Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!
 
ஆண்களே! உங்களுக்கு தாம்பத்தியத்தின் போது

தாமதமாக விந்து வெளியே றும் நிலை உள்ளது. இதை ஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல் வார்கள். ஒரு ஆணால் முப்பத்து நிமிடத்திற்குமேல் உறுப்பை உள் ளே தள்ளி உடலுறவு செய்தும் விந்து வெளியேற வில்லை என்றால் உங்களுக்கு இந் நோய் உள்ளதாக அர்த்தம்.

இந்த பிரச்சனைக்கு இரண்டு விதமான காரணங்கள் உண் டு. அவை மன ரீதியான பிரச்ச னைகள் மற்றும் உடல் ரீதியா ன பிரச்சனைகள்.
 
மன ரீதியான பிரச்சனைகள்

1) உங்கள் மனைவி அழகில்லை என்று கருதுவது.

2) தூக்கமின்மை.

3)உங்கள் மனைவி மீதுள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல்போன்ற உணர்வுகள்

4)அடிமனதில் உள்ள ஓரினச்சேர்க் கை ஆசை.

5) பணரீதியான, குடும்பரீதியான கவலை மற்றும் மன உளைச்சல்.

6) உங்கள் துணையை காம ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற அச்சம்.

7) உங்களுக்கு காம ரீதியான பிரச்ச னைகள் உள்ள தான மனபிராந்தி. உதாரணமாக உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத் துக் கொள்வது, அல்லது சுன்னி வளைந்திருப்பதாக நினைத்துக் கொள்வது.

8 மனதில் ஏற்பட்ட வடுக்க ள் (Psychological Trauma).

9)சிறுவயதில் பெற்றோர்க ளால் காமம் தவறு என்று வலியுறுத்தப்படுவது, அல் லது மதரீதியாக காமம் ஒருகேட்ட விஷயம் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது.

10) உங்கள் மனைவி இந்தப் பிரச் சனையை புரிந்து கொள்ளாமல், குத்திக் காட்டுவது.

உடல் ரீதியான பிரச்சனைகள்

வித்தியாசமான சுய இன்பப் பழக்கம். உதாரணமாக நீங்கள் உங்கள் ஆண்குறியை தொடாமல், தொடையை இறுக்கியே கூட விந்துவை வெளியேற்ற முடியும். இந்த மாதிரி வித்தியாசமான முறை யில் உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருந்தால், உங்களு க்கு உடலுறவின் போது விந்து வராது. ஏனென்றால், உங்கள் சுய இன்பமுறை, சாதார ண உடலுறவு முறையிலிருந்து ரொம்ப வித்தியாசப்ப டுகிறது.

குடி அல்லது போதைப் பழக்கம்.

நீங்கள் மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் கூட இது போன்ற பக்க விளைவுகளை ஏற் படுத்தலாம். குறிப்பாக நீங்கள் மனநோய்க்காக சாப்பிடும் மருந் துகள் (mood altering drugs) இந்த மாதிரி பக்க விளை வுகளை ஏற்படுத்தும்.

உடலுறவுக்கு முன் சுய இன்பம் செய்தல். உடலுறவுக்குமுன் னால் சுயஇன்பம் செய்துவிட்டு ப்போனால் இப்படி ஆக வாய்ப் புண்டு.
 
நரம்புத்தளர்ச்சி மற்றும் நரம்புரீதியான நோய்களாலும் விந்து வெளியேறத் தாம தப் படலாம்.
 
மனப் பிரச்சனையா? உடல் பிரச்சனையா?

இதைமுதலில் கண்டுபிடிக்க வே ண்டும். பெரும்பாலான ஆண்க ளுக்கு இப்பிரச்சனை மனரீதியா ன காரணங்களால்தான் வருகி றது. ரொம்ப குறைந்தபட்ச ஆண் களுக்கே, இது உடல் ரீதியான பிரச்சனையால் நடக்கிறது.

இது மனப் பிரச்சனையா, அல்லது உடல் பிரச்சனையா என்று நீங்களே கண்டு பிடிக்கலாம்.

முதலில் ஒரு தனி அறைக்கு செ ன்று, உங்கள் கையை வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி சுய இன்ப ம் செய்யுங்கள். உங்கள் கற்பனை யை உபயோகியுங்கள்.

உங்களுக்கு இருபது நிமிடத்திற்குள் விந்து வெளியே றினால், உங்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்சனை யும் இல்லை. இது மனப்பிரச்ச னையே.

இப்படி சுயஇன்பம் செய்தும், 30 நிமிடத்திற்கு மேலும் விந்து வெளியேறவில்லை என்றால், இதுஒரு உடல்ரீதியானபிரச்சனையாக இருக்கக்கூடும்
 
தீர்வுகள்:

இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உட லை பரிசோதித்துக்கொள்ளுங்கள். இதற்கு தீர்வு, நீங்கள் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்துவது, அல்லது குடிப்பழக்கத்தைவிடுவது போன்றவையாக இருக்கும்.

இதற்குஒருமனரீதியான காரண ம் இருந்தால்,ஒரு Sextherapist ஐ அணுகுங்கள். இவர், உங்களை யும் உங்கள் மனைவியையும் சே ர்ந்து வரச்சொல்லி, உங்கள் திரு மண உறவு சுமுகமாக இருக்கிற தா என்று பார்ப்பார். உங்கள் இருவருக்கும், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முனை வார்.

இக்கட்டம் முடிந்தபின், இரண்டு விதமான செயல்முறைகள் பரிந் துரைக்கப்படும். இது என்ன என்று பார்க்கலாம்.

செயல் முறை 1 :

1)ஆண் (நீங்கள்தான்) பெண்ணின்முன்னால் உட்கார் ந்து சுய இன்பம் செய்து, விந்தை வெளியேற்றவேண்டும். இதுமுதலி ல் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாரம் செய்ய வேண் டும்.

2) மேலே சொன்னது பழகிய பின், பெண், ஆணின் குறி யைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்றவேண்டும். இந்நிலையில் விந்து வெளியேற சிலசமயம் 1 மணி நேரத்துக்கு மேல் கூட ஆகலாம். ஆனால், பெண் பொறுமையாக ஆணு டைய குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும்.

3)மேலே சொன்ன இரண்டாவது கட்டமு ம் நன்கு பழ கிய பின்னர், பெண் வாயை வைத்து உறிந்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.

4) கடைசி கட்டமாக, மெல்ல மெல்ல பெண்ணின் உடலின் மேல் விந்தை பாய் ச்சுவது பழகி, பிறகு பெண்ணுறுப்புக்குள்ளே நுழைத்து ம் விந் தைப் பாய்ச்சலாம்.

செயல்முறை 2:

இந்தசெயல்முறை மாஸ்டர்ஸ் – ஜான்சன் என்ற புகழ்பெற்ற காம நிபுணர்கள் பரிந்துரைப்பது. அதுகீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) ஒரு குறிப்பிட கால கட்டத்துக்கு, ஆணும் பெண்ணு ம் உடலுறவு கொள்ளக் கூடாது. ஆனால், தொடுவது, த டவுவது, ஆழமாக முத்தம்கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.

2)அடுத்து பெண், ஆணை உட்கார வை த்து, அவன் ஆணுறுப்பை கையை வை த்து ஆட்டவேண்டும். ஆண் உச்ச கட்ட த்துக்கு அருகில் வரும் வரை இப்படி செய்ய வேண்டும்.

3) ஆண் உச்ச கட்டத்தை நெருங்கி யதும், பெண் அவன் மேல் உட்கார் ந்து, ஆணுறுப்பை தனக்குள்ளே நுழைத்து, விந்தை வெளியேறுமா று செய்ய வேண்டும்.

விந்து தாமதாக வெளியேறுவதை குணப்படுத்த முடி யாத பல ஆண்களுக்கு, தங்கள் மனைவிக்கு விந்து வ ங்கிமூலம் (அல்)செயற்கை சினை சேர்த்தல் (artificial insemination) மூலமாக குழந் தைபெறுவதுதான்தீர்வு. அதே போல இந்த தம்பதிகள் அடிக் கடி மனநல மருத்துவரிடம் சென்று மன அழுத்தத்திலிருந்து விடுபட முயல வேண் டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின்பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: