கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ அல்லது பெண்ணோ . . .? – மகா பெரியவாவின் அருள்வாக்கு
வாழ்க்கை என்பது தம்பதிகளாக வாழ்வதுதான். ஆண் கள் இந்தக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளாம லேயே பந்தமில்லாமல்,
பொறுப்பில்லாமல் சுதந்திர மாக வாழலாம் என்ற பலரும் நினைக்கிறார்கள். அதேபோல் பெண்களும் கல்யாணம் செய்துகொள்ளாமலேயே ஏதோ உத்யோ கம் செய்துகொண்டு, சம்பாதித்து சுதந்திரமாக ஒரு பந் தத்திலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையாகப் பார்க்கும்போது கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ, பெண்ணோ வாழ்க்கை யில் பல பொறுப்புகளையும், பல பந்தங்களையும் பல கஷ்டங்களையும் எற்றுக் கொண்டிருப்பதானது கண் கூடாகத் தெரிகிறது.
கல்யாணமான தம்பதிகளுக்கு வரக்கூடிய இன்ப துன் பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தம்பதிகளே, பரஸ் பரம் பேசி பலவித பிரச்னைகள், கஷ்டங்களை தீர்த்து க்கொள்ள வாய்ப்பிருக்கிறது. கணவனும், மனைவி யும் சொல்லும் அதன் விளக்கமும் போல, இரு உடல் ஒரு மனதாக இருக்க வேண்டும்.
வாழ்க்கை என்றால் சந்தேகங்கள் அபிப்ராய பேதங்க ள் இருப்பது சகஜம். அவைகளைப் பெரிதுபடுத்தாமல் இறைவன் கொடுத்த புத்தியை நன்றாக உபயோகித்து, ஒரு தடவைக்குப் பலதடவை நன்றாக செது, பொறு மையுடன், பொறுப்புடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், ‘நான் எவ்வளவு நாள் விட்டுக் கொடுப்பது? நீங்கள் விட்டுக்கொடுத்தா ல் என்ன?’ என்று சொல்லிக்கொள்ளாமல் இரு உடல் ஒரு மனதுடன், சொல்லும் பொருளும் போலும், சமுத் திரத்தில் வரும் அலை எப்படி வந்து போய் ஒன்றாகி றதோ அதுபோல், நம்மிடையே ஒருவருக்கொருவர் மனஒற்றுமையுடன் வாழ்வதே வாழ்க்கை.