வேலூரில் திடீரென்று தொற்றிக்கொண்ட பரபரப்பால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம், நானும் ரவுடிதான். இந்த படத்தின் ஒரு காட்சியில்
பட ஹீரோயின் டாஸ்மாக் கடைக்குசென்று மதுபாட்டி ல் வாங்க வேண்டும். அதன்படி இந்த காட்சி ஒரு மாதத்துக்கு முன்பு புதுச்சேரியில் படமாக்க ப்பட்டது. நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் பாட்டில் வாங்குவது போன்ற காட்சியை டைரக்டர் படமாக்கினார். அப்போது டாஸ் மாக் கடை முன்பு ஏராளமானவ ர்கள் திரண்டனர்.
அதல்சிலர், அக்காட்சியை செல்போனில் படம்பிடித்துள் ளனர். உடனே அதை இணை யதளத்தில் கடந்த சில நாட் களுக்கு முன்பு வெளியிட்ட னர். நயன்தாரா டாஸ்மாக் கில் மது வாங்குகிறார் என தகவல் பரவியதால் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக நயன்தாரா விள
க்கம் அளித்தார். பட ஷூட்டி ங்கிற்காக எடுக்கப்பட்ட காட் சி அது. தயவு செய்து அதை பெரிது படுத்த வேண்டாம் என்றார்.
ஆனால் இப்படியொரு காட் சியை படமாக்கியதற்கு எதிர் ப்பு தெரிவித்தும் நயன்தாராவை கண்டித்தும் ஆங்கா ங்கே சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நி லையில் வேலூரில் நேற்று இந்து மக்கள் கட்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதாகர், செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் பலர் நயன்தாராவின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் மக்கள் கூடினர். பெரும் பரபரப்பு ஏற் பட்டது. அங்கு போலீஸ் பெருமள வில் குவிக்கப்பட்டுள்ளது.
செய்தி தினகரன்