Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"பொறுப்பற்ற‍வர்கள்"! – (சுயநல‌ அரசியல்வியாதிகளுக்கு சவுக்கடி )

பொறுப்பற்ற‍வர்கள்!

2015 ஜனவரி மாத நம் உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த அதிரடி  தலையங்கம்!

இந்திய ஜனநாயகத்தின் செயல் கேந்திரமான நாடாளு மன்றத்தின் இரண்டு அவைகளும் வழக்க‍ம் போலவே முடங்கிப்போயின• எதிர்க்கட்சியினரின்

விதன்டாவாதம், ஆளுங்கட்சியினரின் அடம் எல்லாம் இணைந்து மக்க‍ளின் நம்பிக்கை க்கு வேட்டு வைத்தன•

ஆளுங்கட்சியில் யார் இருந்தா லும் ஆளுங்கட்சி எதைச் செய்தா லும் அதை எதிர்ப்ப‍துமட்டும்தான் சிறந்த எதிர்க்கட்சி என்கிற தத்துவத்தைக்கண்டு பிடித்த‍ அரசியல்ஞானி யாரென் பதைக் கண்டறிந்துக் கழுவிலேற்ற‍ வேண்டும்.

மக்க‍ளவை, மாநிலங்கவை, சட்ட‍சபை, மாநகராட்சி, பஞ்சாயத்து, போன்றவை மக்க‍ளின் பிரச்சனைகளைப் பேசி, விவாதித்து, ஒரு மித்த‍ கருத்தையொட்டி. அதை சட்ட‍ப் பூர்வமாகப் பேசி, விவாதித்து ஒரு மித்த‍ கருத் தையொட்டி, அதைச் சட்ட‍ ப்பூர்வமாக மாற்றி… திட்ட‍ங் களாக்கி, காஷ்மீர்முதல் கன்னியாகுமரியின் கடைசி கோடி வரை செயல்படுத்த‍ வேண்டும் என்பதற்காக அரசியலமைப்பு.

ஆனால் அவையெல்லாம் இ ன்று, சட்டையைக் கிழிப்பது … மைக்கை உடைப்ப‍து, நாற் காலிகளை வீசுவது…, சபா நாயகரை மிரட்டுவது, ஒருவ ரையொருவர் தாக்குவது என்று தெருவோர சண்டைக் களமாய் மாறியிருப்ப‍து வெட்கக்கேடானது. வேதனை க்குரியது கண்டி ப்புக்குரியது.

நாடாளுமன்றம் ஒருநாள் நடப்ப‍ தற்கு செலவாகும் பணம் நம் சுப்ப‍ன், குப்ப‍ன் கோவணத்தையு ம் உருவிய காசில் வந்தது என்ப தை இந்த மதம் பிடித்த‍ தலைவர் கள் உணர்வதில்லை? எங்கோ இருந்த நம்மை சட்ட‍ மன்ற உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சராக மாற்றிப் பெருமை சேர்த்த‍ அப்பாவி ஜனத்துக்கு நான் செய்வது மிக ப் பெரியது ரோகம்.. என்பது இந்த வாக்குப் பொறுக்கிகளுக்குத் (மன்னிக் க‍வும் சேகரிப்பு என்றுபொருள் கொள்க•) தெரியாதா?

ஊடகங்களில் தங்களுக் கு வெளிச்ச‍ம் தேடிக் கொள்வ தற்காக ஒரே அரங்கில், ஒரே சாதாரண நிகழ்ச்சி நெறியாளருக்குக் கட்டுப்பட் டு மிகப்பெரிய விஷயங்க ளையெல்லாம் விவாதிக்கிற அரசியல் தலைவர்கள், தங்களது கடமையைச்செய்ய‍வேண்டிய ஆட்சி மன்றத் தில், தாங்கள் தேர்ந்தெடுத்த‍ அவைத் தலைவருக்குக் கட்டுப்பட மறுப்ப‍தும், விவாதங்க ளை விகாரமான சண்டைகளாய் மாற்றுவதும் எந்த வகையில் நியாயம்?

சட்ட‍சபைக்கே வராமல்… மக்க‍ள் முன்தான் கேமராமுன்தான் பேசுகிற எதிர்க்கட்சித் தலைவரை தமிழகம் பெற்றிருக்கிறது. என்றால், மக்க‍ள வையில் பேச வேண்டிய நேரத்தில் பேச வேண் டியதைப்பேசி தீர்வு காணா மல் ஊர் ஊராய் மேடையில் மட்டும் பேசுவதற்கென்றே பிறந்த பிரதமரைப் பெற்றி ருக்கிறது. நம்தேசம் எல்லா ம் நம் தலைவிதி! இதற்கு என்ன‍தான் தீர்வு ?

நாடாளுமன்றம் – சட்ட‍சபை செயல்படாத நாட்களுக் கெல்லாம் எல்லா சட்ட‍சபை – நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கும் சம்பளம், உணவு ப்படி, பஞ்சப்படி,  போக்குவரத் துப்படி, தொலைப்பேசி கட்ட‍ணச் சலுகை எல்லாவற் றையும் ரத்து செய்யும் வகை யில் அதிரடி சட்ட‍ம் இயற்ற‍ப் படவேண்டும். குறிப்பிட்ட‍ நாட்கள் அவைக்கு வராத உறு ப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் ஊடகங்களுக் குத் தெரிவிக்க‍ வேண்டும்.

Only Few People in Indian Parliament

தன் தொகுதியைப் பற்றி ஒருநாள்கூட ஒருமுறை கூட பேசாத தலைவர்க ளின் பெயர்களை நாடா ளுமன்ற – சட்ட‍மன்ற செ ய்திக்குறிப்பு அரசிதழில் வெளியிட வேண்டும். இதற்கு வழி காண வேண்டியது காலத்தின் கட்டாயம்.

– பொறுப்பற்ற‍வர் எவராயினும் புறந்தள்ளு வோம் என்கிற உரத்த‍ சிந்தனையுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\///\\\

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)

தொடர்புக்கு கைபேசி 94440 11105

//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\///\\\

4 Comments

 • Greatt Editorial. Indha Arasiyalvaadhigal eppodhum maara maattaargal. Sariyaaga seyal padaadha arasiyal vaadhigaluuku alikkappadum salugaigalai kuraikka alladhu radhdhu seiya vendum.

 • Shantha

  தலையங்கச் சவுக்கடி அரசியல்வாதிகளுக்கும்..அரசியல் வியாதிகளுக்குமான சரியான நெத்தியடி! எங்கே…எல்லாமே விழலுக்கிறைத்த நீர் தான்.! எப்பேர்பட்ட சாட்டையடியானாலும் உறைகாதே!..அல்லது உறைக்காதது போன்ற பாவனை இன்னும் வசதி!
  நான் ஏற்கெனவே இது குறித்து உதயம் ராம் அவர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலம் தெரிவித்தேன்.
  நன்றி
  அன்புடன்..
  சாந்தா தத்

 • Priyan

  ippadi article ezhuthuvatharkku pathilaaga, neega admk support-nnu solliyirukkalaam….ketta ellorukkum pothuvaagath thaan ezhuthinomnnu solluveenge,….intha maathiri ethir katchikalai vimarsippathu ADMK aatchil irukkumbothu mattum ungalukku intha gnanothyam vanthu vidugirathu….DMK aatchikku vanthaal aalum katchiyai vimarsippeergal….itharkku peyar nadu nilamai illai…oru saarbu nilamai…

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: