் நேர த்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் நீங்கள் ஆரோக் யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. காரம், கொழுப்பு ச்  சத்துள்ள உணவுகளை தவிர்க்கப் பாருங்கள். முடிந் தவரை வெளி உணவுகளையும் தவிர்க்கப் பாருங்கள். வழக்கம்போல மனதில் தோன்றுவதையெல்லாம் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். அடு த்தடுத்த வீண் பழிகள் வர வாய்ப்பிருக்கிறது. சிலர் நன்றி  மறந்து பேசுவார்கள். உழைப்பை வாங்கிக் கொ ண்டு உங்களை கறிவேப்பிலையாக தூக்கி எறிவார்க ள். அதையெல்லாம் நினைத்து அவ்வப்போது கண்  கலங்குவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்களுடைய இரக்க சிந்தனையால் தான் நீங்கள் அவ்வப்போது ஏமார்ந்து போகிறீர்கள். கண்டகச் சனி  நடைபெற்று கொண்டிருப்பதால் கணவன்-மனைவிக் குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வரும்.
கடந்த கால தவறுகள், குற்றங்கள், ஏச்சுப் பேச்சுகளை யெல்லாம் இப்போது நினைவுகூர்ந்து புதிய பிரச்னை களை உருவாக்காதீர்கள். மறப்போம், மன்னிப்போம் என்றிருப்பது நல்லது. இலவசமாக சில கெட்ட பழக்க வழக்கங்கள் உங்களை தொற்றிக் கொள்ள வாய்ப்பி ருக்கிறது. கூடாநட்பையெல்லாம் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் குரு மறைந்திருக் கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திட்ட மிட்டு எதையும் செய்யப் பாருங்கள். புதிய  முயற்சிக ளில் கவனம் தேவை. விவாதங் களை தவிர்க்கப் பாருங்கள்.
வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கி றதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்ல து. வங்கிக் கடனை நினைத்து கலங்குவீர்கள்.  வெளி யில் தைரியசாலியாக உங்களை காட்டிக் கொண்டா லும், உள்மனதில் ஒருவித பயம் பரவும். 5ம் இடத்தில் ராகு நிற்பதால் இனந்தெரியாத மனக்கவலை  வந்து போகும். ஜூலை மாதம் முதல் குரு 4ல் நுழைவதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக் கப்பாருங்கள். வீட்டில் குடிநீர் குழாய், கழிவு நீர்  குழாய் பழுது வந்து நீங்கும். வாகனத்திற் கான லை சென்ஸ், இன்சூரன்சையெல்லாம் புதுப்பிக்க தவறா தீர்கள்.
சின்னச் சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும். தாயா ருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகு தண்டில் வலி வந்து போகும். வீடு, மனை வாங்கும்  போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல் லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. சொத்து விற் பதாக இருந்தால் ஒரே தவணையில் பணத்தை வாங் கப்  பாருங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றா லும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொ ண்டேயிருக்கும். தாழ்வு மனப்பான்மையால் மன இறுக்கம்  அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
உங்கள் ராசிநாதன் சுக்கிரனும், தன-பூர்வ புண்யாதிப தியான புதனும் சாதகமாக இருப்பதால் உறவினர்களி ன் கனிவான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும்.  மக ளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டு நிறுவனத்தில் உத்யோகம் அமையும். பால்ய நண்பர் கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். நீண்ட  நாட்களாக போக வேண்டு மென்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வாகன த்தை சீர் செய்வீர்கள். அடகிலிருந்த நகைகளை மிட் பீர்கள்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெ ளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சகோதரங்க ள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
உங்களின் திறமைகள் குறைந்து விட்டதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். உறவினர்களில் சிலர் உங்க ளை அவமதிக்க வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளிடம்  உங்களுடைய கோபத்தை காட்டாதீர்கள். பூர்வீகச் சொ த்துப் பிரச்னையில் தலையிட்டு அதை சீர்த்திருத்தம் செய்வதாக நினைத்து அதில் செலவு செய்து சிக்கிக்  கொள்ளாதீர்கள். பூர்வீகத்தை நோக்கி இடம் பெயர்வ தும் நல்லதல்ல. சிலர் சொந்த ஊரை விட்டு விலகி வேறு இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகு ம்.  உங்களுடைய 12வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் விரயச் செலவுகள் அதிகமாகும். பயணங் களும் இருக்கும்.
தூக்கமும் குறையும். காலமெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதானா, மகிழ்ச்சியே வாழ்க் கையில் இருக்காதா என்றெல்லாம் புலம்புவீர்கள்.   உங்கள் ராசிநாதன் சுக்கிரனும், தன-பூர்வ புண்யாதிப தியான புதனும் சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொள்ளக் கூடிய சக்தி  கிடைக்கும். முன்னேற்றம் உண்டு. சாதுர்யமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். மனஇறுக்கம் ஒருபக்கம் இருந்தாலும் தைரியமும் பிறக்கும்.  செவ் வாயும் சாதகமாக இருப்பதால் சகோதர வகையில் உதவிகள் உண்டு.
எதிர்ப்புகள் குறையும். வீடு வாங்கும்போது தாய் பத்தி ரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. அரசிடமிரு ந்து முறையான கட்டிட வரைபடத்திற்கு அனுமதி  பெறாமல் கட்ட வேண்டாம். விதிகளை மீறி கூடுதல் தளம் அமைப்பது, கூடுதல் அறை அமைப்பதை தவி ர்ப்பது நல்லது. கௌரவப் பதவிகள் தேடி வரும்.  பிர பலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் இருந்து ம், நட்பிருந்தும் அவர்களை சரியாகப் பயன்படுத்திக்  கொள்ள முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

வியாபாரிகளே! பெரிய முதலீடுகள் வேண்டாம். புதிய பங்குதாரர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். இந்த வருடத்தில் நீங்கள் இருப்பதை வைத்து வியாபாரம்  செய்வது நல்லது. வேலையாட்களால் ஏமாற்றங்களு ம், பிரச்னைகளும் வரக்கூடும். அவர்களை கனிவாக நடத்துங்கள். முன்பணம் யாருக்கும் தர வேண்டாம்.  பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண் டியது வரும். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரும். கேது 11ல் நிற்பதால் சந் தை நிலவரத்தை அறிந்து, விளம்பர யுக்திகளை கை யாண்டு ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள்.


உத்யோகஸ்தர்களே! சின்னச் சின்ன பழிகள் வந்து சேரும். கடினமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லை யே என்று கலங்குவீர்கள். சக ஊழியர்களிடம்  மேலதி காரிகளைப்பற்றி எதுவும் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டாம். பிரச்னைக்குரிய ஆவணங்களை கையா ளும்போது சட்ட ஆலோசகர்களை  கலந்தாலோசிக்க தவறாதீர்கள். மேலதிகாரியின் கட்டாயத்தின் பேரில் சில தவறுகளை செய்து விடாதீர்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட் பட்டு நீங்கள் முக்கிய கோப்புகளையும், பணிகளையும் கையாளு வது நல்லது. இடமாற்றம் இருக்கும். சிறுசி று அவமானங்களை சந்திக்க வேண்டியது வரும். குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டி வரும்.  உங்களுடைய படிப்பிற்கும், அனுபவத்திற்கும் தகுந்த வேலை கிடைக்க வில்லையே என சில நேரம் அஞ்சு வீர்கள்.

மாணவ-மாணவிகளே! கணிதப் பாடத்தில் அதிக அக் கறை காட்டுங்கள். டி.வி.பார்க்கும் நேரத்தை குறையு ங்கள். கிரிக்கெட் போன்ற கடினமான பந்துகளைக்  கொண்ட விளையாட்டுகளை தவிர்ப்பது நல்லது. கெட் ட நண்பர்களின் சகவாசத்தை தவிர்க்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் உங்கள் கவனத்தை முழுமையாகத் திருப்புவது நல்லது. பெற்றோருடனும்  கருத்து மோதல் வரும். கோபத்தை குறையுங்கள். இன் ஃபெக்ஷன், அலர்ஜி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங் கும். கல்யாண விஷயத்தில் அவசரம் காட்ட  வேண் டாம்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். கோஷ்டிப் பூசல்கள் வேண்டாம்.

கலைத்துறையினரே! சின்ன வாய்ப்புகளாக இருந்தா லும் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலிருந்து நல்ல வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! மரப்பயிர்களால் லாபம் உண்டு. பூச்சி, எலித் தொல்லையால் மகசூல் குறையும். இந்தப் புத் தாண்டு, உங்களை பல வகையிலும் அலைக்கழிக்க –

3. மிதுன ராசி நேயர்களே!

இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை அறிந்த நீங்கள், பணம், பதவி பார்த்து பழக மாட்டீர்கள். எந்த நிகழ்வுகளையும் தொகுத்து  கோர் வையாக வெளியிடுவதில் வல்லவர்கள். அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்க விரும்பாத நீங்கள், எதற் காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கமாட்டீர்கள்.  உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குடும்ப வருமானம் உயரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி  தங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதை கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளுக்கு நல்ல  வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தி ல் வேலை கிடைக்கும். பிள்ளைகள் உயர்கல்வி, உத் யோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வார்கள். ஷேர்  மூலமாகவும் பணம் வரும். முன்கோபம் குறையும். சாதுர்யமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லா வே லைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். அக்கம்-பக்கம்  வீட்டாரும் மதிப்பார்கள். முகம்மலரும். அழகு, இளமை கூடும். அரசால் ஆதாயம் உண்டாகும்.
அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும் சனிபகவா ன் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வழக்குகள் சாதகமாகும்.  இழு பறியாக இருந்த தள்ளிப் போன காரியங்கள் உடனடி யாக முடிவடையும். தைரியமாக சில முக்கிய முடிவுக ள் எடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை  பைசல் செய்வீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இரு சக்கர வாகனத்தை மாற்றி விட்டு நா ன்கு சக்கர வாகனம் வாங்கும் அமைப்பு உண்டு. . உங்களுடைய ராசியை சூரியன் பார்த்துக் கொண்டிரு க்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் உடல் உஷ் ணம் அதிகமாகும்.
கனவுத் தொல்லையும் வந்துபோகும். சில நேரங்களி ல் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். மற்றவர்களை திருத்துவதற்கு முயற்சி செய்து உங்கள் பெயரை நீங் கள்  கெடுத்துக் கொள்ள வேண்டாம். ராசிக்கு 8ல் செவ்வாய் மறைந்திருக்கும்போது இந்தாண்டு பிறப்ப தால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல், டென்ஷன் இருக்கும்.  தங்கையின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வி ல்லங்கம் வந்து விலகும். உங்கள் யோகாதிபதிகளான புதனும்,  சுக்கிரனும் ராசிக்கு 8ல் நிற்கும் போது இந்தா ண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்தி ருந்த வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென் று வருவீர்கள். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடன் உதவி  கிடைக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் நவீனமா க வாங்குவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். அவர் வழியில் உதவிகளும் உண்டு. 4ம் வீட்டில் ராகு  நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தாயாருட ன் கருத்து மோதல் வரும். அவரின் உடல்நிலை பாதி க்கும். வாகனம் அடிக்கடி பழுதாகி சரியாகும்.  கூடாப் பழக்க வழக்கங்களை தவிர்க்கப் பாருங்கள். லாகிரி வஸ்துக்களையும் தவிர்ப்பது நல்லது.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்பில் மதிக்கப்படுவீர்கள். திடீர் பத விகள், பெரிய பொறுப்புகள் தேடிவரும். ஜூலை  மாத ம் முதல் குரு 3ம் வீட்டில் நுழைவதால் ஒரே வேலை யை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தள்ளிப் போய்  முடியும். மற் றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக் காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து  ஏமாற வே ண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமத மாகி முடியும். தங்க நகைகளை கவனமாக கையாளு ங்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப்  பழகுங் கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். யாரு க்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன்  மோத ல்கள் வந்து போகும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணப்பற்றாக்குறை ஏற்படும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து  வெளி வருவீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலை ச்சல், செலவுகள் இருக்கும்.
சனி 6ல் நிற்பதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எதிரும், புதிருமாக பேசியவர்களெல்லாம்  வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். பெரிய பதவிக ளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலை கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை  முன்னி ன்று நடத்துவீர்கள். கல்யாண முயற்சிகள் நல்ல வித த்தில் முடிவடையும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகையெல்லாம் கைக்கு வரும். இந்தாண்டு  முழுக் க கேது 10ல் நீடிப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.
சிறுசிறு மரியாதைக் குறைவான சம்பவங்கள் அவ் வப்போது நிகழக்கூடும். கோயில் விசேஷங்களுக்கு தலைமைத் தாங்குவீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி  இடமாற்றங்கள், மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். சூரியன் ராசிக்கு 7ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்ப தால் மனைவிக்கு முதுகு, மூட்டு வலி வந்து  போகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வே ண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட் டாதீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள்.
வியாபாரிகளே! சில மாற்றங்களை கொண்டு வரு வீர்கள். சிலர் புது ஏஜென்சியும் எடுப்பீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளை யும்  புரிந்து கொண்டு அதற்கேற்ப தொழிலை மாற்று வீர்கள். எலெக்ட்ரானிக்ஸ், உணவு, போர்டிங், லாட்ஜி ங், துணி வகைகளால் லாபம் அதிகரிக்கும். பாக்கிகளு ம்  வசூலாகும். புதிதாக பங்குதாரரை சேர்ப்பீர்கள். பழைய பங்குதாரர்கள் விலகுவார்கள். நல்ல அனுபவ மிக்க வேலையாட்கள் வந்தமைவார்கள்.
உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகமாகும். உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் கேது நிற்பதால் உழை ப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என அவ்வப் போது  வருத்தப்படுவீர்கள். ஆனாலும், மூத்த அதிகாரி கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஒரு அதிகாரி உங்களுக்கு எதிராக இருந்தாலும் மற்றொரு அதிகாரி  உங்களுக்கு சாதகமாக இருப்பார். எதிர்பார்த் த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் அழைப்பு வரும். சம்பள பாக்கி  கைக்கு வரும். பதவி உயர்வையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

மாணவ-மாணவிகளே! மாநில அளவில் நீங்கள் அதிக மதிப்பெண்களை பெற்று பரிசு, பாராட்டுகள் பெறும ளவிற்கு யோகம் உள்ளது. இருந்தாலும் அலட்சியமா க  இருந்துவிடாதீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்திப் படித்தால் அரசின் உதவித் தொகை யுடன் நீங்கள் உயர்கல்வி தொடரும் யோகம்  உண்டா கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதலும், கல்வியும் இனிக்கும். வேலையும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவே றும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள்.  திரு மணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். சொந்தமாக வீடு, மனை வாங்குவீர்கள். உத்யோகத்தில் செல்வாக் குக் கூடும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்களிலிருந்து விடுப டுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பெரிய பத விகள், பொறுப்புகள் தேடிவரும். கலைத்துறையினரே !  உங்களுடைய யதார்த்தமான படைப்புகளுக்கு பரிசு, பாராட்டுகள் உண்டு. மக்கள் மத்தியில் பிரபலமடை வீர்கள்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். பக்கத்து நிலத்தை யும் வாங்குவீர்கள். மகளின் திருமணத்தை ஊரே மெச் சும்படி நடத்துவீர்கள். இந்த 2015ம் ஆண்டு உங்களுக் கு  லாப ஸ்தானத்தில் பிறப்பதால் எங்கும், எதிலும் வெற்றி வாகை சூடும் வருடமாக உங்களுக்கு அமையு ம்.

பரிகாரம் :
கோவில்பட்டியில் அருளும் செண்பகவல்லி அம்ம னை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திரும ணத்திற்கு உதவுங்கள்.


4. கடக ராசி நேயர்களே!

கூட்டுக் குடும்பமாய் வாழ விரும்பும் நீங்கள், அசைக்க முடியாத தெய்வ பக்தி உள்ளவர்கள். கற்பனையில் சிறகடித்து கதை, கவிதை வடிக்கும் நீங்கள்  யாருக்கு ம் கட்டுப்படாத சுதந்திர பறவைகள். உதட்டால் உளறா மல் இதயத்தால் பேசும் நீங்கள், குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்கள்.  உங்களுடைய ராசியிலேயே குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கொஞ்சம் வேலைச் சுமையும், படபடப்பும் இருந்து  கொண்டேயிருக்கும். இரண்டு, மூன்று முறை முயன்று சில காரியங்களை முடிக்க வேண்டியது வரும்.
தலைச்சுற்றல், வயிற்று வலி, வாயுக் கோளாறால் நெஞ்சுவலி வரும். பெரிய நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் சில நேரங்களில் தென்படும். ஆனால்,  மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கும்போது பெரிய ஆபத்து இல்லை என்பதை உணருவீர்கள். இருந்தா லும் நீங்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது  நல்லது. ஜூலை மாதம் முதல் உங்கள் ராசியை விட்டு குரு விலகுவதால் ஆரோக்யமும் அழகும் கூடும். நோய் பற்றிய பயம் விலகும். செப்டம்பர் மாதம் முதல்  உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும்.
வழக்குகள் சாதகமாகும். செப்டம்பர், அக்டோபர் மாத ங்களில் வாகனம் வாங்குவீர்கள். சிலர் நல்ல காற் றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள் .  சிலர் சொந்த வீடு வாங்கும் அமைப்பும் உண்டாகும். உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க ராகு தொடர்வதால் தைரியம் பிறக்கும். பெரிய  பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோல்வி மனப்பான்மை நீங்கும். உங்களை பற்றிய அவதூறு பேச்சுகளும் விலகும். இளைய சகோதர வகையில் செ லவுகள்  இருக்கும். சகோதரனின் திருமணத்தை முன் னின்று நடத்துவீர்கள். அரசு பதவிகள் கிடைக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும்.
ஜூலை மாதம் முதல் குரு 2ல் நுழைவதால் எதிர் மறை எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். குடும்பத்திலும் அமைதி உண்டாகும்.  அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வேலை கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க ராகு தொடர்வதால்  ஹிந்தி, கன்னடம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்க ள். அயல் நாட்டிலிருப்பவர்கள், அண்டை மாநிலத்தவ ர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பிதுர்வழி சொத் து  கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சொந் த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் எடுத்து நடத்து வீர்கள்.
பழைய இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் செல்வாக்குக் கூடும்.  உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆன்மி க ஈடுபாடு அதிகரிக்கும். சித்தர்கள், மகான்களின் ஆசி ப்பெறுவீர்கள்.  சனிபகவான் 5ம் வீட்டில் தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.  குல தெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலை ச்சல் அதிகரிக்கும்.
முக்கிய கோப்புகளை கையாளும் அலட்சியம் வேண் டாம். சாலைகளை கவனமாக நடந்துச் செல்லுங்கள். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய  வதந்திக ளும், விமர்சனங்களும் அதிகமாகும். மகளின் திரும ண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டா ரைப் பற்றி நன்கு விசாரித்து முடிப்பது நல்லது.  மக னின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். மனைவியை  மற்ற வர்கள் முன்னிலையில் குறைவாக பேச வேண்டாம்.
குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பணம், நகைகளையெல்லாம் வங்கி லாக்கரில் பாது காப்பாக வைத்துவிட்டு செல்லுங்கள். களவு போகக் கூடும்.  உங்களுடைய ராசிக்கு 7ம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், புதன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு  பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும். வழக்கு சாதகமாக திரும்பும். புதியவரின் நட்பால் பலனடைவீர்கள். பண ப்  புழக்கம் அதிகமாகும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்கும்போ து இந்த 2015ம் ஆண்டு பிறப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தாய்வழி உறவினர்களுடன்  சின்னச் சின்ன மோதல்கள் வரும். பிள்ளைகளிடம் அளவாகப் பேசுங்கள். உங்களுடைய பழங்கதைகளை யெல்லாம் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர் கள்.  ஜெனரேஷன் கேப் வராமல் பார்த்துக் கொள்ளுங் கள். தூக்கம் குறையும். குலதெய்வக் கோயிலுக்கு மற வாமல் சென்று வாருங்கள். உங்களுடைய ராசிக்கு 7ம்  வீட்டில் செவ்வாய், சுக்கிரன், புதன் அமர்ந்திருக்கு ம் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பொது அறிவு, மொழி அறிவுத் திறனையெல்லாம் வளர்த்துக் கொ ள்வீர்கள்.
வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். கணவன்-மனை விக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். முன்கோ பத்தை குறைத்துக் கொள்வது நல்லது. திருமணத்  தடை நீங்கும். பிள்ளை பாக்யம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர் கள். இந்தாண்டு முழுக்க கேது 9ம் வீட்டில் நீடிப்பதால்  தந்தையாருடன் பிணக்குகள் வரும். அவரின் ஆரோக் யத்தில் அக்கறை காட்டுங்கள். வருடத்தின் முற்பகுதி யில் செலவுகள் அடுத்தடுத்து வரும். திடீர்  பயணங்க ளும் அதிகரிக்கும்.
பிற்பகுதியில் ஓரளவு சேமிப்பீர்கள். வீடு, மனை வாங் குவதற்கு வங்கிக் கடன் உதவி கிட்டும். வாகனம் வாங் குவீர்கள். சூரியன் வலுவடைந்திருக்கும் நேரத்தில்  இந்தாண்டு பிறப்பதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். போட்டி, விவாதங்களில் வெற்றி கிட்டும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசாங் க  விஷயங்கள் சுலபமாக முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
வியாபாரிகளே! புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வே லையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர் கள். புது ஏஜென்சி கையெழுத்தாகும். பழைய பங்கு தாரரை  மாற்றுவீர்கள். வருடத்தின் முற்பகுதியில் லாபம் மந்தமாக இருந்தாலும், பிற்பகுதியில் லாபம் அ திகரிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் கடையை விரிவு படுத்தி,  அழகுபடுத்துவீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர், அக் டோபர் மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணி க்கை அதிகரிக்கும். தள்ளிப் போன வாய்ப்புகளும் கூடி வரும்.

உத்யோகஸ்தர்களே! ஜனவரி, பிப்ரவரியில் அலைச்ச லும், சின்னச் சின்ன மரியாதை குறைவான சம்பவங்க ளும் நிகழும். ஏப்ரல், மே மாதங்களில் உத்யோகத்தி ல்  திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். வருடத்தின் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதி காரியின் மனசு மாறும். சக ஊழியர்களால் இருந்து  வந்த இடையூறுகள் நீங்கும்.


மாணவ-மாணவிகளே! டி.வி. பார்த்துக் கொண்டேயி ருக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போது நீச்சல், சைக் கிளிங் செய்வது நல்லது. அறிவியல் பாடத்தில் கூடு தல்  கவனம் செலுத்துங்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் மோதிக் கொண் டிருக்க வேண்டாம். உங்களுடைய எண்ணங்களையு ம், கருத்துகளையும் பொறுமையாக எடுத்துச்  சொல்லு ங்கள். வருடத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு வேலை கிடைக்கும். காதலும் கனிந்து வரும். திருமணமும் கூடி வரும்.
அரசியல்வாதிகளே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தொகுதியில் செல்வாக்கு கூடும். சகாக் கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப்பெருகும்.
விவசாயிகளே! மாற்றுப் பயிர், மூலிகைப் பயிர், தோட் டப் பயிர் எல்லாம் லாபம் தரும். எலித் தொல்லை குறையும்.

கலைத்துறையினரே! சம்பளப் பாக்கி கைக்கு வரும். இளைஞர்கள் மூலமாக நல்ல வாய்ப்புகள் வரும். இந்தப் புத்தாண்டு கடந்த வருடத்தில் இருந்த கஷ்ட,  நஷ்டங்களையெல்லாம் தீர்ப்பதாகவும், முற்பகுதியி ல் சின்னச் சின்ன இடையூறுகளை தரக் கூடியதாகவும், மையப்பகுதியில் ஓரளவு மகிழ்ச்சியையும், இறுதிப்  பகுதியில் எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களையும் தருவதாகவும் அமையும்.

பரிகாரம் :
திண்டிவனம் திந்திரிணீஸ்வரரை தரிசித்து வணங்கி வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

5. சிம்ம ராசி நேயர்களே!

புரட்சியையும் புதுமையையும் விரும்பும் நீங்கள், தொலை நோக்குடன் சிந்திப்பீர்கள். அடிக்கிற கை அணைப்பது போல கோபப்பட்டாலும், அக்கம்  பக்க முள்ளவர்களுக்கு வாரி வழங்குவீர்கள். சமயோஜித புத்தி கொண்ட நீங்கள், விவாதமென வந்து விட்டால் வெளுத்து வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு  9வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. செலவுகள் கட்டுக்கடங்காமல் போ னாலும் அதற்கேற்ப வருமானம் இருக்கும்.  தன்னம்பி க்கை அதிகமாகும். எதிர்ப்புகளும் குறையும். நல்லவ ர்களின் நட்பு கிடைக்கும்.
தந்தையார் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வீடு வாங்குவ தற்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். உங்க ளுடைய  ராசிக்கு 12ல் குரு நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் தூக்கம் குறையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத செலவுகளால் அவ்வ ப்போது  திணறுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்க ளுடைய நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் உங்க ளுக்கு அவ்வப்போது அன்புத் தொல்லை தருவார்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. பல் வலி, முதுகு வலி வந்து போகும்.
வாயுப் பதார்த்தங்களையும், கொழுப்புச் சத்துள்ள உணவுகளையும் தவிர்க்கப் பாருங்கள். ஜூலை மாதத் திலிருந்து உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால் ஆரோக்யம்  குறையும். வேலைச்சுமையும் அதிகமாகு ம். சில நேரங்களில் அலுத்துக் கொள்வீர்கள். வருங் காலம் பற்றிய கவலைகள் தோன்றும். சிலரை நினை த்து  ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள்.  இந்தாண்டு முழுக் க சனி 4ம் வீட்டில் தொடர்வதால் கோபம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். மற்றவ ர்கள்  உங்களை தரக்குறைவாகப் பேசினாலும் நீங்கள் அதற்கு பதிலடித் தராமல் இருப்பது நல்லது. பழையப் பிரச்னைகளை சிலர் கிளறுவார்கள்.
வழக்கால் நிம்மதி குறையும். சில நேரங்களில் சாட்சிக்காரரை விட சண்டைக்காரரே மேல் என்பதை உணருவீர்கள். சின்னச் சின்ன பிரச்னைகளையெல்லா ம் பேசி  முடிக்கப்பாருங்கள். ஈகோ பிரச்னையால் நீதி மன்றம் செல்ல வேண்டாம். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அலைபேசியில்  பேசிக் கொண்டு வாகனத்தை இயக் காதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நெருங் கிய உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.  உங்கள் ராசிநாதன் சூரியன் 5ம் வீட் டில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பிள்ளைக ளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல் லது.
ஆனால், பாவ கிரகங்களின் பார்வை சூரியன் மீது படாததால் பிள்ளைகளுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும். இந்தப் புத்தாண்டு பிறக்கும்போது சுக்கிரன் 6ல்  மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், பிரிவுகள் வரக்கூடும். வீண் சந்தேகத் தாலும், சிலரின் நட்பாலும் உங்களுக்குள் பிரிவுகள்  வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன பிர ச்னைகளுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். மனம் விட் டுப்பேசி அவற்றை உடனுக்குடன் தீர்த்துக் கொள்வது  நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள்.     
இந்தாண்டு முழுக்க ராகு 2ம் வீட்டில் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். அவ் வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சிலருக்கு நல்ல து  சொல்லப் போய் பொல்லாப்பாக முடிய வாய்ப்பிரு க்கிறது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வே ண்டாம். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. கேதுவும்  இந்தாண்டு முழுக்க 8வது வீட்டிலேயே நீடிப்பதால் கனவுத் தொல்லை அதிகமாகும். ஜுலை மாதத்திலிரு ந்து உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால் நேரம் தவறி  சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். புளி ஏப்பம், அல்சர் வரக்கூடும். அவசரப்பட்டு வாக்குறுதி அளித்து விட்டு பிறகு அவதிபடவேண்டாம்.
யாரிடமும் பணம், நகை இரவல் தந்து ஏமாறாதீர்கள். பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் மனதில் வந்து போகும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது  நல்லது. மஞ்சள் காமாலை வரக்கூடும். குடிநீரை காய் ச்சி அருந்துங்கள். பூர்வீகச் சொத்து பிரச்னை தலையி டாமல் இருப்பது நல்லது. மகளின் திருமணம் சற்று  தாமதமாகி முடியும். மகனுக்கு உயர்கல்வி, உத்யோக  த்தின் பொருட்டு உங்களை விட்டு பிரிவார். உங்களை யாரும் மதிக்கவில்லை, யாருக்கும் முக்கியத்துவம்  தருவதி ல்லை என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப் படுவீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொ ப்பமிட்டு வைக்க வேண்டாம்.
இந்தாண்டு முழுக்க சனி 4ம் வீட்டில் தொடர்வதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையு ம்.  தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப்  பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசி நாதன் சூரியன் 5ம் வீட்டில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்  பிடிப்பது நல்லது. கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள்.
ஆனால், பாவ கிரகங்களின் பார்வை சூரியன் மீது படாததால் பிள்ளைகளுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்கிரன் 6ல்  மறைந்திருப்பதால் மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் செவ்வாய் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பெரிய  கடனில் சிறு பகுதியை பைசல் செய்வதற்கான வழி, வகைப் பிறக்கும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக் கு வரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும்  பணியை தொடங்குவீர்கள்.
வங்கிக் கடன் உதவி கிட்டும். இந்தாண்டு முழுக்க ராகு 2ம் வீட்டில் தொடர்வதால் பல் வலி, காது வலி, வந்து போகும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய  வாய்ப்பிரு க்கிறது. பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கேதுவும் இந் தாண்டு முழுக்க 8வது வீட்டிலேயே நீடிப்பதால்  யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். ஒருவித படப்படப்பு, தாழ்வு மனப்பான்மை, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். உங்களை நீங்களே குறைத்து  மதிப்பிடாதீர்கள்.
வியாபாரிகளே! சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மை யால் லாபம் குறையும். ரசாயனம், மருந்து, ரியல்  எஸ் டேட் மூலமாக பணம் வரும். பெரிய அளவில் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். கூட்டுத் தொழிலையும் தவிர்க்கப் பாருங்கள். இதற்கு  முன் கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களை அனுசரித்துப் போவது நல்லது.
உத்யோகஸ்தர்களே! அதிகாரிகளை அரவணைத்துப் போங்கள். சக ஊழியர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். முக்கிய ஆவணங்களை கவனமாக  கை யாளுங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்தி டும் போது மூத்த அதிகாரிகளை அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளை கலந்தாலோசிப்பது நல்லது.  விரும்பத்தகாத இடமாற்றம் இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.
மாணவ-மாணவிகளே! உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தவறான பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை  தவிர்ப்பது நல்லது. கணிதம், ஆங்கில பாடங்களில் அதிக அக்கறை காட்டுங்கள்.
கன்னிப் பெண்களே! கோபத்தை குறையுங்கள். எல் லோரும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாறாதீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள்.  காதலு க்கும், நட்புக்கும் உள்ள வித்யாசத்தை நீங்கள் உணர்ந் து கொள்வது நல்லது. திருமணம் தள்ளிப்போய் முடிவடையும்.
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியி னரை தாக்கிப் பேசி வழக்குகளில் சிக்கிக் கொள்ளா தீர்கள்.
விவசாயிகளே! மரப்பயிர்களால் லாபம் உண்டு. பூச்சி த் தொல்லை இருக்கும். பக்கத்து நிலக்காரருடன் வாய்க்கால், வரப்புச் சண்டை வந்துபோகும்.
கலைத்துறையினரே! கன்னடம், தெலுங்கு மொழிக ளால் புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். இந்த 2015 ம் ஆண்டு உங்களுக்கு ஆரோக்ய குறைவையும், மன நிம்மதியற்ற போக்கையும், பணத்தட்டுப்பாட்டையும் தந்தாலும் தெய்வ நம்பிக்கையாலும்,  விடாமுயற்சி யாலும், அனுபவ அறிவாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

பரிகாரம் :

காஞ்சிபுரம் வரதராஜரை தரிசித்து வணங்கி வாருங் கள். ஆரம்பக்கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன் றளவு உதவுங்கள்.


6. கன்னி ராசி நேயர்களே!

கோள்கள் கூட பாதை மாறலாம், ஆனால், குறிக்கோ ளிலிருந்து மாறமாட்டீர்கள். தவறு செய்ய வாய்ப்பு இருந்தும் தவறமாட்டீர்கள். பழைய நினைவுகளை  அவ்வப்போது அசைபோடும் நீங்கள், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க தயங்க மாட்டீர்கள். குழந்தையின் அழுகையையும் சங்கீதமாய் பார்க்குமள விற்கு  கலை ஞானம் உங்களுக்கு உண்டு. உங்களு டைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு நிற்கும் போது இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் தொட்ட காரியங்கள்  துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும். எதிர் பார்ப்புகள் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு, மனை வாங்குவீர்கள்.

சிலர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசமும் கோலாகல மாக செய்வீர்கள். வாகன வசதியும் பெருகும். எதிர் மறை எண்ணங்கள் விலகும். அரசு காரியங்கள் நல்ல  விதத்தில் முடிவடையும். பெரிய பதவிகள், பொறுப்பு கள் தேடி வரும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். படிப்படியாக குடும்ப வருமானமும் உயரும். சிலர்  உத்யோகத்தில் இருந்துகொண்டே பகுதி நேரமாக வியாபாரம் தொடங்க வாய்ப்பிருக்கிறது. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சொத் துகள்  வாங்குவதன் பொருட்டு புது கடன் வாங்குவீ ர்கள். குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். பிள்ளைக ளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும்.

ஜூலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் மறைவதால் அநாவசியச் செலவுகள் அதிகமா கும். எதிர்பார்த்த பணம் சற்றே தாமதமாக வந்து  சேரும். பயணங்கள் உண்டு. உங்கள் ராசியிலேயே ராகு நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தூக் கம் குறையும். கனவுத் தொல்லை அதிகமாகும். சில  நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர் கள். சிலர் உங்களை தவறாக பேசுவதற்கும்,   செய ல்படுவதற்கும் தூண்டிவிடுவார்கள். அப்படிப்பட்ட தூண்டுதல்களை நீங்கள் தவிர்ப்பது நல்லது.  

3ம் வீட்டில் சனிபகவான் வலுவடைந்து நிற்கும் நேர த்தில் இந்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். முக்கிய முடிவுகளெல்லாம் தன்னிச்சையாக எடுப்பீ ர்கள்.  பெரிய பொறுப்புகளுக்கெல்லாம் தலைமை தாங் குமளவிற்கு உங்களுடைய ஆளுமைத்திறன் அதிரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். பொது  விழாக்கள், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். இழு பறியாக இருந்து வந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களின் யோகாதிபதியான சுக்கிரன் 5ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யமும் கிடைக்கும். மனைவிவழியில் சில உதவி கள் உண்டு. மனைவிக்கு வேலை கிடைக்கும். பிதுரார் ஜித  சொத்துகள் கைக்கு வந்து சேரும். பாகப்பிரிவி னை நல்ல விதத்தில் முடிவடையும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, கூடுதல் தளம் கட்டுவது போன்ற  முயற்சிகள் பலிதமாகும். சமையலறை, படுக்கை அறையை நவீனமாக்குவீர்கள். உயர்தர மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களுக்கு அழ கு,  இளமைக் கூடும். எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

5ம் வீட்டிலேயே செவ்வாய் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உங்களுடைய  ஆலோச னைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர் களின் புதிய முயற்சிகளெல்லாம் வெற்றியடையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மகனுக்கு  அய ல்நாட்டில் நிரந்தர குடியுரிமை கிடைக்க வாய்ப்பிருக் கிறது. உங்கள் ராசிக்கு 8வது ராசியில் இந்தப் புத்தா ண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகள்  அதி கமாகிக் கொண்டே போகும். அடிக்கடி விவாதங்களும் வரும்.

சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். பெருமைக்காக செலவுகளை இழுத்துப்  போட்டுக் கொள்ளாதீர்கள். ஜூலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் மறை வதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும். வீண் வறட்டு  கௌரவத்திற்காக கையிருப்பை கரைக்காதீர் கள். எதிர்பார்த்த பணம் சற்றே தாமதமாக வந்து சேரும். பயணங்கள் உண்டு. குடும்பத்தில் சாதாரண  விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டுக் கொள்ளா மல் விட்டுக் கொடுத்து போங்கள்.

நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடி யாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். திட்டமிட்டது ஒன் றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். புகழ் பெற்ற  புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். 3ம் வீட்டில் சனிபகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந் தாண்டு பிறப்பதால் வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு  கிடைக்கும். மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். சில நேரங்களில் எதிரிகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து ஒருபடி உயரும்.  பிறமொழியினர், வேற்று மாநிலத்தவர்கள், வெளிநாட் டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு.

ஷேர் மூலம் பணம் வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். போட் டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலைக்கு  வி ண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். பூர்வீகச் சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள்.  அரசாங்க காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடி வடையும். இந்தாண்டு முழுக்க கேது 7ல் நீடிப்பதால் மனைவியுடன் சந்தேகத்தால் பிரச்னைகள் வெடிக்கு ம்.  அவருக்கு மாதவிடாய்க் கோளாறு வந்துபோகும். மனைவிவழி உறவினர்களுடனும் நிதானமாகப் பேசு வது, பழகுவது நல்லது. சூரியன் சாதகமாக இருப்ப தால் புகழ்  பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீ ர்கள்.

வியாபாரிகளே! லாபம் உண்டு. 3ம் வீட்டில் சனி நிற்பதால் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். பண உதவிகளும் கிடைக்கும். ஸ்டேஷனரி, கல்விக்  கூடங்கள், போர்டிங், லாட்ஜிங், கன்ஸ்ட்ரக்ஷன், டிராவல் ஏஜென்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரு வார்கள்.  பங்குதாரர்கள் சில நேரங்களில் முரண்டு பிடித்தாலும் இறுதியில் உங்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் லாபம்  தரும். அதாவது ஏற்றுமதி-இறக் குமதி வகைகளால் லாபம் உண்டு. மார்ச், ஏப்ரல் மாத ங்களில் சிறுசிறு விபத்துகள், இழப்புகள், ஏமாற்றங்க ளும் வரக்கூடும்.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். அதிகாரி கள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். சக  ஊழியர்களும் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொ ள் வார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பொறுப்பு, பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த  இடமாற்றம் கிட்டும். புதுச் சலுகைகளும் கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். பதவி உயர்வு உண்டு. அதிக சம்பளத்துடன் கூடிய வேறு நல்ல  வாய்ப்பு களும் வரும்.

மாணவ-மாணவிகளே! படிப்பிலும் முன்னேறுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள். வகுப்பாசிரிய ரின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். மாநில அளவில்  அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். நல்லவர்கள் அறிமுகமா வார்கள். பெற்றோரும் உங்களை புரிந்து கொள்வார்க ள்.  அவர்களுக்கு தகுந்தாற்போல் நீங்களும் கொஞ்சம் வளைந்து வருவீர்கள். வேலை கிடைக்கும். உங்கள் ரச னைக்கேற்ப நல்ல வரனும் அமையும். சிலர் அய ல்நாடும்  செல்வீர்கள்.

அரசியல்வாதிகளே! இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பிற்கு இப்போது கை மேல் பலன் கிடைக்கும். கட்சியிலும் செல்வாக்கு கூடும். மக்கள் மத்தியில்  பிரபலமாவீர்கள். கலைத்துறையினரே! வெளிவராம ல் இருந்து வந்த உங்களுடைய படைப்புகள் வீர்யமாக வெளிவரும். வெற்றியும் அடையும். உங்களுடைய  தகுதியும் உயரும்.

விவசாயிகளே! புதிய பயிர்கள், மாற்றுப் பயிர் மூலமா க லாபமடைவீர்கள். அடகிலிருந்த பத்திரம், நகைக ளை மீட்பீர்கள். இந்தப் புத்தாண்டு உங்களை சாதிக்க  வைப்பதாகவும், எதிர்பாராத திடீர் யோகங்களை தரு வதாகவும் அமையும்.

பரிகாரம் :

திருச்சி மலைக்கோட்டையில் அமைந்துள்ள தாயுமா னவசுவாமியை தரிசித்து வாருங்கள். வயதானவர்க ளுக்கு கம்பளியும், காலணிகளும் வாங்கிக் கொடுங் கள்.


7. துலாம் ராசி நேயர்களே!

எதையும் ஆற, அமர யோசித்து முடிவெடுக்கும் நீங்கள் பழி பாவத்திற்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். நுண்ணறிவும், பேச்சு சாதுர்யமும், எடுத்த  வேலை யை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள், மாடாக உழைத்து ஓடாக தேய்பவர்கள். உங்கள் ராசி நாதன் சுக்கிரன் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன்,   உங்கள் பாக்யாதிபதியான புதனும் 4ல் நிற்கும் நேர த்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக் கும்.  தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவ டையும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வரும்.

கைமாற்றாக வாங்கி விட்டு திருப்பித் தர முடியாமல் திணறினீர்களே! அந்த தொகைகளையும் தந்து உங் களுடைய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வீர்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நட்பு வட்டம் விரிவ டையும். உள்மனதில் இருந்து வந்த குழப்பங்களும், தாழ்வு மனப்பான்மையும் நீங்கும். உங்களுடைய ராசிக்கு  7வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய கடின உழை ப்பையும்,  வெள்ளை மனதையும் இனிமேல் மனைவி புரிந்து கொள்வார்.

உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டே யிருப்பதால் அலர்ஜி, தொற்றுநோய்களிலிருந்து விடுபடுவீர்கள். பல நேரங்களில் சோர்வாகவும்,  களைப்பாகவும் காணப்பட்டீர்களே! அந்த நிலை மாறும். இனி உற்சாகம் பிறக்கும். தைரியம் கூடும். சவாலான காரியங்களைக் கூட எடுத்து செய்வீர்கள்.
ஜூன் மாதம் வரை உங்களுடைய ராசிக்கு 10ம் வீட்டி லேயே குரு நிற்பதால் அதுவரை சிறுசிறு அவமானங் களும், மன உளைச்சல்களும், எதிர்காலம் பற்றிய  பயமும் இருக்கும். உங்களைப்பற்றி அவ்வப்போது நீங் களே தாழ்த்திக் கொள்வீர்கள். சிலர் உங்களை குறைத்து மதிப்பிடுவார்கள்.

செலவுகளும் அதிகமாகும். தவிர்க்க முடியாத பயண ங்களாலும் உடல் நிலை பாதிக்கும். அரசு காரியங் களில் அலட்சியம் வேண்டாம். அரசுக்குச் செலுத்த  வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்துங்கள். சொத்து வரியை மறவாமல் செலுத்துங்கள். உங்கள் சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள்,   ஆவணங்களை யெல்லாம் பாதுகாப்பாக எடுத்து வையுங்கள். புறநகர் பகுதியில் வீட்டு மனை, காலி மனை வாங்கி வைத்தி ருப்பவர்கள் அவ்வப்போது சென்று  அதைப் பார்த்து வருவது நல்லது. சிலர் அதை ஆக்ரமிக்கக் கூடும்.

ஏழரைச் சனியில் பாதகச் சனி உங்களுக்கு நடை பெற்று கொண்டிருப்பதால் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கணவன்-மனைவிக்குள் இருக்கும்  கசப்புணர்வுகளை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பண விஷயத்திலும் கறாராக இருங்கள். மற்றவர்க ளுக்காக சாட்சி கையொப்பமிட வேண்டாம். பல், கண், காது  வலி வந்துபோகும். சிறுசிறு விபத்துகள் வரக் கூடும். லேசாக தலைச்சுற்றல் வரும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை  நம்பி பெரிய காரியங்களில் ஈடுபடாதீர் கள்.  

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 4ம் வீட்டில் அமர்ந்திருப் பதுடன், உங்கள் பாக்யாதிபதியான புதனும் 4ல் நிற் கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்  தொலை நோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வரு வார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை  உரு வாகும். தந்தையாருக்கு இருந்த நோய் விலகும். அவ ருடனான கசப்புணர்வுகளும் நீங்கும். கல்யாணப் பேச்  சு வார்த்தை சுமுகமாக முடியும். புதிதாக வாகனம்  வாங்குவீர்கள். பழைய நகையை மாற்றி சிலர் புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும்.

சிலர் வீட்டில் கூடுதல் தளம் அமைப்பீர்கள். ஜூலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நுழைவதால் சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும்,  வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தி முன்னேறு வீர்கள். வேலைச்சுமையும் குறையும். கடினமான வே லையை கூட இனி எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த  வகையில் பணம் வரும். வி.ஐ.பிகளின் வீட்டு விஷே சங்களில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை தாக்கிப் பேசியவர்கள் இனி புகழ்வார்கள்.  ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்று கொண்டிருப்பதால் கண் பார்வைக் கோளாறு வந்து நீங்கும்.

காலில் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைக ளிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை  தவிர்ப்பது நல்லது. எந்த விஷயமாக இருந்தாலும் நீங் களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத் தரகர்களையோ, நண்பர்களையோ நம்பி ஏமாற  வேண்டாம்.  இந்தாண்டு முழுக்க ராகு 12ம் வீட்டில் நிற்பதால் தூக்கம் குறையும். திடீர் செலவுகள் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும். 6ல் கேது நிற்ப தால் வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் அடங்குவா ர்கள். எதிர்ப்புகள் குறையும். பழைய கடனில் ஒருப குதியை  பைசல் செய்ய வழி வகை பிறக்கும். சமு தாயத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அந்தஸ்து ஒருபடி உயரும். ஷேர் மூல மாக பணம்  வரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரிகளே! கடையை விரிவுபடுத்துவீர்கள். பண உதவியும் கிட்டும். பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழ  க்கில்  நல்ல தீர்ப்பு வரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். செல்வாக்குமிக்கவர்கள் பங்குதாரர்களாக வந்து சேருவார்கள். ஏற்றுமதி-இ றக்குமதி,  உணவு, எலெக்ட்ரானிக்ஸ், கன்ஸ்ட்ரக்ஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். தொந்தரவு தந்த  அனுபவமில்லாத வேலையாட்களை நீக்கிவிட்டு நல்லவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஜூலை மாதத்திலிருந்து பற்று வரவு உயரும். புதுக் கிளைகள்  தொடங்குவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! எவ்வளவுதான் உழைத்தாலும் நல்ல பெயர் இருக்காது. உங்களுடைய உழைப்பு மேலதிகாரியின் கவனத்திற்கு செல்லாமலேயே இருக் கும்.  இடையில் இருக்கும் அதிகாரிகள் உங்களை பக டைக் காயாக உருட்டுவார்கள். உங்களிடம் அதிக வே லை வாங்குவார்கள். ஆனால், மூத்த அதிகாரிகள் உங்களிடம்  பாசமாக நடந்து கொள்வார்கள். ஜூன் மாதம் வரை உத்யோக ஸ்தானமான 10ம் வீட்டிலேயே குருபகவான் நிற்பதால் அதுவரை அலைச்சலும், சின்னச் சின்ன  அவமானங்களும், வேலை இழப்பும் ஏற்படும். தினந்தோறும் இன்றையதினம் வேலையில் நீடிப்போமா, நீடிக்க மாட்டோமா என்ற ஒரு கவ லையும், சந்தேகமும்  இருந்துக் கொண்டேயிருக்கும். ஜூலை முதல் குரு லாப வீட்டில் நுழைவதால் அதுமுதல் உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். தொல்லை கொடுத்து வந்த  அதிகாரி மாறுவார். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பளமும், சலுகைகளும் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! ஏழரைச் சனி நடைபெறுவதா ல் விடைகளை எழுதிப் பாருங்கள். வேதியியல், க ணிதப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  சமன்பாடுகள், சூத்திரங்களையெல்லாம் அடி க்கடி சொல்லிப் பார்த்து எழுதிப் பாருங்கள். கெட்ட எண் ணங்களை தவிர்க்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடை க்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. சிலருக்கு அரசு  வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஜூலை மாதம் முதல் முன்னேற்றம் உண்டு. திருமணம் கைகூடி வரும் .

அரசியல்வாதிகளே! ஜூலை மாதம் முதல் பெரிய பதவிகள் கிடைக்கும். தேர்தலிலும் வெற்றி உண்டா கும். தலைமையின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

கலைத்துறையினரே! வருடத்தின் பிற்பகுதியில் உங்க ளுக்கு பெரிய வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! தண்ணீர் பிரச்னை தீரும். மகசூல் பெருகும். ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறு வீர்கள். ஆகமொத்தம் இந்த 2015ம் ஆண்டு முற்பகுதி  உங்களுக்கு அலைச்சலையும், எதிர்ப்புகளையும், ஏமா ற்றங்களையும் தந்தாலும் ஜூலை முதல் பணவரவை தரும். அதன் மூலம் நிம்மதியையும் தரக் கூடியதாக  இருக்கும்.  

பரிகாரம் :

கும்பகோணம் -ஆடுதுறையில் அருளும் ஆபத்சகாயே ஸ்வரரை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்க ளுக்குச் சென்று உதவுங்கள். 


8. விருச்சிக ராசி நேயர்களே!

முயற்சியை முதுகெலும்பாக கொண்டவர்களே. குடி சையில் வாழ்ந்தாலும், கோபுரமாய் சிந்திப்பவர்களே. எதிலும் அழகையும், நேர்த்தியையும் விரும்பும் நீங்க ள்,  பாரம்பரியத்தை விட்டு கொடுக்க மாட்டீர்கள். பண ம், பதவி பார்த்து பழகாமல் அனைவரையும் அளவுக்கு அதிகமாக நேசிப்பீர்கள். உங்களுடைய ராசியை  குரு பகவான் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அழகும் ஆரோக்யமும் கூடும். அறிவுப்பூர்வமாக யோசிப்பீர்கள்.  உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் கொஞ்சம் நிதானித்து எதையும் செய்யத் தொடங்குவீர்கள்.
உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பழைய கடனை தீர்க்க வழி பிறக்கும். நட்பு வட்டம் விரிவடையும். தொட்ட காரியங்கள்  துலங்கு ம். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி முக்கிய காரிய ங்களை முடிப்பீர்கள். தைரியமாக சில பெரிய முடிவு கள் எடுப்பீர்கள். சிலருக்கு ஷேர் மூலமாக பணம்  வரு ம். பெரிய பதவிகளும் தேடி வரும். குடும்பத்தில் கண வன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை பாக்யம் உண்டாகும்.    குரு உங்கள் ராசிக்கு  9ம் வீட்டில் ஜூன் மாதம் வரை தொடர்வதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்கும் அமைப்பு உருவாகும்.
வங்கிக்கடன் உதவியும் கிட்டும். அதிக வட்டிக்கு வாங் கியிருந்த தொகையை பைசல் செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.  தோல் வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால், ஜென்மச் சனி நடைபெற்று கொண்டிருப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள்.  மற்றவர்களுக்காக ஜாமீன், கேரன்டர் கையொப்பமிட வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். குடும்ப அந்தரங் க விஷயங்களை வெளியாட்களிடம்  சொல்லிக் கொ ண்டிருக்காதீர்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டு ங்கள். நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
மறதியால் செல்போன், விலை உயர்ந்த பொருட்களை இழந்துவிடாதீர்கள். திருட்டு பயம் உண்டாகும். குடும் பத்தினருடன் வெளியூருக்கு செல்லும்போது நகை,  ரொக்கங்களை பத்திரப்படுத்திவிட்டுச் செல்வது நல்ல து. ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வயிற்றுக் கோளாறு, நெஞ்சு வலி,  நீரிழிவு நோய் வரக்கூடும். உணவுக் கட்டுப்பாடு தே வை. லாகிரி வஸ்துக்களை தவிர்க்கப் பாருங்கள். இல வசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களை  தொற்ற வாய்ப்பிருக்கிறது. உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய  திட்டங்கள் நிறைவேறும்.
பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழப்பங்க ள், தடுமாற்றங்கள் நீங்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரியின் திருமணத்தை முன்னின் று  நடத்துவீர்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் வகைகளால் லாபம் வரும். பூர்வீக சொத்துப் பிரச் னைகளை தீர்க்க வழி, வகை பிறக்கும். ஆனால், 5ம் வீட்டில்  கேது நிற்பதால் பூர்வீக சொத்து பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தாமதமாக முடியும். சொந்த ஊரில் கோயில் கட்டுவது, ஊருக்கு நல்லது  செய்வது, குடிநீர் அமைத்துத் தருவது போன்ற முக்கிய காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும்.
பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவ்வப்போது கனவுத் தொல்லை வந்து நீங்கும். தாய்வழி உறவின ர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வருடம்  பிறக்கும்போது சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. அவருக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. மகளுக்கு  நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல துணை அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி  கட்டும் முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.
சூரியன் சாதகமாக இல்லாததால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப் பாரு ங்கள். ராகு இந்தாண்டு முழுக்க லாப வீட்டில்  தொடர் வதால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வெளி நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உங்க ளுக்கும் அயல்நாட்டில் வேலை கிடைக்க  வாய்ப்பிரு க்கிறது. வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்கள்  ரசனைக் கேற்ப வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். நீண்ட நாட்களாக செல்ல  வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலாத் தல ங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். ஜூலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில்  நுழைவதால் சின்ன சின்ன மரியாதைக் குறை வான சம்பவங்கள் நிகழக்கூடும். அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். கடன் பிரச்னை யால்  சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்து விடு மோ என்ற அச்சமும் இருந்து கொண்டேயி ருக்கும்.
அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சிலர் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். நெருங்கியவர்களாக  இருந் தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்க வோ வேண்டாம். எவ்வளவு  பணம் வந்தாலும்  சேமிப் புகள் கரையும். பிள்ளைகளின் பொறுப் பில்லாத் தன த்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்.
வியாபாரிகளே! அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப சில சீர்த்திருத்தங்களை செய்வீர்கள். கமிஷன்,  புரோ க்கரேஜ், மருந்து, உணவு வகைகளால் லாபம் அதிகரி க்கும். ஜூன் மாதம் வரை குரு நன்றாக இருப்பதால் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ரெட்டிப்பு  லாப ம் உண்டு. வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொ ள்வார்கள். ஆனால், ஜூலை மாதம் முதல் குரு சாத கமாக இல்லாததால் பெரிய முதலீடுகள் வேண்டாம். புதிய பங்குதாரர்களை சேர்க்க வேண்டாம். பெரிய மு தலீடுகள் செய்ய வேண்டாம். ஏழரைச் சனி நடைபெ றுவதால் வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்து க் கொள்ளுங்கள்.
உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். அதிகாரி கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். புது சலுகைகள்  கிடைக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். ஆனால், ஜூலை மாதத்திலிருந்து குரு 10ல் நுழைவதால் இடமாற்றமு ம்,  அதிகாரிகளுடன் மோதல்களும், சின்ன சின்ன மரி யாதை குறைவான சம்பவங்களும் வந்து போகும். உங்களை விட வயதில் குறைந்த, அனுபவத்தில்  கு றைவானவர்களுக்கு கீழ் நீங்கள் வேலை பார்க்க வேண் டி வரும். ஜூலை மாதம் முதல் உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து போக வேண்டிய சூழ்நிலை  உருவாகும்.
விவசாயிகளே! ஏழரைச் சனி நடைபெறுவதால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபப்படா தீர்கள். கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். முத ல்  வரிசைக்கு முன்னேறுங்கள். வகுப்பாசிரியர் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிர்பார்த்தபடி மதிப்பெண் பெற்று விரும்பிய நிறுவன த்தில்  உயர்கல்வி மேற்கொள்வீர்கள்.
கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நல்ல வேலை கிடைக்கும். உயர்கல்வியில் முன்னே ற்றம் உண்டு.  ஏழரைச்சனி நடைபெறுவதால் காதல்  விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். போலியான பேச்சில் ஏமாந்து விடாதீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்களுடைய புதிய திட்டங்க ளையும், கடின உழைப்பையும் மக்கள் பாராட்டுவார் கள். எதிர்க்கட்சியினருடன் மோதல் வரும். ஜூலை  மாதத்திலிருந்து கவனமாக இருங்கள். வீண்பழிகள் வரும்.

கலைத்துறையினரே! வருடத்தின் முற்பகுதி புதிய வாய்ப்புகள் கூடி வரும். மூத்த கலைஞர்களின் நட்பா ல் ஆதாயமடைவீர்கள்.
விவசாயிகளே! வருடத்தின் முற்பகுதியில் விளை ச்சல் ரெட்டிப்பாகும். பிற்பகுதியில் மகசூல் மந்தமாக இருக்கும். பம்ப்செட் பழுதாகி சரியாகும். கரும்பு, தோ ட்டப்  பயிர்களால் லாபமடைவீர்கள். இந்தப் புத்தாண் டு அவ்வப்போது உங்களை ஆழம் பார்த்தாலும், கடின உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் உங்களை வெற்றியடையச் செய்யும்.
பரிகாரம் :
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரரை தரிசித்து வணங் கி வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு இயன்றளவு உதவுங்கள்.


9. தனுசு ராசி நேயர்களே!

வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசி உண்மை களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நீங்கள், சில சமயங்களில் பலருக்கு எதிரியாகவே  தெரிவீர்கள். தலைமைப் பண்பு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களை வழி நடத்திச் செல்வதில் வல்லவர்கள். போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களு ம்  நீங்கள்தான். உங்களுடைய ராசிக்கு 2வது வீட்டில் புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்த 2015ம் ஆண்டு பிறப்பதால் எல்லா  வகையிலும் நீங்கள் முன்னேறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

சிக்கல்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்ட றிந்து அதைத் தீர்ப்பீர்கள். இதமான பேச்சால் முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். பணவரவு பலவகையி லும்  உண்டு ஆனால், செலவினங்களும் கட்டுக்கடங் காமல் போகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். வழ க்குகளை பேசித் தீர்க்க வழி வகை கிடைக்கும்.  மன இறுக்கங்கள் குறையும். வீட்டில் கூடுதல் தளம் அமைப்பீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 5ம்  வீட்டில் சந்திரன் நின்று கொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.

உறவினர், நண்பர்களுடன் இருந்த உரசல் போக்கு நீங்கும். புதிய பாதையில் பயணிப்பீர்கள். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுபவர்கள் அறிமுகமாவார்க ள்.  அயல்நாட்டிலிருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களுடைய ராசி நாதன் குரு 8வது வீட்டில் மறைந்து கிடக்கும்போது இந்த  2015ம் ஆண்டு பிறப்பதால் அலைச்சல், செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகனுக்கும் நல்ல  வாழ்க்கைத்துணை அமையும். பிள்ளை களால் மனவருத்தங்கள் வந்து போகும்.

ஆனால், ஜூலை மாதம் முதல் உங்கள் ராசிநாதன் குரு 9ம் வீட்டில் வந்தமர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவும் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த  தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போ க்கு மாறும். அவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வா ர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களுடைய  ராசிக்கு 2வது வீட்டில் புதன், சுக்ரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்த 2015ம் ஆண்டு பிறப்பதால் எதிர்பார்த்த விலைக்கு பழைய காலி  மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். உடன்பிற ந்தவர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

நட்பால் ஆதாயமடைவீர்கள். தூரத்து சொந்த-பந்தங் கள் தேடி வருவார்கள். உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்து கிடக்கும் போது இந்த 2015ம்  ஆண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. கோயி ல் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனா ல், ஜூலை மாதம் முதல் உங்கள் ராசிநாதன் குரு 9ம்  வீட்டில் வந்தமர்வதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறுவீர்கள். உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பெரிய அந்தஸ்தில்  இருப் ப வர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்களெல்லாம் முடிவுக்கு வரும்.

எதிர்பார்த்து ஏமார்ந்துப் போன தொகை கைக்கு வரு ம். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும். அவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகள்  பலிதமாகும். அரசாங்க அனுமதி கிடைத்து சிலர் நீண்ட நாளாக நினைத்திருந்த கனவு இல்லத்தை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். தாயாரின்  ஆரோக்யம் சீராகும். அவருடனான மனத்தாங்கலும் விலகும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் கு றையும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.  வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். அடகிலிருந்த நகை, வீட்டுப் பத்திரத்தையெல்லாம் மீட்பீர்கள்.

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர் கள்.  முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கனவுத் தொல்லை, தூக்கம் குறையும். பழைய கடன்,  பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். ஆன்மிக பயணம் சென்று வருவீர்கள்.   ஏழரைச்சனி தொடங்கியிருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய  முடிவுகள் எடுக்க வேண்டாம். பணம், நகை வாங்கி கொடுப்பதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

ஆனால், நட்பு வட்டம் விரிவடையும். பெரிய அந்த ஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆரோக் யத்தில் அக்கறை காட்டுங்கள். லேசாக முதுகு வலி, மூட்டு  வலி வரும். செரிமானக் கோளாறு, மலச்சிக் கல் வரக்கூடும். புதியவர்களை நம்ப வேண்டாம். பழைய மின்னணு, மின்சார சாதனங்களை விற்று விட்டு புதிதாக  வாங்குவீர்கள். வாகன வசதி உண் டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் கேது நிற்கும்போது இந்தப் புத்தாண்டு  பிறப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.

வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டில் குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். கேஸ் சிலி ண்டருக்கு பயன்படுத்தும் டியூப் பழுதாகியிருந்தால்  உடனே மாற்றுங்கள். எண்ணெய் பதார்த்தங்கள் செய் து கொண்டிருக்கும் போது அலை பேசியை பயன்படு த்த வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்கள்  அதிகமாகும். சூரியன் உங்கள் ராசிக்குள் நிற்பதால் கோபப்படுவீர்கள். கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும்.

வியாபாரிகளே! ஓரளவு லாபம் இருக்கும். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி வகைகளால் கூடுதல் லா பம் வரும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.  ஜூலை மாதத்திலிருந்து வேறு இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு வகை களாலும் ஆதாயமடைவீர்கள். புதிய பங்குதாரர்களை  சேர்ப்பீர்கள். பழைய பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் ஜூலை மாதம் முதல் குறையும்.

உத்யோகஸ்தர்களே! உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி புரிந்து கொள்வார். மூத்த அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். சக ஊழியர்களின்  ஒத் துழைப்பு அதிகரிக்கும். ஜூலை மாதம் முதல் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் குரு வந்தமர்வதால் புதுவேலை கிடைக்கும். எதிர்ப்புகளும் நீங்கும். ஆகஸ்ட்,  செப்டம் பர், அக்டோபர் மாதங்களில் சம்பள பாக்கி கைக்கு வரும். புது பொறுப்புகள் தேடி வரும். அயல்நாடு தொ டர்புடைய நிறுவனத்திலும் வேலை கிடைக்க  வாய்ப்பிருக்கிறது.

மாணவ-மாணவிகளே! மந்தம், மறதி வந்து நீங்கும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால்  கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எதையும் செய்து கொண் டிருக்க வேண்டாம். சமூக அறிவியல், கணித  பாடங்க ளில் அதிக கவனம் செலுத்துங்கள்.

கன்னிப் பெண்களே! மனக்குழப்பங்கள் நீங்கும். தெ ளிவாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நல்லவர்களி ன் நட்பு கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர் களே!  நல்ல பதில் வரும். ஜூலை மாதத்திலிருந்து திருமணம் கூடி வரும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரனும் அமையும்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கோஷ்டி பூசல்கள் விலகும். தொகுதி மக்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பீர்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய கலைத் திறன், கற்பனைத் திறன் வளரும். பிறமொழி வாய்ப்புகளும் கூடி வரும்.

விவசாயிகளே! எண்ணெய் வித்துகள், மூலிகைப் பயிர்கள், மஞ்சள், சீரகம், மிளகு வகைகளால் லாப மடைவீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப் பீர்கள். இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் செலவுகளை யும், அலைச்சலையும் தந்தாலும் ஜூலை மாதம் முதல் உற்சாகத்தையும், புதிய திட்டங்களை நிறை வேற்றும்  சக்தியையும் தரும்.

பரிகாரம் :

கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருக்கோ டிக்காவல் ஈசனை தரிசித்து வாருங்கள். சாலையோ ரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.


10. மகர ராசி நேயர்களே!

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்தக் காலம், பொங்கி எழுந்தால்தான் இருப்பதையாவது காப்பாற் றிக் கொள்ள முடியும் இந்தக் காலம் என்பதை  அறிந்த வர்கள் நீங்கள். தொடங்கிய வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! உங்களி ன் யோகாதிபதியான சுக்கிரன் உங்கள்  ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிற ப்பதால் வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு பரபர ப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் யாவும்  வெற்றி யடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவ ன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் புது வீடு கட்டி கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய் வீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். பூர்வீகச்  சொத்து கைக்கு வரும். பெற்றோருடன் இருந்த மனத் தாங்கல் நீங்கும். உங்களின் பாக்யாதிபதியான புதனு ம், சுக்கிரனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் நேரத்தில்  இ ந்தாண்டு பிறப்பதால் தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அய ல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.  உங்களு டைய ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும்.

வேலைச்சுமையும் கூடும். தூக்கம் குறையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்களும், செலவுக ளும் இருக்கும். ஜூன் மாதம் வரை உங்கள் ராசியை  குரு பார்த்துக் கொண்டிருப்பதால் குழந்தை பாக்யம் உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன திருமணம் சீரும், சிறப்புமாக நடைபெறும். மகனுக்கு உயர்கல்வி  நீங்கள் எதிர்பார்த்த கல்விப் பிரிவில், விரும்பிய நிறு வனத்தில் அமையும். அவருக்கு நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். மகளுக்கும் நல்ல வரன்  அமை யும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். ஜூலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 8ல் மறைவதால் அலைச்சல் அதிகரிக்கும்.

செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்யோகம் அல்லது உயர்கல்வியின் பொருட்டு பிள்ளைகள் உங் களை விட்டு பிரிவார்கள். எவ்வளவு பணம் வந்தா லும்  செலவுகள் இருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்பி குடும்ப விஷயங்களையோ, சொந்த விஷயங்க ளையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். திடீர் பயணங் கள்  உண்டு. ஆன்மிக பயணங்களும் சென்று வருவீர். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்தி ருந்த அயல்நாட்டு பயணம் செல்ல வாய்ப்பு உண்டு.  உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டில் சூரியன் மறைந் திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் திட்ட மிட்ட காரியங்கள் கொஞ்சம் தடைப்பட்டு முடிவடை யும்.

குறிப்பாக அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அரசியல்வாதிகளுடன் கவனமாகப் பழகுங்கள். உங்க ள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் இந்தாண்டு  பிறப்பதால் தைரியம் பிறக்கும். குழப்ப நிலையிலி ருந்து விடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளெல்லாம் எடு ப்பீர்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். புதிய வாகன மும்  அமையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய தைரிய ஸ்தானத்தில் கேது நிற்பதால் இந்த 2015ம் ஆண்டில் பெரிய பதவிகள் தேடி  வரும். பிரபலங்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங் குவீர்கள். கோபம் குறையும். சாதுர்யமாகப் பேசி பல காரியங்களையும் முடிப்பீர்கள். உங்களின்  பாக்யாதி பதியான புதனும், சுக்கிரனுடன் சேர்ந்து அமர்ந்திருக் கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து  பேசுவார்கள். விலை உயர்ந்த சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். கல்யாணம்  கூடி வரும்.

உங்களுடைய ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருக் கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும். வழக்கில்  தீர்ப்பு தாமதமாகும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். ஜூலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 8ல் மறைவதால் தன்னம்பிக்கை குறையும்.  சவால்களை சந்திக்க வேண்டி வரும். அவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறாரோ! இவர் நம்மை ப் பற்றி என்ன நினைக்கிறாரோ! என்ற அச்சம் இருக்கும். சில  விஷயங்களை அதிக செலவு செய்து முடிக்க வேண்டியது வரும்.

இளைய சகோதர வகையில் மனவருத்தம் வந்து போ கும். சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டி ல்  இந்தாண்டு பிறப்பதால் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். மனைவி வழியில் மதிப்பு, மரி யாதை கூடும். பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில்  வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ராகு 9ம் வீட்டில் நிற்பதால் தந்தையாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அவசர முடிவுகள் வேண்டாம். சில  நேரங்களில் சேமிப்புகள் கரையும். பின்னர் பண வரவு உண்டாகும். சொத்து வாங்குவது, நகைகள் வாங்குவது பொருட்டு சேமிப்புகளையெல்லாம் நீங் கள் முதலில்  இழக்க நேரிடும். நகை அல்லது நிலம், சொத்தில் முதலீடு செய்வீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளி ப் போகும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளு ங்கள்.

வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள். ஆட்டோ மொபைல், எலெக்ட்ரானிக்ஸ், ஹோட்டல், தங்கும் விடுதி,  கன்ஸ் ட்ரக்ஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரி க்கும். விளம்பர யுக்திகளை கையாண்டு உங்களுடை ய நிறுவனத்தை பிரபலமாக்குவீர்கள்.  போட்டிகளை யும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் ப ணிந்து போவார்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். ஆனால், ஜூலை மாதம் முதல் குரு 8ல் சென்று  மறை வதால் அதுமுதல் போட்டிகள் அதிகமாகும். அவ்வப் போது பணப்பற்றாக்குறை வந்தாலும் சாமர்த்தியமாக சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! மகிழ்ச்சி உண்டு. உயரதிகாரிகள் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சிலருக்கு  வேறு நல்ல வாய்ப்புகளும் கூடி வரும். வெளிமாநில ம், வெளிநாட்டு தொடர்புகளும் கிடைக்கும். வெளி நாட்டு தொடர்புடைய நிறுவனங்களிலும் வேலை  கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். ஜூலை மாதத்திலிருந்து குரு 8ல் மறைவதால் வேலைச்சுமை அதிகமாகும். மூத்த அதிகாரிகளைப் பற்றி சக  ஊழியர் கள் மத்தியில் விமர்சிக்க வேண்டாம். சங்கம், இயக் கம் இவற்றில் பெரிய பதவிகள் தேடி வரும். எதிர்பார் த்த இடமாற்றம் ஜூன் மாதத்திற்குள்  கிடைக்கும். சம் பள பாக்கியும் கைக்கு வந்து சேரும்.

மாணவ-மாணவிகளே! அதிக மதிப்பெண்கள் பெறுவீ ர்கள். சக மாணவர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நீங்கள் நினைத்த கல்வி நிறுவனத்தில் எதிர்பார்த்த  கல்விப் பிரிவில் சேருவீர்கள். வகுப்பாசிரியரின் பாரா ட்டைப் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுக்கு எல்லா வகையிலும் இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். காதலும் இனிக்கும். உயர்கல்வியிலும்  முன்னேறுவீர் கள். வேலையும் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வரனும் அமையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளை கட்சி மேலி டம் உங்களை நம்பி ஒப்படைக்கும். தேர்தலிலும் வெற் றி பெறுவீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு  அடை வீர்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் பரவ லாகப் பாராட்டிப் பேசப்படும். பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர்கள்.   

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையெல் லாம் தீரும். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். பழுதான பம்பு செட்டை மாற்றுவீர்கள். ஆக, மொத்தம் இந்த  2015ம் ஆண்டு அனைத்து வகைகளிலும் உங்களுக்கு முன்னேற்றத்தையும், முற்பகுதியில் உங்களுக்கு அதிரடி வளர்ச்சியையும், பிற்பகுதியில் உங்களுக்கு  அலைச்சலுடன் ஆதாயங்களையும் தரக்கூடியதாக இருக்கும்.

பரிகாரம் :

குமரி மாவட்ட எல்லையில் நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள முப்பந்தலில் பேரருள் பெருக்கி அமர்ந்திருக் கும் இசக்கி அம்மனை தரிசித்து  வணங்கி வாருங்கள். கோயில் உழவாரப் பணியில் பங்கு கொள்ளுங்கள்.


11. கும்ப ராசி நேயர்களே!

விட்டுக் கொடுக்கும் மனமும், எல் லோருக்கும் உதவு ம் குணமும் கொ ண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரி த்துப் போகக்கூடியவர்கள். ஆழமாகவும்,  அகலமாகவு ம் யோசிப்பவர்க ளே! உங்களுடைய ராசிக்கு 3ம் ராசி யில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர் பார்த்த  வேலைகள் முடிவடையும். சோம்பல், சலிப்பு, எதிர்மறை எண்ண ங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்து ஏமா ந்து போன தொகையும் கைக்கு வரும். ஷேர்  மூலமாக வும் நீங்கள் ஆதாயமடைவீர் கள். தடுமாற்றங்கள் நீங்கும். எதிர்த்தவர்களும் அடங்குவார்கள்.
பழைய கடனை பைசல் செய்வதற்கு தீவிரமாக யோசி ப்பீர்கள். உங்களுடைய ராசிக்கு 6ல் குரு மறைந்திரு  கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்  கொஞ் சம் பணப்பற்றாக்குறை இருக்கும். சின்ன சின்ன காரிய ங்களையும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சிலர் உங்களை அவதூறாகப்  பேசுவா ர்கள். சிலர் உங்களுக்கு கோபம் வரும்படி உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். நீங்கள் கொஞ்சம் பொறுமையா க இருப்பது நல்லது. கடன் பிரச்னை  அதிகமாகிறதே என்றெல்லாம் சில நேரம் யோசிப்பீர்கள்.
ஆனால், ஜூலை மாதம் முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் நுழைவதால் குடும்ப வருமானம் உயரும். ஆழ்மனதில் இருந்து வந்த கவலைகள்  கொ ஞ்சம் கொஞ்சமாக நீங்கும். மனநிம்மதியும் உண்டா கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர் கள். பணவரவு அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள்  விரும்பி வந்து பேசுவார்கள். புது வேலை கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.  உறவினர், நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார் கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும்.
எதற்கெடுத்தாலும் கோபப்பட்டீர்களே! அந்த நிலை மாறும். மனதில் ஒரு சாந்தமான சூழ்நிலை உருவாகு ம். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். அரசு  காரி யங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவி கி டைக்கும். ராசிக்கு 8வது வீட்டில் ராகு நிற்பதால்  அலைச்சல் ஒருபக்கம் இருந்து கொண்டுதான் இருக் கும். திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் இருக் கும். வேற்றுமொழிப் பேசுபவர்கள்,  வெளிநாட்டிலிருப் பவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
வலைத்தளத்தில் வரக்கூடிய செய்திகளையும், கடிதங் களையும் நம்பி ஏமாறாதீர்கள். 2ல் கேது நிற்பதால் லேசாக பார்வைக் கோளாறு வரும். கண்ணில்  அடி படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகன த்தை இயக்கும் போது தலைக்கவசம் அணிந்து செல் லுங்கள். கண்ணில் பெரிய தூசு விழாமலும் பார்த்து  கொள்ளுங்கள். கண் எரிச்சல், கண் உறுத்தல் இருந்தா ல் கை வைத்தியம் பார்க்காமல் உடனடியாக மருத்து வரை அணுகுவது நல்லது. அவசரப்பட்டு சிலரிடம்  அந்தரங்க விஷயங்களையெல்லாம் சொல்லாதீர்கள்.
உங்களுடைய ராசிக்கு 12வது வீட்டில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுபச் செலவுகள்  அதிக ரிக்கும். சகோதரிக்கு திருமணத்தை சிறப்பாக நடத் துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பெரிய  அந் தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். செவ்வா ய் 12ல் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சொத்துகள் வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி  பார்த்து வாங்குவது நல்லது. சொத்துகளை விற்கும் போதும் ஏமார்ந்துவிடாதீர்கள்.
சிலர் சின்ன தொகையை முன்பணமாக கொடுத்து விட்டு ஆறு மாதம், ஏழு மாதம் கழித்து மீதித் தொகை தராமல் இழுத்தடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே  கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். உங்களுடைய ராசிக்கு 3ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதரர் கள்  ஆதரவாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்றும ற்றொரு சொத்தை காப்பாற்றுவீர்கள். பழைய நண்பர் களை சந்திப்பீர்கள். ஆனால், ஜூலை மாதம் முதல்  குருபகவான் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் நுழைவதா ல் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
பதவி பட்டம் பெறுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்ப டுவீர்கள். பேசி பாதியிலேயே நின்று போன திருமணம் நல்ல விதத்தில் முடியும். உங்களின்  ஆலோசனையி ன்றி எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மனைவி உங்களுடைய புதிய முயற்சிகளை  ஆதரிப்பார். அவ ரின் ஆரோக்யமும் சீராகும். கெட்டவர் களிடமிருந்து விடுபடுவீர்கள். பழகிக் கொண்டே உங்களை பாழ்படு த்த முயல்பவர்களை கண்டறிந்து  ஒதுக்குவீர்கள்.
ராகு ராசிக்கு 8வது வீட்டில் நிற்பதால் காரியத் தடங் கல், சிறுசிறு வாகன விபத்துகள், ஒருவித படபடப்பு, நெஞ்சு வலி, அலர்ஜி, முன்கோபம் வந்து செல்லும்.  கு டும்பத்தில் சலசலப்புகள் வரும். யாருக்கும் பொறுப் பேற்று சாட்சி கையெழுத்திட வேண்டாம்.  உங்களு டைய ராசிக்கு 12வது வீட்டில் சுக்கிரன், புதன், செவ் வாய்  ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப் போ ன காரியங்களெல்லாம் ஒவ்வொன்றாக முடிவடையு ம்.  தாய்வழியில் உதவிகள் உண்டு. பிள்ளைகள் பொறுப் பாக நடந்து கொள்வார்கள்.
வீட்டில் கூடுதல் தளம் அமைப்பது, கூடுதல் அறை கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தை  சாதகமாக முடிவடையும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சீர்  செய்வீ ர்க ள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பணப்பற்றா க்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில்  உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகளே! ஏப்ரல் மாதம் முதல் லாபம் அதிகரிக் கும். ஜூலை மாதம் முதல் புது ஆர்டர்கள், ஏஜென்சி கள் எடுப்பீர்கள். உங்களுடைய ராசிநாதன் சனிபகவா ன்  10ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் வியா பாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உதவியும் கிடைக்கும். வெளிமாநிலத்தில், அயல் நாட்டிலிருப்பவர்களுடன் கூட்டு  சேர்ந்து விரிவுபடுத்த வாய்ப்பிருக்கிறது. புகழ் பெற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். கடையை நல்ல இடத்திற்கு மாற்றுவீ ர்கள்.    
உத்யோகஸ்தர்களே! அமைதி உண்டாகும். உயரதிகா ரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஜூன் மாதத்திலிருந்து நிம்மதி  பிற க்கும். இதுநாள் வரை பட்ட கஷ்டங்களெல்லாம் நீங் கும். புது சலுகைகளும் கிடைக்கும். புது அதிகாரி உங் களைப் பாராட்டுவார். சிலருக்கு அதிக சம்பளத்துடன்  கூடிய நல்ல வேலையும் கிடைக்கும். வருடத்தின் பிற்பகுதியில் உத்யோகத்தில் உங்களுக்கு செல்வாக் கு கூடும். பெரிய பதவியும், பொறுப்புகளும் தேடி வரும்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். புது நண்பர் களால் உற் சாகமடைவீர்கள். போட்டி, தேர்வுகளில் வெற்றி  பெறு வீர்கள்.  
கன்னிப் பெண்களே! கோபம் குறையும். சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த் தபடி  நல்ல வரன் அமைந்து திருமணமும் சிறப்பாக முடியும்.  
அரசியல்வாதிகளே! வீண் பழியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவீர்கள். ஏப்ரல் மாதத்திலிருந்து தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புதிய  பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.  
கலைத்துறையினரே! உங்களுக்கு அரிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். தடைபட் டிருந்த உங்களுடைய படம் ரிலீசாகும்.
விவசாயிகளே! ஜூன் மாதம் வரை பூச்சி, எலித் தொ ல்லை இருக்கும். ஜூலை மாதத்திலிருந்து விளைச்ச ல் பெருகும். சிலர் புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள்.  தண்ணீர் வசதியும் பெருகும். இந்தப் புத்தாண்டு முற் பகுதியில் சிறுசிறு இடையூறுகளை தந்தாலும், மைய ப்பகுதியில் சந்தோஷத்தையும் பிற்பகுதியில் அதிரடி  முன்னேற்றங்களையும் தருவதாக அமையும்.
பரிகாரம் :
தஞ்சாவூருக்கு அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம் மனை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.


12.மீனம் ராசி நேயர்களே!

கடமை உணர்வு கொண்ட நீங்கள் காதல் வசப்படுபவ ர்கள். பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமா கப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். ஒற்றுமை  உணர்வு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களின் சொத்து க்கு ஆசைப்பட மாட்டீர்கள். உங்களுடைய ராசியி லேயே கேது அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண் டு  பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். படபடப்பு இருக்கும். சில நேரங்களில் சிலரை நினைத்து கோபப்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களில்  யாருமே உண்மையாக நடந்து கொள்ளவில்லையென ஆதங்கப்படுவீர்கள்.
லேசாக தலைச்சுற்றல், உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி வந்து போகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக் கும். உங்களுடைய ராசிக்கு 2வது ராசியில் இந்த  2015ம் ஆண்டு பிறப்பதால் பணப்பற்றாக்குறை நீங்கு ம். அடுத்தடுத்து பணவரவு உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வி.ஐ.பிகள் ஆதரவாக இருப்பார்கள்.  பக்குவமாகப் பேசி பல முக்கிய காரியங்களையெல் லாம் முடிப்பீர்கள். முகம் மலரும். சோர்வு நீங்கும். கட ந்த காலத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தும்  பயன் படுத்தாமல் விட்டுவிட்டீர்களே! இப்போது வரும் நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.
உங்களுடைய ராசிநாதன் குருபகவான் 5ம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்ப தால் எதிலும் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் நிம்மதி  உண்டு. குழந்தை பாக்யம் கிட்டும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்கள்  இருவருக்குமிடையே பிரச்னைகளை ஏற்படுத் தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ஆனால், ஜூலை மாதம் முதல் குருபகவான் 6ல் சென்று  மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ஆடம்பரச் செலவுகள் வேண்டாம்.
அநாவசியப் பேச்சுகளையும் நீங்கள் குறைப்பது நல் லது. சிலர் உங்களுடைய நடவடிக்கைகளை வேவு பார் க்கக் கூடும். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த  முயற்சியும் வேண்டாம். பிரபலங்களுடன் சின்ன சின்ன மோதல் வரும். ஜூலை மாதம் முதல் நீங்கள் நாவடக்கத்துடன் செயல்படுவது நல்லது.  உங்களிட மிருக்கும் ரகசியங்களை வெளியிட வேண்டாம். ஆரோக்யத்திலும் அக்கறை காட்டுங்கள். மஞ்சள் காமாலை வரக்கூடும்.  உங்களுடைய ராசிக்கு 7வது  வீட்டில் ராகு நிற்பதால் கணவன்-மனைவிக்குள் சில நேரங்களில் கடுமையான வாங்குவாதங்கள் வரும். பின்னர் சரியாகும்.
மனைவிக்கு மாதவிடாய் தள்ளிப் போகும். தைராய்டு இருக்கிறதா என பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.  உங்களுடைய நெருங்கிய நண்பர்களை ஜூலை மாதத்திலிருந்து யாருக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாம். உங்களுடைய ராசிக்கு சனிபகவான் 9ம்  வீட்டில் நிற்பதால் தந்தையாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சையும், ஆரோக்ய குறைவும் உண்டாகும். அவ ருடன் மனஸ்தாபமும் வரக்கூடும். உங்களுடைய  ராசிக்கு 10ம் வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
அரசால் அனுகூலம் உண்டு. வேலைக்கு விண்ணப்பி த்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலி ருந்து அழைப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதி  பைசலாகும். வருடம் பிறக்கும் போது உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நிற்பதால் ஷேர் மூலம் பணம்  வரும். சேமிப்புகளும் உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்குவீர்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலர் புதுத் தொழில்  தொடங்குவீர்கள்.
உங்களுடைய ராசியிலேயே கேது அமர்ந் திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் யூரினரி இன்ஃ பெக்ஷன், தோலில் நமைச்சல், வீண் டென்ஷன் வந்து  போகும். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சொத்து வரி, வருமான வரியை செலுத்துவதில் அலட்சியம் வேண் டாம்.  அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்தக் காரியமும் செய்ய வேண்டாம். உங்களுடைய ராசிக்கு 7வது வீட்டில் ராகு  நிற்பதால் ஜூலை மாதத்திலிருந்து யாருக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாம்.
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்கள் இலவசமாக நுழைய  வாய்ப்பிருக்கிறது. உங்களுடைய ராசிக்கு சனிபகவா ன் 9ம் வீட்டில் நிற்பதால் தோல்வி பயத்தால் துவண்டு இருந்த உங்கள் மனதில் சாதிக்க முடியும் என்ற  தன் னம்பிக்கை துளிர்விடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வழக்கு சாதகமாகும். என்றாலும் தந்தையாரு க்கு சிறுசிறு அறுவை சிகிச்சையும், ஆரோக்ய  குறைவு ம் உண்டாகும். அவருடன் மனஸ்தாபமும் வரக்கூடும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
வருடம் பிறக்கும் போது உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நிற்பதால் நீண்ட நாள் ஆசைகள்  நிறைவேறும். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். அவர்கள் வீட்டு  விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்து வீர்கள். புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது டிசைனில் ஆபரணம்  வாங்குவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிபுகுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.
வியாபாரிகளே! அதிரடி மாற்றம் செய்வீர்கள். வேலை யாட்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஒத்துழைக்காத பங்குதாரர்களை நீக்கி விட்டு புதிய பங்குதாரரை  சேர்ப்பீர்கள். செல்வாக்குள்ள பங்குதாரர்களை சேர்க்க வாய்ப்பிருக்கிறது. கமிஷன், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட், மருந்து, பெட்ரோ-கெமிக்கல், ஸ்டேஷனரி,  எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களாலும் லாபம் அதிகரிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள்.  
உத்யோகஸ்தர்களே! செல்வாக்கு கூடும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக  ஊழியர்களுக்காக நீங்களும் மூத்த அதிகாரிகளிடம் வாதாடி சில முக்கிய சலுகைகளை பெற்றுத் தருவீர் கள். புது பதவிகள், பொறுப்புகளுக்கு  தேர்ந்தெடுக்க ப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர் கள். ஓவியம், இசைப் போட்டிகளிலும் கலந்து கொண் டு  முன்னேறுவீர்கள். புது சலுகைகளும் கிடைக்கும். சிலர் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எதிர்பார்த் த  கல்வி நிறுவனத்தில் அட்மிஷனும் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த சோம் பல், சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். சாதிக்க வே ண்டுமென்ற எண்ணம் வரும். உயர்கல்வி நன்கு  அமையும். கோபம் குறையும். பெற்றோர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பதையும் உணருவீர்கள். நல்ல வரன் அமையும்.
அரசியல்வாதிகளே! உங்கள் பேச்சிற்கு மரியாதை கூடும். மக்கள் மத்தியில் பேசப்படுவீர்கள். தலைமை க்கு நெருக்கமாவீர்கள். ஆனால், ஜூலை மாதம் முதல்  அலைச்சல், எதிர்ப்புகள், செலவுகள் இருக்கும்.
கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து எதிர்பார்த்த வாய்ப்பு வரும். வருவாய் உயரும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.     
விவசாயிகளே! தண்ணீர் பிரச்னை தீரும். பூச்சித் தொ ல்லையும் குறையும். மகசூல் பெருகும். ஜூலை மாதம் முதல் பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக்  கொள்ளா தீர்கள். ஆகமொத்தம் இந்த வருடம் தொடக்கம் முத லே வெற்றியையும், திடீர் யோகங்களையும் தரக் கூடி யதாகவும் ஜூலை மாதம் முதல் கொஞ்சம்  அலைச் சலையும், செலவினங்களையும் தருவதாக அமையும்.
பரிகாரம் :
காஞ்சிபுரம் காமாட்சியம்மனை தரிசித்து வணங்கி வாருங்கள். தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

=>=> தினகரன் <=<=

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: