Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்(28.12.14)- வயோதிக ஆண்களிடம் தாம்பத்யம் செய்யும் இளம் பெண்கள் . . .!

அன்புடன் அந்தரங்கம் (28-12-2014)- வயோதிக ஆண்களிடம் தாம்பத்யம் செய்யும் இளம் பெண்கள் . . .

அன்புள்ள அம்மா அவர்களுக்கு,

எனக்கு வயது 49; திருமணமாகி கல்லூரியில் படிக் கும் ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். அழகான குடும்பம்; அளவான

வருமானம்; நிறைவான வாழ்க்கை. ஐந்து ஆண்டுக ளுக்கு முன், விவாகாரத்து பெற்ற, ஒரு பையனுக்கு தாயான, 35 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், அப்பெண் மீது அனுதாபம் ஏற்பட்டு, காலம் முழுவதும் அவளை கண் கலங்காமல் காப்பா ற்ற வேண்டும் என்று தீர்மானித்து, அதைக் கடைபிடி த்து வருகிறேன். இது, என் மனைவி மற்றும் பிள்ளை களுக்கு தெரியும் என்றாலும், நான் ஏதாவது ஒன்று செய்தால், அதில் நியாயம் இருக்கும் என்று கருதி, அதை பெரிது படுத்தாமல், ‘எதுவானாலும் வெளியில் இருக்கட்டும்; வீடு வரை கொண்டு வர வேண்டாம்…’ என்பதில் மட்டும் உறுதியாக உள்ளனர்.

அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டது எந்தளவுக்கு தவறோ, அதைவிடத் தவறானது அவளை விட்டு விலகுவது என்ற எண்ணம், தற்போது ஏற்பட்டு ள்ளது. அம்மா, நான் பழகிவரும் பெண், மிகுந்த காம வேட்கை கொண்டவளாக இருக்கிறாள். உறவில் முழு திருப்தி ஏற்படும் அளவுக்கு செயல்படு வேன். அவளும், ‘நான்தான் உலகில் முழு சுகமும் பெறுகிற பெண்ணாக இருப்பேன்…’ என்று சந்தோஷ மாக கூறுவாள். இருப்பினும், நாங்கள் இருவரும் வெ ளியில் செல்லும்போது, ஆண்களை உற்றுப் பார்ப்பது, குறிப்பாக, சிவப்பாய், உயரமாய் இருப்போரையும், வடமாநில ஆண்க ளையும், மோகத்துடன் பார்ப்பாள். இதை, நான் பல முறை நாசுக்காக தெரிவித்து, கண்டித்திருக் கிறேன். அப்போதெல்லாம், என் உறவு அற்று போய்விடுமோ என்ற பயத்தில், எந்த இடமாக இருந்தாலும், என் காலில் விழுந்து விடுவாள்.

ஆனால், தன் தவறுகளை திருத்திக்கொள்ள வில்லை. என்னுடன் பழக்கம் ஏற்படாத காலத்தில், சுய இன்பம் அனுபவித்து வந்திருக்கிறாள். தற்போது, அவளின் குரல், ஆண் குரல்போல் மாறி வரு கிறது. அழகு நிலையம் வைத் திருக்கும் அவள், தன்னிடம் ஒப்பனை செய்து கொள்ள வரும் பெண்களின் மார்பகத் தை கையால் பிடிக்க வேண் டும் போல் தோன்றுகிறது என் று கூறுவாள். அண்டை வீட்டில் நடக்கும் ரகசிய உறவு களை மறைந்திருந்து பார்க்கும் பழக்கம் அவளுக்கு இருக்கிறது. இதையெல் லாம் அவள் உளறிக்கொட்டி, பின், அவள் பேசியதை, அவளே புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடுவாள். எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், செருப்பை எடுத்து தலையிலும், வயிற்றிலும் அடித்து, தன்னை வருத்திக் கொள்வாள். நல்ல செய்தி களை காது கொடுத்து கேட் பதில் ஆர்வம் காட்டாமல், உடலுறவு சம்பந்தப்பட்ட ஆபாச வார்த்தைகளுக்கு எளிதில் மயங்கி விடுவாள்.

நான் ஒரு விளையாட்டு வீரன் என்பதால், என் உடல் வனப்போடும், வலிமையோ டும்இருக்கும். அவள் குள்ள மானவள்; நிறமும்குறைவு. சற்று பருத்ததேகமும், கவர்ச்சியும் உடையவள். ஆனா ல், என்மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்று நினைக்கும்படி, ஒவ் வொரு பவுர்ணமி அன்றும், என் னை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, உப்பு சுற்றி, திருஷ்டி கழிப்பாள். அவள் மீது நான் விட முடியாத விருப்பம் வைத்திருக் கிறேன். அவளது விரும்பத்தகா த நடவடிக்கைகளை சரிசெய்து, நிம்மதியாக வாழ்வது எப்படி என்பதை விளக்குங்கள் அம்மா.

குறிப்பு: நான் அவளுக்கும், அவ ள் குடும்பத்திற்கும் எல்லா வகை யிலும் பயன்பட்டு வருகிறேன் என்பதை, அவளே என்னிடம் கூறியுள்ளாள். அவளுக்கு இந்த உலகில் இருக்கும் ஒரே ஆறுதல் நான் மட்டுமே!

— இப்படிக்கு,
தங்களின் உண்மை மகன்
அன்புள்ள சகோதரருக்கு,

நிம்போமேனியாக் கள்ளக்காதலியின், செக்ஸ் சபலங் களை நீக்கித்தர வழிவகை கேட்டுள்ளீர்கள். கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் கணவனை, வெளிப்படையா க கண்டிக்காத மனைவி; கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும் மகள். நிறைவான வாழ்க்கை வாழும் உங்களு க்கு, எதற்கு இந்தக் கள்ளத் தொடர்பு?

அதீத உண்மை மிக்கவர் தாங்கள் என்ற எண்ணம் உங் களுக்கு உள்ளது. அதனால், ஒரு விருது பெறும் விருப் பத்துடன், திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட்டு வருகிறீர்கள்.

தவறான உறவில் ஈடுபடும் பெண், எப்படி ஒழுக்கமா னவளாக இருப்பாள்? உங்களுக்கு அவள் முழு விசுவா சமாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, கடைந் தெடுத்த முட்டாள்தனம்.

உங்களுடன் இருக்கும் போது, ‘உலகத்திலேயே முழு சுகமும் பெறுகிற பெண் நானே…’ என, அவள் கூறுவது, உங்கள் ஈகோ வை திருப்திபடுத்த! வயோதிக ஆண்களிடம் தாம்பத்ய ம் செய்யும் இளம் பெண்கள் மிழற்றும் வழக்கமான, ‘டயலாக்’ தான் இது. பொது இடங்களில் அவள் உங்கள் கால்களில் விழுவதும், பவுர்ணமி கட ற்கரையில் உங்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடுவதும், உங்களால் கிடைக்கும் பொருளாதார பாதுகாப்பு கை விட்டு போய்விடக்கூடாது என்கிற சுயநலத்தால்தான்!

இந்த தவறான உறவு, பாதுகா ப்பாய் செல்லும் உங்கள் குடும்ப வாகனத்தை தலைகீழாய் கவிழ் த்து விடும். உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்கிபுழுங்கி உங்கள் மனைவி மனநோயாளி ஆகலா ம். அப்பாவே தைரிய மாய் தப்பு செய்யும்போது, நாமும் தப்பு செய்தால் என்ன என்கிற மனோபாவம் உங்கள் மகள் மற்றும் மகனுக்கு வர வாய்ப்பு உள்ளது. உங்கள் சபலப்பெண், உங்களின் சொத்துகள் மீது கண் வைத்து, உங்களை, உங்களது குடும்பத்தாரிடமிருந்து பிரிக்க முயற்சிக்கவோ, சொத்துகளை அவள்மீது எழுதிவைக் க சொல்லியோ தூபம் போடலாம். உங்களுடனான உறவுக்கு அங்கீகாரம் வேண்டி அவளை, நீங்கள் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவற்புறுத்துவாள் .

உங்களுக்குள் பிரச்னை ஏற்பட் டால், தன் தலையிலும், வயிற் றிலும் செருப்பால் அடித்துக் கொள்ளும் அவள், ஒரு, ‘ஹிஸ்டீரி’கலான பெண்ணாக தெரிகிறாள். இவ் வகை பெண்கள் படு ஆபத்தானவர்கள். தன் உறவில் எதாவ து பிரச்னை என்றால், கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். உங்கள் சபலத்துணையிடம் லெஸ்பிய ன் பழக்கமும் இருக்க க்கூடும் என சந்தேகம் எழுகிறது.

இந்த பெண்ணிடம் உங்கள் தொடர்பு நீடித்தால், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்; ஊரார் கைகொட்டி சிரிப்பர்.

உங்களைவிட பணக்கார பார்ட்டி கிடைத்தால், அங்கு போய் ஒட்டிக் கொள்வாள். ஒரே நேரத்தில் பல ஆண் களுடன் தொடர்பு வைத்து, உங்களின் நிம்மதியை கெடுப்பாள்.

இனி, நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா சகோதரா…

வயிறு நிறைய வீட்டில் சாப்பிட்டு விட்டு, தெருவில் கை யேந்துவதை உடனடியாக நிறுத்துங்கள். காம வேட்கையை மட்டுப்படுத்தி, உங்கள் வீரபிரதாபத்தை மனைவியிடம் காட்டுங்கள். சபல பெண்ணின் தொ டர்பை நைச்சியமாக கத்தரித்து விடுங்கள். சைவத்துக்கு மாறுங் கள். ஆயிரம் ஏக்கர் ஆப்பிள் தோ ட்டத்திற்கு சொந்தக்காரராய் இருந்தாலும், பசிக்கு ஒன்றிரண் டு ஆப்பிள்தான் தின்ன முடியும்.

மனைவி, மக்களுடன் மனம் விட்டு பேசி உறவை பலப் படுத்திக் கொள்ளுங்கள். இன்று புதிதாய் பிறந்தோம் என, பழையவைகளை தலை முழுகுங்கள்.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: