Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா?

இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா?

கடவுள் பக்தியும், உழைப்பும் எப்போதும் தேவை! ஒரு காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் நிறைந்தவன். அவன் கடுமையான

உழைப்பாளி. தினமும் குளித்து முடித்து, கடவுளை வணங்கிவிட்டு, நம்பிக்கை யுடன் காட்டுக்கு விறகு வெ ட்ட வருவான். நெடு நேரம் உழைப்பான். நிறைய மரங் களைச் சேகரித்துக் கொண்டு, நகரத்துக்குக் கொண்டு போய் விற்பான். பணம் நிறைய கிடைக்கும். உணவு சமைத்து, கடவுளை வணங்கி, ஏழைகளுக்கும் கொஞ் சம் உணவை தர்மம் செய்து விட்டு நிம்மதியாக உறங்கச் செல்வான். அவன் மிகுந்த சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டான். அவன் முகமே தெய்வீகமாக இருப் பதாக மக்கள் பேசிக் கொண்டார்க ள்.

ஒரு நாள், அவன் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, அந்த நாட்டின் மன்னன் அப்பக்கம் வந்தான். கடமையே கண்ணாக இருந்த அவனைக் கண்டதும் மன்ன ன் அவன் அருகில் வந்தான். வந்த மன்னன் அரண்டுபோனான். காரண ம், கொடிய விஷமுள்ள ராஜநாகம் ஒன்று மரம் வெட்டிக்கு அருகில், சீற்றத்துடன்  படமெ டுத்து நின்றது. எந்நேரமும் கொட் டிவிடும் நிலைமை. பதறியமன்னன் கத்தினான். தம்பி, திரும்பாமல் சடக்கென முன்னே ஓடி வந்துவிடு. கொ டிய பாம்பு, கொத்தும் நிலை யில் உன் பின்னால் இருக்கிற து. இளைஞன் பதறவே இல் லை. திரும்பிப் பார்த்தான். எந்த தயக்கமும் இன்றி, அந்தக் கொடிய ராஜ நாகத் தைத் தன் கையால் பிடித்துத் தூக்கி, சற்றுத் தொலை வில் வீசி எறிந்தான். பின் அல ட்டிக் கொள்ளாமல் மரம் வெட் டத் துவங்கினான். ஆடிப் போய் விட்டான் மன்னன்.

அந்தப் பாம்பு உன்னைத் தீண்டி யிருந்தால் நீ இந்நேரம் செத்துப் போயிருப்பாய். இளைஞன் சிரித்தான். அரசே, இதுபோ ல் தினம் பல ஆபத்துகளை நான் சந்திக்கிறேன். இதற் கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த மு டியுமா? என்று கணீரென்று பதில்சொன்னான். ஆஹா,  இவனல்லவா வீரன் என்று மகிழ்ந்த அரசன், பரிசுகளை யும், பொற்குவியல்களையும் அளித்து, அவனுக்கு ஒரு பங்க ளாவையும் அன்பளிப்பாக அளித்தான். ஏராளமான பணி யாளர்கள்வேறு. அவ்வளவுதான். இளைஞனின் நிலை மையே மாறியது. அவன் கடவுளை மறந்தான். கடுமை யான உழைப்பை மறந்தான். ஏழைக ளுக்கு உதவுவதையும் மறந்தான். நிறைய செல்வம் இருந்ததால் சொகு சுப் பேர் வழியாக வலம் வர ஆரம்பி த்தான்.

சில மாதங்கள் சென்றன. மன்னன் அப்பக்கம் வந்தான். அந்த இளைஞன் காலில் ஒரு கட்டுப்போட்டு உட்கார்ந்திருந்தான். என் னப்பா ஆச்சு? தோட்டத்தில் சுற்றிவந்தபோது, நெருஞ் சி முள் குத்திவிட்டது. அது தான் மருத்துவர் சிகிச்சை தந்திருக்கிறார். என்றுசொன் னான். அவன். இந்த தலைகீழ் மாற்றத்துக்கு என்ன காரணம்? கடவுள் பக்தியுடன், கடுமையா க உழைத்து, ஏழைகளுக்கு உத விய வரை அவன் ஆரோக்கிய மாக இருந்தான். பயங்கர பாம் பைக்கூடக் கையால்பிடித்துத்தூக்கியெறிந்தான். ஆ னால் உழைக்காமலே காசு வந்தவுடன் அவனது பக்தி போய்விட்டது. உழைப்பு போய்விட்டது.

உதவும் எண்ணமும் போய் விட்ட து. நெருஞ்சிமுள் கூட அவனை நோயாளியாக்கிவிட்டது. வாழ்க் கையின் தத்துவம் மன்னனுக்குப் புரிந்தது. அந்த இளைஞனின் சொ த்துகளையெல்லாம் பறிமுதல்செய்தான் மன்னன்.

=>சித்தர்களின் குரல்-வழி-முகநூல் கோபி கிருஷ்ணன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: