Friday, April 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – பனீர் டிக்கா

சமையல் குறிப்பு – பனீர் டிக்கா <+> சமையல் குறிப்பு – பனீர் டிக்கா

சுவையான பனீர் டிக்கா என்னும் உணவினைச் சமை த்து ருசிப்போம், பிறர் ருசிக்க‍க்கொடுப்போம். இதோ

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பனீர் டிக்கா செய்ய தேவைப்படும் பொருட்களும், செய்முறைகளைப் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

னீர் – அரை கிலோ.

புளித்த தயிர் – 3 கப்,

உப்பு – 2 டீஸ்பூன்,

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,

கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்,

இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,

தந்தூரி கலர் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

(பொதுவாக வீட்டில் தயாரிக் கும் பனீர் மிகவும் மிருது வாக இருக்கும். எனவே அதை வாட்டி குச்சியில் குத்தும் போது உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை யாகக்கையாளவேண்டும். இப்பனீரை பெரிய பெரிய துண்டுகளாக சதுரமாக வெட்டிக்கொண்டு நடுவில் ஓட்டை போடவும்.)

தயிரில் எல்லா பொருள்களையு ம் கலக்கவும். பனீர் துண்டுகளை தயிரில் சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும். வேலைக்குச் செல்லு ம் பெண்கள் ஊறவைத்த பனீரை ஃப்ரிட்ஜில் வைத்து ஒருநாள், இரண்டு நாள் கழித்துக்கூட பரிமாறலாம். கெட்டுப்போகாது. பனீரை சூடான தோசைக் கல்லின் மேல் வைத்து சிறித ளவு எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்.

அல்லது சிறிதளவுஎண்ணெயில் முழுவ தும் பொரிக்காமல், பாதி பொரித்து பின் ஓவனில் கிரில்லில் வைக்கலாம். அல் லது முழுவதுமே ஓவனில் மைக்ரோ வேவிலோ செய்யலாம். குமட்டி அடுப்பு இருப்பவர்க ளுக்கு இவை எதுவுமே தேவையில்லை. ஒரு கபாப் குச்சியில் எல்லா பனீரையும் வரிசையாகக் குத்தி நெ ருப்பில் வாட்டலாம்.

பரிமாறும் முறை:

கடைகளில் இந்த கபாப் குச்சிகள் விற்கும். இதில் பனீர் டிக்கா ஒன்று, தக்காளி துண்டு ஒன்று, குடமிளகாய் துண்டு ஒன்று என்று மாறி மாறி குத்தி, தக்காளி சாஸு டன் பரிமாறவும்.

=> இது நம்ம வீட்டு சமையல்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: