Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்(1.2.15)- அப்போதும் திருந்தாவிட்டால், அவளை விவாகரத்து செய்!

அன்புடன் அந்தரங்கம் 1.2.15- அப்போதும் திருந்தா விட்டால், அவளை விவகாரத்து செய்!

அன்புள்ள அம்மா…

நான், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். என் தாய், தந்தை இப்போதும் கூலி வேலைக்குத் தான் செல்கின்றனர். எனக்கு ஒரு

அண்ணன், ஒரு தங்கை. என் அண்ணன் திருமணம் முடிந்த உடனே தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். வறுமையின் காரணமாகவே, பள்ளிப் படிப்பை பாதியி லேயே நிறுத்திவிட்டேன். இப்போது கனரக வாகன ஓ ட்டுனராக பணிபுரிகிறேன். என்வயது28; என்மனைவி வயது, 26. எங்களுக்கு திருமணம் நடந்து, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

என் மனைவியின் வீட்டினர் கொஞ்சம் வசதியானவர் கள். அவள் அம்மா வீடு, என் வீட்டிலிருந்து, 1.5 கி.மீ., தொலைவில்தான் உள்ளது. நாங்கள் காதலித்தபோது, என் மனைவி என் வீட்டிற்கு பலமுறை வந்திருக்கிறா ள். எனவே, என் வீட்டு பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழ்நிலை, அவளுக்கு திருமணத்துக்கு முன்பே தெரியு ம்.

எங்கள் காதல் விவகாரம், என் மனைவியின் பெற்றோ ருக்கு தெரிந்து, வேறு மாப்பிள்ளை பார்க்கத் துவங்கி னர். உடனே நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொ ண்டோம்.

கொஞ்ச நாள் பேசாமல் இருந்த என் மனைவியின் பெற்றோர், பின் பேசினர். பின், கட்டில், பீரோ, பாத்திர ங்கள் வாங்கிக் கொடுத்தனர். தற்போது, எங்களுக்கு, 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

திருமணம் முடிந்த இரண்டு மாதங்களிலேயே என் மனைவி, பக்கத்து வீட்டு பெண்ணிடம் பெரிய சண்டை போட்டாள். நான், என் மனைவியை சமாதானம் செய்த போது, ‘நான் இங்கு வாழவே மாட்டேன்…’ என்று, தாலி யை கழற்றி எறிந்து விட்டாள். அவ்வப்போது, என் அம்மாவிடமும், தங்கையிடமும் சண்டையிடுவாள். நான் வேலைக்குச் சென்று திரும்பி வந்தவுடன் என் அம்மாவையும், தங்கையையும் குறை கூறுவாள். அத் துடன், அம்மாவிடம் நான் பேசும் போது, ஜன்னல் ஓரம் நின்று ஒட்டு கேட்பாள்.

வீட்டின் அருகில் உள்ள அனைவரிடமும் சண்டையிடு வதுடன், என்னை யாரிடமும் பேச விட மாட்டாள்; பேசி னால் சண்டையிடுவாள். ஒரு நாள், என் அம்மாவிடம் சண்டையிட்டு, என் பெற்றோரை கெட்ட வார்த்தையா ல் திட்டியதால், அவர்கள் தனிக்குடித்தனம் சென்று விட்டனர்.

என் அம்மா தான் கூலி வேலை செய்து, சேமித்து, என் தங்கையின் திருமணத்தை நல்லபடியாக நடத்தினார். ஆனால், என் தங்கையோ, அவள் கணவரோ எங்கள் வீட்டுக்கு வந்தால் வேகமாக சென்று கதவை சாத்திக் கொள்வாள்; தண்ணீர் கூட கொடுக்க மாட்டாள். இதே நிலைதான், என் சொந்த பந்தங்கள் எல்லாருக்கும், அதனால், யாரும் என் வீட்டுக்கு வருவதில்லை.

திருமணம் செய்த நாள் முதல் இன்று வரை, என் சம்ப ளத்தை அவளுக்காகத்தான் செலவுசெய்கிறேன். இருப் பினும், ‘நீ ஒன்றுமே வாங்கித் தருவதில்லை; என் அப்பா தான் வாங்கித் தருகிறார்…’ என்று பொய் பேசுகி றாள். ‘நீ ஏன் இப்படி பேசுகிறாய்…’ என்று கேட்டால் மெட்டி, தாலியை கழற்றி எறிகிறாள். நான் ஏதாவது பேசினேன் என்றால், ‘எனக்கு, 100 மாப்பிள்ளை வந் தனர்; நீ தான் என் வாழ்க்கையை கெடுத்துட்ட…. நீ போய் சாகுடா…’ என்று திட்டுகிறாள்.

காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோல ம் போடுவதோ, என் துணிகளை துவைப்பதோ கிடை யாது. அவள் மட்டும் சமைத்து சாப்பிடுவாள்; எனக்கு சாப்பாடு போட மாட்டாள்.

‘உங்கள் மகள் இப்படி எல்லாம் செய்கிறாள்…’ என்று, என் மனைவியின் அம்மாவிடம் கூறினேன். அதற்கு என்னைத் தான் குறை கூறுகின்றனர். திருமணத்துக்கு முன், என் மனைவிக்கு வேறு ஒருவருடன் காதல் ஏற் பட்டு இருக்கிறது. ஆனால், இருவரும் பிரிந்து விட் டனர்.

அவள் நடத்தையில், துளி கூட எனக்கு சந்தேகம் இல் லை. என் குழந்தையை தூக்கி கொஞ்சினால் பிடிங்கி க் கொண்டு, அவனை அடிப்பதுடன், குழந்தையை கெட்ட வார்த்தையால் திட்டுகிறாள்.

குழந்தை பசிக்கு அழுதால் கூட அடிக்கிறாள். அத்துட ன், குழந்தை அழுதால் பேய் பிடித்திருக்கிறது என்று கூறி சாமியாரிடம் போகிறாள்; மருத்துவமனைக்கு போகலாம் என்று சொன்னால், திட்டுகிறாள்.

இதனால், என் மனைவியை விவாகரத்து செய்ய விரு ம்புகிறேன். ஆனால், என் குழந்தையின் எதிர்காலத் தை நினைத்து அமைதியாக இருக்கிறேன். என் குழந் தையை நன்றாக வளர்த்து, அதற்கு நல்ல கல்வியை தர விரும்புகிறேன். நான் எங்காவது சென்று பிரிந்து வாழ நினைத்தால், குழந்தையின் மன அமைதியை கெடுத்து விடுவாளோ என்று பயமாக இருக்கிறது.

நான் என் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணி க்க நினைக்கிறேன்; நீங்கள் தான் நல்ல முடிவை கூற வேண்டும் அம்மா!

— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு,

உன் மனைவி இப்படி கெட்ட வார்த்தைகளின் அகராதி யாக விளங்க, எவ்வகையான காரணங்கள் இருக்கக் கூடும் என்பதை பார்ப்போம்…

உன்மனைவியின் பெற்றோர், மிகையான கெட்டவார்த் தைகளை உபயோகித்து, அடிக்கடி தங்களுக்குள் சண் டை போடுபவர்களாய் இருப்பர். அதை கேட்டு கேட்டு, உன் மனைவிக்கு அப்பழக்கம் தொற்றியிருக்கலாம். மனைவியின் தாய்வழி பாட்டி மூலமாகவோ, பள்ளித் தோழி மூலமாகவோ, கெட்ட வார்த்தைகள் அறிமுக மாயிருக்கலாம். கெட்ட வார்த்தைகள் பேசுபவர்களை கண்டு சமூகம் நடுங்குகிறது. அந்த நடுக்கத்தை பேசுப வர்கள், தங்களுக்கு சாதகமாய் எடுத்துக் கொள்கின்ற னர். எதிராளியை பத்து கெட்ட வார்த்தைகளால் அர்ச் சித்தால், 10,000 அடி அடித்த திருப்தி அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

உன் மனைவி ஒரு கலகக்காரி; சண்டைக்கோழி. எந்த பிரச்னையையும் சுமுகமாய் பேசி தீர்க்காமல், டபார் டுபார் என்று சண்டையிட்டு, உறவுகளையும், நட்புக ளையும் கத்திரிப்பவள்.

நீங்கள் காதலிக்கும் போது, உன் மனைவியின் மூளை யின் யோசிக்கும் திறன், ஒட்டடை படர்ந்து சிதைத்து விட்டது. திருமணத்திற்கு பின், அந்த ஒட்டடை அகன் று விட்டது. நீ அதிகம் படிக்காதவன், லாரி ஓட்டுபவன், வறுமையான குடும்பத்தைச் சார்ந்தவன், ஒரு இல்லத் தரசியின் கடமையை செய்ய வேண்டிய கட்டாயம் போ ன்ற உண்மைகள், உன் மனைவியை புளியமரத்தை உலுக்குவது போல உலுக்கி விட்டன. தன் இயலாமை யை, கெட்ட வார்த்தைகளால் ஓலமிடுகிறாள்.

உனக்கு முன், உன் மனைவி வேறொருவனை காதலி த்து பிரிந்திருக்கிறாள். அவனை மணந்திருந்தால், அமோகமாய் வாழ்ந்திருக்கலாமோ என்கிற ஆற்றா மையில், ஒரு கடைந்தெடுத்த ரவுடிபோல நடந்து கொள்கிறாளோ என்னவோ!

இவ்வளவுக்கு பின், உன் மனைவியின் நடத்தை மீது, உனக்கு துளியும் சந்தேகமில்லை என்பது ஆறுதலான விஷயம்.

அவளிடம் இப்படி கூறு… ‘நீ கெட்ட வார்த்தைகளை பிர யோகித்தால், நானும் பேசவேண்டிவரும்…’ என எச்சரி. அவள் நல்ல மூடில் இருக்கும் போது, உட்கார வைத்து, அவளது துர்நடத்தைகளின் பக்கவிளைவுகளை, தீமை களைப் பற்றி தெளிவாக பேசு. நாவடக்கம் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மிக அவசியம் என உணர் த்து. தீயினால் சுட்ட புண்களை விட, நாவினால் சுட்ட புண்கள் ஆயுளுக்கும் ஆறாமல், ரணவேதனை ஏற்படு த்தும் என்பதை புரியவை. மகனின் எதிர்காலத்துக் காகவாவது, அவள் இப்பழக்கத்திலிருந்து விடுபட வே ண்டும் என கோரிக்கை வை. அவளால் பாதிக்கப்பட் டவர்களை அழைத்து, இரு தரப்பையும் கை குலுக்க செய்து சமாதானப்படுத்து.

அவள் தன்னை திருத்திக் கொள்ள, ஒரு ஆண்டு அவ காசம் கொடு. இதற்கிடையில், உன் மனைவியை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து போய், கவுன்சிலிங் கொடு. அப்போதும் திருந்தாவிட்டால், அவளை விவா கரத்து செய்யும் முடிவை கையிலெடு.

உன், ௧௧ மாத ஆண் குழந்தைக்கு அன்பு முத்தங்கள்.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: