Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேலைகளை ஸ்மார்ட்டாக முடிக்க‍ உதவும் ஸ்மார்ட்டான ஆப்ஸ்கள்

உங்கள் வேலைகளை நீங்கள் ஸ்மார்ட்டாக முடிக்க‍ உதவும் ஸ்மார்ட்டான ஆப்ஸ்கள்

எந்த வேலையை எப்படி செய்து முடிக்க

ப்போகிறோம் என்பது தெரி யாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் இக்காலத்தி ல், நம் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலைகளை எளிதாக, ஸ்மார் ட்டாக செய் து முடிக்க உதவும்.
 
ஆப்ஸ்கள் இதோ:
 
ட்ரெல்லோ!
 
நீங்கள் செய்ய நினைக்கும் வே லைகளைக் குறித்த நேரத்தில் கச்சிதமாக செய்துமுடிக்க இந்த ஆப்ஸ் நிச்சயம் உதவும். இந்த ஆப்ஸை பயன்படுத்தி நீங்கள் செய்யவேண்டிய வேலைகளை ப் பதிவு செய்துவிட்டால், அதுவே சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டிவிடும்.அதுமட்டுமின்றி உங் கள் அலுவலகத்தில் உங்க ளின் கீழ் பணிபுரிபவர்கள் செய்ய வேண்டிய வேலை யைப் பட்டியலிட்டு, அதை அவர்களுக்கு அனுப்பிவிட் டால், அந்த வேலையைச் செய்யச் சொல்லி அவர்க ளுக்கு நினைவுபடுத்தும். வேலை முடிந்து அவர்கள் அப்டேட் செய்தவுடன் அந்தத் தகவலும் உங்களுக்கு வந்துசேரும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கும். இந்த ஆப்ஸ் 5-க்கு 4.5 ரேட் டிங்கைப் பெற்றுள்ளது.
 
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.trello
 
இன்பாக்ஸ் பை  ஜி-மெயில்:

கூகுள் மெயிலான ஜி-மெயிலுக் காக தனியொரு ஆப்ஸை உரு வாக்கியுள்ளது கூகுள். இதைப் பயன்படுத்தி மற்ற மின்னஞ்சல் சேவைகளான யாகூ, ஹாட்மெ யில் போன்றவற்றில் ஒருவர் வைத்திருக்கும் கணக்குகளை யும் இணைத்துக்கொள்ள முடியும். அதற்குவரும் மெயி ல்களையும் இதில் பெறமுடியும். பதிலளிக்கவும்முடியு ம். ஒரே ஆப்ஸ் அனைத்து மெயில்க ளையும் பெறுவதால், தனித்தனியே ஆப்ஸ்களை டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த ஆப்ஸ் வெளியாகி ஒரு மாதமே ஆகியிருந்தாலும், 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதை  டவுன் லோடு செய்து   பயன்படுத்து கின்றனர்.
 
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inbox
 
ஸ்வைப் கீபோர்டு:
 
முன்பு எஸ்எம்எஸ் அனுப்ப பட்ட ன்கள் உள்ள கீபோர்டுகளைப் பயன்படுத்தி வந்தோம். அடுத்து, ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில்தொடு திரையைப் பயன்படுத்தி டைப் செய்தோம். அதற்கடுத்து டிக்‌ஷனரி ஆப்ஷன் மூலம் வார்த்தை களைத் தேர்வு செய்தோம்.  தற்போது கீபோ ர்டில் நாம் டைப் செய்ய வேண்டிய வார்த்தையை அந்த எழுத்துக்களில் வை த்து ஸ்வைப் செய்தாலே போதும் அந்த வார்த்தை டைப் ஆகிவிடும் .
 
ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்டசில மொழிகளிலும் வா ர்த்தைகளை அடையாளம் காணும் இந்தஆப்ஸ் இன்னு ம் சில மொழிகளுக்கும் அப் டேட் செய்யப்பட உள்ளது . கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங் களைப் பெற்று ள்ளது.
 
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.nuance.swype.dtc
 
கூகுள்அனலிடிக்ஸ்:
 
நாம் செய்யும் வேலைகள் சரி யானவேகத்தில் உள்ளதா, அந் த வேலையை இதே வேகத்தில் சென்றால், நம் டார்கெ ட்டை முடிக்க முடியுமா என்பதை அனலைஸ் செய்து, எக்ஸ்எல் மற்றும் பிடிஎஃப் ஃபைல்க ளாக வழங்குகிறது கூகுளின் அன லிடிக்ஸ் ஆப்ஸ். உங்கள் அலுவலக இணையதளங்களை இதனுடன் இணைத்துக்கொள்வ தன் மூலம் எத் தனை பேர் அதனைப் பார்வையிட்டு உள்ளனர், அதில் குறிப்பிட்ட ஒரு பிரிவை எத்தனை பேர் பார்த்துள்ளனர்  என்பதையும் சொல்கிறது இந்த ஆப்ஸ். ப்ளே ஸ்டோரில் இலவசமா கக் கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்கைப் பெற் றுள்ளது.
 
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.giant
 
வுண்டர்லிஸ்ட்:
 
நாம் செய்யும் வேலைகள் சில வற்றை நாம் மறந்து விடுவோ ம். சிலசமயம் வேலைகளைத் தாண்டி இன்று உறவினர் ஒரு வருக்குப் பிறந்தநாள், ஒரு முக்கிய மான நபரை வியாபார ரீதியாகச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருப் போம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கத்தான் வுண்டர்லி ஸ்ட் ஆப்ஸ் உதவுகிறது. நமது தினசரி வேலைகள், சந்திக்க வேண்டிய நபர்கள் மற்றும் மறக் கக்கூடாத தினங்களைப்பதிவு செய்துவிட்டால், சரியாக நமக் கு நினைவுபடுத்தி நமதுவேலை களை மறக்காமல் செய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும்  இந்த ஆப் ஸை இதுவரை 50லட்சம் பேர் டவுன்லோ டு செய்துள்ளனர். 5-க்கு 4.4 ரேட்டிங்கையும் இந்த ஆப்ஸ் பெற்று ள்ளது.
 
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.wunderkinder.wunderlistandroid
 
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மொபைல்:
 
நாம் தயாரிக்கும் வேர்டு டாக்குமென்ட்டுகள், பவர் பாயின்ட் ஸ்லைடுகள், XL படிவங்கள் ஆகிய வற்றை மொபைல் மூலமாகவே தயாரித்து, நீங்கள் அனுப்ப நினைக்கும் நபருக்கு மெ யில் மூலமாக அனுப்ப முடியும். நாம் கணினியில் செ ய்யும் அனைத்து ஆபீஸ் வேலை களையுமே இதில் செய்ய முடியும். இது ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4ரேட் டிங்கை இந்த ஆப்ஸ் பெற் றுள்ளது. 

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officehub
 
இன் 5:

பிஸியான வேலைகளுக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய நினை ப்பவர்கள் பல்வேறு சமூக வலைதளங்களுக்கு ள் சென்று அங்கேயே மணிக்கணக்கில் தங்கிவிடுகிறா ர்கள். இதனால் அலுவலக வேலை மட்டுமல்ல, தனிப்பட்ட வேலைகள்கூட  பாதிப்படையும். இதைத் தடுக்கிற வேலையை செய்வதுதான் இந்த ஆப்ஸ். இந்த ஆப் ஸை டவுன்லோடு செய்து விட்டால், எந்த சமூக வலைதளத்திலும்  சரியாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் உங் களை இருக்க அனுமதிக்காது. காரணம், ஐந்து நிமிட ங்களுக் குப்பிறகு நீங்கள் பார்க்கும் சமூக வலைதளத்தை உங்கள் கம்ப்யூ ட்டர் திரையிலிருந்து இந்த ஆப் ஸ் காணாமல் அடித்துவிடும். இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4.3 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய; https://play.google.com/store/apps/details?id=sariodev.in5.app
 
ட்ராப் பாக்ஸ்:
 
செல்போனில் டவுன்லோடு செய் யும் புகைப்படம், வீடி யோக்களை மெமரி கார்டுகளில் இடம் இல் லை என அழித்து விடுவோம். அல்லது இ-மெயில்களில் இருந் து டவுன்லோடு செய்த ஃபைல்களில் சிலவற்றைகூட மறந்து போய் நீக்கி்விடுவோம். அதனைச் சேமித்து வைக்கத்தான் இந்த ட்ராப் பாக்ஸ் ஆப்ஸ் உதவுகிறது. அதுமட்டு மின்றி, இதனை மற் றவர்களோடு பகிரவு ம், டிராப் பாக்ஸிலேயே மாற்றி எடிட் செய்யவும் இந்த ஆப்ஸ் உதவுகிறது. இந்த ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் 5- க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இதன் அளவு நாம் பயன்படுத்தும் போனை பொ றுத்து மாறுபடும்.
 
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.dropbox.android
 
க்ளீன் மாஸ்டர்:

நமது செல்போனில் நாம் சேமிக்கா மலேயே நிறையபகுதி ஆக்கிரமிக்க ப்பட்டிருக்கும் அதனை ‘cache’ மெமரி என்பார்கள். இது குறிப்பிட்ட அளவுக் குமேல் சேர்ந்தால், நமது செல்போ னின்வேகம் குறையும். அதனைச் சரி செய்ய இந்தஆப்ஸ் உதவுகிறது. டெம்ப்ரவரி ஃபைல் களை நீக்கி, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படா மல் இருக்கும் ஃபைல்க ளை அறிந்து அதனை நீக்க  பரிந் துரைக்கும். ப்ளே ஸ்டோர் ரேட்டிங் 5-க்கு 4.7 பெற்றுள் ளது. இலவசமாகக் கிடைக் கும் இந்தஆப்ஸை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ள னர்.
 
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard
 
அச்சிவ் (Achive) புரொடக்டிவிட்டி டைமர்:
 
ஒருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் தொடங் கி, ஒரு மிகப் பெரிய புராஜெ க்ட் முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்பது வரை கச்சி தமாக கணக்கிட்டு, அந்த வேலையைச் செய்து முடிக்க இந்த ஆப்ஸ் மிகவும் உதவியாக இருக் கும். இந்த ஆப் ஸில் ஒரு வேலை முடிய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பதிந்து விட்டால் போதும். அந்த வேலையைச் செய்து முடிக்க  இன் னும் எத்தனை மணி நேரம் மீதமிருக்கிறது, எவ்வளவு வேகத்தி ல் செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்ற தகவல்களை இந்த ஆப்ஸ் துல்லிய மாகத் தந்து விடும்.  இடையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப டாஸ்குகளை மாற்றியமைத்து க் கொள்ளும் வசதியும் இந்த ஆப்ஸில் உள்ளது.  இந்த ஆப்ஸின் மூலம் நம் வேலை செய்யும் திறன் எந்த அளவுக்கு இருக்கும் கணிக்க மிகவும் உதவியாக இருக்கும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது.
 
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=pl.thalion.achieve.productivity.timer
 
=> ச.ஸ்ரீராம்

Leave a Reply