Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"பாட்டி வைத்தியங்கள்-இல் மிகவும் அபாயகர‌மானவை! – கண்டிப்பாக செய்யாதீங்க ப்ளீஸ்

“பாட்டி வைத்தியங்கள்-இல் மிகவும் அபாயகர‌மான வை – கண்டிப்பாக செய்யாதீங்க ப்ளீஸ்

பாட்டி வைத்தியங்கள்!

நமது வீடுகளில் இன்றும் புகழ்பெற்றுவிளங்கும் பாட்டி வைத்திய முறைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு

உடனடி நிவாரணங்களைப் பெற்றிருப்போம். இது பல வேளைகளில் நமக்கு கை வைத்திய மாக பலனளித்தாலும், அனைத்துமே பாதுகாப்பான வழிமுறைகள் என்று சொல்வதற்கில்லை.

யுவர்ஹெல்த் (Your Health) என்ற இ ணைய தளத்தில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையின் படி, சில கை வைத்திய வழிமுறை களை நம் வீடுகளில் தவிர்ப்பது நல்ல தாகும். அவை என்னென்ன என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

மெழுகுவர்த்தியில் காதை சுத்தம் செய்தல்

மெழுகுவர்த்தியின் இருமுனைகளையும் பற்ற வைத்து விட்டு, காதில் உள்ள அழுக்குகளை உறிஞ்சும்முறையை பலரும் பயன் படுத்தி வருகிறார்கள். எனினும், இதன் மூலம் காதுகள் அடைத்துக் கொள்ளவோ அல்லது தொற்றுகள் ஏற்படவோ அதிக வாய்ப்புகள் உள் ளதால், இது அபாயமான வழிமு றையாகும். தீர்வு: மெழுகுவர்த்தி யை எரிப்பதற்குப் பதிலாக காதுக ளுக்கான சொட்டு மருந்துகளை பயன்படுத்துமாறு, சொல்கிறார், மௌண்ட் எலிசபெத் மெடிக் கல் சென்டரைச் சேர்ந்த, டாக்டர். ஏ. பி. ஜான் என்பவர். இவர் காது, மூக்கு மற்றும் தொண்டை துறையில் மூத்த மருத்துவ ராவார்.

பருக்களை போக்க டூத் பேஸ்ட்

பல் துலக்குவதற்கு மட்டும், டூத் பேஸ்ட்டை பயன்படுத் தாமல், முகப்பருக்களை குணப்படுத்தவும் அதை பயன் படுத்துபவர்கள் உள்ளனர். எனினும், முகப்பருக்களை எரிச்சல் அல்லது அரிப்பின் மூலம் பெரிதுபடுத்தும் குண த்தை தான் டூத் பேஸ்ட் கொ ண்டுள்ளது என்று அவர்களு க்குத் தெரியப்படுத்த வேண் டியது நமது கடமை! தீர்வு: ஸ்பெஷலிஸ்ட் ஸ்கின் செ ன்டரில் பணியாற்றும் டாக்டர். செ யோங் வாய் குவாங் என்ற தோல் மருத்துவ ஆலோசகர், வினிகர் கரைசல் அல்லது உப்பு நீரை பயன் படுத்துங்கள் என்கிறார்.

விரல்களின் மருக்களை வெட்டுதல்

கூரான பொருட்களைக்கொண்டு விரல்களிலுள்ள மரு க்களை சில பேர் வெட்டி விட முயற்சி செய்வார்கள். இது தொற்றுக்களை வரவழைக்கும் செயலாகவும்,அவருடைய விரலை யே வெட்டவேண்டிய சூழலையும் உ ருவாக்கிவிடும்என்பதுதான், இதிலுள் ள ஆபத்தாகும். தீர்வு: ரத்னம் அலர்ஜி மற்றும் தோல் மையத்தைச் சேர்ந்த டாக்டர்.கே.வி.ரத்னம் என்பவர், படிக க்கல் அல் லது அறுவை சிகிச்சையே சிறந்தது என்று பரிந்துரை க்கிறார்.

தீக்காயங்களில் வெண்ணெய் வைத்தல்

வீடுகளில் பரவலாக பின்பற்றப் பட்டு வரும் பாட்டி வைத்தியங் களில் ஒன்றாக, தீக்காயங்களி ல் வெண்ணெய் வைக்கும் பழக் கம் உள்ளது. எனினும், தீக்காய ங்களில் வெண்ணெய் வைப்ப தால் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது இங்கு தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை யாகும். தீர்வு: உங்களுடைய தீக்காயம் சாதாரணமான தாக இருந்தால், அதில் சற் றே குளிர்ந்த நீரை ஊற்றி சரிசெய்ய முயற் சிக்கலாம் என்கிறார் Dr. ரத்னம்.

மீன் முள்ளை கையால் எடுத்தல்

தங்களது தொண்டைகளில் மீன் முள் சிக்கிக் கொண்டால், அதை எப்பாடு பட்டாவது கைகளிலே யே எடுத்துவிட முயற்சிப்பது நாம் காணும் சாதாரண செயலா கும். எனினும், இவ்வாறு செய் வதால் அந்த முள் தொண்டை யில் நன்றாக சிக்கிக் கொள்ளவோ அல்லது ஆழ மாக சென்று மாட்டிக் கொள்ளவோ செய்யும். இதனால் உங் களுடைய தொண்டை சேதமடைவது டன், விரல்களின் நகங்களும் தொண் டையை சேதப்படுத்திவிடும். தீர்வு: காது , மூக்கு மற்றும் தொண்டை மருத் துவ நிலையத்தின் ஆலோசகரும் மற் றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் Y.H. கோ என்பவர், அருகிலுள்ள மருத்துவ மனையை அணுகுவதுதான் பிரச்ச னை யை முறையாக தீர்க்கும் வழி என்கிறார்.

கண் கட்டிகளை ஊசியில் சரிசெய்ய முயற்சித்தல்

கண்களில் கட்டிகள் வரும் பொது ஊசியைக் கொண்டு அந்த கட்டியை குத்தி, சரி செய்ய முயற்சிப்பதை நாம் பார்த்திருப்போம். எனினும், இந்த கண் கட்டி கண்ணுக் கு மிகவும் அருகில் இருப்பதால், தவறுதலாக கண்க ளை குத்திவிடும் வாய்ப்புள்ளது. ஜாக்கிரதை. தீர்வு: இன்ட ர்நேஷனல் கண்மருத்துவமனை யில் ஆலோசகராக இருக்கும் டா க்டர். குர்ரி சியாங் என்பவர், ஊசி க்குப் பதிலாக, ஆன்டிசெப்டிக் கிரீ ம்களை பயன்படுத்துவது நல்லது என்கிறார்.

குழந்தைகளின் பல் ஈறுகளில் ஆல்கஹால்!

ஆல்கஹாலை பல்வேறு கவலைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தும் மக்கள் (!), குழந் தையின் பல் ஈறுகளில் வலி ஏற்படுவதை நிவாரணம் செய் யவும் அதையே பயன்படுத்துவ து தான் ஆச்சரியம்! எனினும், ஆல்க ஹாலில் உள்ள எரிச்ச லூட்டும் குணம் குழந்தைகளை மிகவும் பாதிக்கும். மேலும், சிலவகை ஆல்கஹால்களை குடிப்பதற்கு பய ன் படுத்தக் கூடாது என்று டாக்டர் வாரன் லீ என்பவர் குறிப்பிடுகிறார். இவர் குழ ந்தைகள் மருத்துவமனை யில் பொது மற்றும் குழந் தைகள் மருத்துவ பிரிவின் தலைவராக இருக்கிறார். தீர்வு: வலியை தாக்குப் பிடிக்கும் வகையில் குழந்தை க்கு எதையாவது கடிப்பதற்கு கொடுக்க வேண்டும் என்கிறார் டாக்டர் லீ.

=> க‌னகராஜ்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: