Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சாத்தியமே!

ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சாத்தியமே!

ஆர்கானிக் அழகு!

உணவில் மட்டும் இயற்கை முறைக்கு மாறினால் போதுமா? ஆர்கானிக் சாமையும், ஆர்கானிக் மாதுளை யும் சாப்பிட்டு விட்டு

ருமத்திற்கு கெமிக்கல்களைப் பயன்படுத்தலாமா? ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டு மல்ல, அழகும் சாத்தியமே!

கூந்தலை அலசும் பொடி

சிகைக்காய் அரை கிலோ பச்சைப் பயறு, வெந்தயம் தலா 100 கி., செம்பருத்தி இலை, வேப்பிலை  தலா 20 ஆகியவற் றை அரைத்து வைத்துக்கொள்ள வும். இந்தப் பொடியை கஞ்சித் தண்ணீரில் கலந்து, கூந்தலை அலசலாம்.

ஒருகப் தண்ணீரில் அரை எலுமி ச்சைப்பழத்தின் சாறைக் கலந்து, கடைசியில் அலசவும். இதுவே, கூந்தலுக்கு இயற்கையான கண் டிஷனர்.  

பலன்கள்: 

முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். முடி உதிர்வது நிற்கும். இயற்கையில் சுரக்கும் எண்ணெயை எந்த விதத்திலும் பாதிக்காது. முடி வளர்ச்சியைத் தூண்டு ம். கூந்தல் மென்மையாகவும் பளபளப் பாகவும் இருக்கும்

குளியல் பொடி

பச்சைப் பயறு  அரை கிலோ, ரோஜா இதழ்  10 கி. வெட்டி வேர்  50கி.இவற்றைஅரைத்து, குளியல் பொடியாகப் பயன் படுத்தலாம். சருமப் பிரச்ச னை இருப்பவர்கள், துளசி இலை, வேப்பிலைகளை சேர்த்துக் கொள்ளலாம். உட ல் வறட்சி இருப்பவர்கள், நல்லெண் ணெயை உடல் முழுவதும் தேய்த்த பிறகு, கட லை மாவு போட்டுக் குளிக்கலா ம். எண்ணெய் பசை பிரச்சனை உள்ளவர்கள், முட்டையின் வெ ள்ளைப் பகுதியை ஒருஸ்பூன் எலுமிச்சைச் சாறோ டு கலந்து முகத்தில் பூசி, அரை மணிநேரம் கழித்து பச்சைப் பயறுகொண்டு குளிக்க லா ம்.

பலன்கள்: 

சருமத்தில் உள்ள கரும்புள்ளிக ள், கருமைத் திட்டுக்களைப் போ க்கும். சருமத் தளர்ச்சியை சரி யாக்கும். அதி கப்படியான எண் ணெய் பசையை நீக்கும். நிறம் பொலி வு பெறும். சரும எரிச்சலைக் குணப்படுத்தும்.

உதட்டுச் சாயம்

பசுவெண்ணெய் (அல்) பால் ஆடையை உதட்டில் தடவ லாம். நிறம் தேவை எனில், பீட்ரூட் சாறை வெண்ணெயு டன் கலந்து பூசலாம். கொத் தமல்லிச் சாறை உதட்டில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

பலன்கள்:

உதடுவறட்சி, வெடிப்புகள்நீங்கி, மென்மையாகும். கரு மை நிறம் நீங்கி, இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறலாம்.

எண்ணெய் குளியல்

பாதாம் எண்ணெய், நல்லெண் ணெய், ஆலிவ் எண்ணெய், மாலாத்யாதி எண்ணெய் என, ஒவ்வொரு நா ளும் ஒவ்வொரு எண்ணெயை உடலில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். கூந்தலில், 5 மி.லி நல்லெண்ணெயை இளஞ்சூடாக தலையில் தடவி, 1/2 மணி நேரம் கழித்து அலசலாம்.

பலன்கள்:

எண்ணெய் கீழிருந்து மேல் தடவுவ தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சரு மத்தில் சுருக்கங்கள்ஏற்படாது. உடல் புத்துணர்ச்சிஅடையும். உடலில்உள்ள நச்சுக்கள் வெளியேறும். சருமத்தில் நிறம் அதிகரிக்கும்.

கண் மை

வெள்ளி விளக்கில் பசுநெய் ஊற்றி, நெய்யில் நனைத்தப்பஞ்சுத் திரியை க் கொண்டு விளக்கேற்றவும். அருகி ல் இரண்டு பாத்திரங்களை (பிரிட்ஜ் போல) வைக்க வும். கீழே விளக்கு எரிய பாத்திரங்களின் துணையோ டு அடிப்பகுதியில் நெய் தடவப்பட்ட வெள்ளித் தட்டை மேலே வைக்கவும்.  20 நிமிடங்கள் வரை எரிய விடுங்கள். தட்டில் படியும் மையை வழித்து, குங்குமச் சிமிழில் சேமித்து, 2  3 துளிகள் நெய் சேர்த்துக் குழைத்து வைத்துக் கொள்ளவும். 2 வாரங்கள் வரை இந்த மையைப் பயன் படுத்தலாம். வெள்ளி விளக்குக்குப் பதிலாக, பித்தளை, செம்பு விளக்கு, தட்டு களையும் பயன்படுத்தலாம்.

பாதாம் கண் மை

மேலே சொன்ன முறையிலே பாதாம் பருப்புகளை குண்டூசியில் குத்தி, நெரு ப்புக்கு மேலும், தட்டுக்கு கீழுமாக வைத்து 10  20 நிமிடங்கள் வரை சுடலா ம். ஊசி முனையைத் துணி வைத்துப் பிடித்துக்கொள்ளுங்கள். இயற்கையாக வே பாதாமில் எண்ணெய் இருப்பதால், அவை எரியத் தொடங்கும். அந்தச் சாம் பலை எடுத்து, நெய் கலந்து சேமித்து வைக்கலாம். இந்த மையை இரண்டு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பலன்கள்: 

கண்களில் உள்ள அழுக் கை வெளியேற்றும். கண்க ளில் உள்ள வர்மப் புள்ளி யைத் தூண்டி விடுவதால், இதனை ‘அஞ்சன மிடுதல்’ என்பர். பார்வைத் திறன் அதிகரி த்து, தெளி வாகத் தெரியும். கண்களுக்குக் குளிர்ச்சி உண் டாகும். சோர்வு நீங்கும்.

=> அஞ்சலி ரவி, அழகுக்கலை நிபுணர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: