Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – நாட்டுக்கோழி தெரக்கல்

நாட்டுக்கோழி தெரக்கல் என்ற பெயரைக் கேட்ட‍தும் நாக்கில் எச்சில் ஊறுகிறதா? சரி சரி சீக்கிரமா கீழுள்ள‍ பொருட்களை

எல்லாம் எடுத்து வைத்து தயாராகுங்க? எதுக்குன்னா கேக்குறீங்க, அட சமைக்க‍த்தான், சமைச்சு, நீங்களும் சாப்பிட்டு எனக்கு கொடுங்க•

நாட்டுக்கோழி தெரக்கல்
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி –½கிலோ
சின்ன வெங்காயம் – ¼கிலோ
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு –தேவையான அளவு
தக்காளி – 2
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை –சிறிது
தாளிக்க:
பட்டை – 2
சோம்பு –½தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு –½தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் – 1 கோப்பை
சோம்பு – 2 தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
முந்திரிபருப்பு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி

செய்முறை:

=> அரைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொருட்களை நன்றாக அரைத்து  வைத்துக்கொள்ள வேண்டும்.

=> கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

=> வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கிக் வைத்து க்கொள்ள வேண்டும்.

சட்டியில் எண்ணெய்ஊற்றி பட்டை, சோம்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொறிய விடவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழு தையும்சேர்த்து வதக்கி பின் மிளகாய்த் தூள், மல் லித்தூள், மஞ்சள்தூள், அரைத்த மசாலா மற்றும் தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீ ர் ஊற்றி வேகவிடவும். வெந்தவுடன் கொத்தமல்லி இ லையை சேர்த்து இறக்கவும். சுவையான நாட்டுக்கோ ழி தெரக்கல் தயார்.

=> ரா பொன்னழகு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: