Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க!

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு . . .
தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகி றேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட் ரால் வளமாக

நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வரு கின்றனர். இப்படி கொலட்ஸ்ரால் அதிகம் நிறைந்த உணவுகளை உட் கொண்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு உள் ளாகக் கூடும் என்பது தெரியுமா? அதிலும் கொ லட்ஸ்ரால் உடலில் அதிகம் இரு ந்தால், உயர் இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் போன்ற பிரச்ச னைகள் உடலி ல் சீக்கிரம் வந்து விடும்.

பொதுவாக கொலட்ஸ்ராலானது செல் மென்படலங்க ளின் சீரான செயல்பாடுகளுக் கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் சாதாரணமாக நமது உடலிலேயே செல் மென்படல ங்களின் செயல்பாடுகளுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலான து உற்பத்தி செய்யப்படும் என் று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண் டும் என்பதில்லை.

அதிலும் வயதாக ஆக, உண்ணும் உணவுகளில் அதிகம் கவனம் செ லுத்தவேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை விரை வில் சந்தித்து, சீக்கிரம் மரணத்தை தழுவ வேண்டியி ருக்கும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ 30 வயதிற்குமேல் கொலஸ்ட்ரா ல் குறைவாக நிறைந்த உணவுக ளை தேர்ந்தெடுத்து உட் கொண்டு வர வேண்டும்.

இங்குகொலஸ்ட்ரால் குறைவாக உள்ள சிலஉணவுகள் பட்டியலிட ப்பட்டுள்ளன. அவற்றைப்படித்து அதனை உணவில்சேர்த்து ஆரோக்கியமான வாழ்க் கையை வாழத்தொடங்குங்கள்.

அரிசி தவிடு மற்றும் கைக்குத்தல் அரிசி

இந்த இரண்டிலும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இவற்றை உட் கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட் ரால் அதிகமாவதைத் தடுக்கலாம்.

ஆளி விதை

உடலில்உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்ற னர். மேலும் இதனை வைரஸ் காய்ச்சலின்போது சிறிது வாயில் போட்டு மென்றால், வைரஸ் காய்ச்சலானது விரை வில் குணமாகும்.

பூண்டு

மிகவும் பிரபலமான உணவின் சுவையை யும், மணத் தையும் அதிகரிக்கும் பூண்டில் கூட கொலஸ்ட்ரால் இல்லை. அதுமட்டு மின்றி, இவை உடலில் உள்ள அதிகப் படியான கொலஸ்ட்ராலை கரைக்கவும் செய்யும்.

பாதாம்

மற்ற நட்ஸ்களைவிட பாதாமில் மட்டுமே கொலஸ்ட்ரால் குறை வு. மேலும் இதனை எந்த நேரம் வேண்டுமானாலும் பசியெடுக் கும் போது ஸ்நாக்ஸாக எடுத்து க் கொள்ளலாம்.

தக்காளி

தக்காளில் கொலஸ்ட்ராலைக் கரைக் கும் லைகோபை ன் என்னும் பொருள் அதிகம் இருக்கிறது. அத்துடன் தக்கா ளியிலும் புரோட்டீன் நிறைந்துள்ளது.

பார்லி

ஆம், பார்லிகூட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். எனவே பார்லி மாவைக்கொண்டு சப்பாத்தி, பூரி போன்று செய்து சாப்பிட்டால், மிகவு ம் நல்லது.

சாக்லெட்

சாக்லெட்டுகளில் டார்க் சாக்லெட்டி ல் தான் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. மேலும் டார்க் சாக்லெட் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கும்.

க்ரீன் டீ

தினமும் இரண்டுமுறை க்ரீன் டீ குடித்து வந்தால், கொலஸ்ட்ரா லானது குறையும். அதிலும் இதில் சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த் து குடிப்பது இன்னும் சிறந் தது.

ஓட்ஸ்

கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள இந்திய உணவுப் பொருட்களில் ஒன்றுதான் ஓட்ஸ். தற்போது பல மில்லி யன் மக்கள் தங்களது காலை உண வாக ஓட்ஸைதான் எடுத்து வரு கிறார்கள். மேலும் ஓட்ஸில் நார் ச்சத்து அதிகம் இருப்பதுடன், உடலில் அதிகளவு கொ லஸ்ட்ரால் இரு ந்தால், அதனை குறைக்கும்.

சோயா

சோயாவிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத்தான்உள்ளது. அத்துட ன் அதில் புரோட்டீனும் அதிகம் நி றைந்துள்ளது. மேலும் இது முட்டை யின் வெள்ளைக்கருவிற்குசிறந்த மாற்றாக இருக்கும்.

கோதுமை

கோதுமையில் நார்ச்சத்து அதிகம் இருப்ப துடன், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. எனவே இதனை எப்போதுவேண்டுமானா லும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்மார்ட்டான உணவுகள்

தென்ன ஸ்மார்ட் உணவுகள் என் று கேட்கிறீர்களா? அது வேறொன் றும் இல்லை, சிட்ரஸ் பழங்கள், ப்ளூ பெர்ரி, பச்சை இலைக் காய்க றி, பசலைக்கீரை, ஆலிவ் ஆயில் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் ம ற்றும் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் நிறைந் துள்ளது.
 
=) கனகா சுப்பிரமணி

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: