Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களே! உங்க க‌ணவர்களை, முந்தானையில் முடிந்து கொள்ள‍ சில ஆலோசனைகள்

பெண்களே! உங்க கணவரை, முந்தானையில் முடிந்து கொள்ள‍ சில ஆலோசனைகள்

பெரியர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள். அவளா, அவ ளோட கணவனை முந்தானையில்

முடிந்து வைத்திருக்கிறாளே! என்று அது எப்ப‍டி சாத்தி யம் என்று கேள்வி எழும். இதில் எந்தவிதமான மாய மந்திரமோ அல்ல‍து அடிமைத்தனமும் இல்லை.
த‌னது கணவனுக்கு தான் எப்ப‍டி நடந்துகொள்ள‍ வேண்டும், எப்ப‍டி நடந்தால் தன்னை தனது கணவன் நேசிப்பான் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் படி கணவனுக்குப் பிடித்த‍தை மனைவி செய்து, அவன து மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டும்.  அப்போது தான் அவனது மனதில் ஆஹா, தனக்காக அவளையே மாற்றிக்கொண்டு வாழ்கிறாளே! என்று அவரது மனை வியான உங்கள் மீது ஒரு மதிப்புத் தோன்றும் அந்த மதிப்பு நாளடைவில் மரியாதையாக மாறி உங்களது வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார்.

இதைத்தான் பெரியவர்கள் தன் கணவனை முந்தா னையில் முடிந்துகொண்டாள் என்று கூறுவார்கள்.

“கல்யாணமான புதுசுல தேன் தடவின மாதிரி இனிக்க, இனிக்க எப்படிப் பேசுவாரு. இப்ப எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறாரு. அதுக்குள்ள நான் அலுத்துப் போயி ட்டேன் போலருக்கு” என்று அலுப்பா? இதையெல்லா ம் பின்பற்றிப் பாருங்களேன்.பேச்சைக் குறைத்துக் கொ ள்ளுங்கள். அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பியுங்கள்.

உங்களுடன் வண்டியில் போகும் போது உங்களுக்குத் தெரிந்தே மற்ற பெண்களை சைட் அடிக்கிறாரா? உங் களுக்குத் தெரியாமல் தனது வண்டியில் பெண்களுக் கு லிஃப்ட் தருகிறாரா? அதையெல்லாம் பெரிதுபடுத்தா தீர்கள். மன்னித்து, மறந்துவிடுங்கள்.ஏதேனும் முக்கி யமான பிரச்சனை குறித்து விவாதிக்கிறீர்களா? பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிகிறதா? சட்டென்று பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது வேறு விஷயத்திற்குத் தாவி விடுங்கள்.

அவரைப் பார்த்துப் பொறாமைப்படுங்கள். அது ஆரோ க்கியமானதாக இருக்கவேண்டும். கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும். பைசா பெறாத விஷயத்திற்குக் கூடத்தானே முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்ப வரா? போகட்டும், விட்டுவிடுங்கள். அந்த முடிவு பாதக விளைவுகளைத் தரும்போது நாசுக்காய் சுட்டிக் காட்டு ங்கள். உங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இ ருந்தாலும் அவற்றை யெல்லாம் பெட்ரூமுக்கு உள்ளே வர அனுமதிக்காதீர்கள். உங்கள் உடல், மன நிலைக் கேற்ப அடிக்கடி செக்ஸ் உறவில் ஈடுபடுத்திக் கொள் ளுங்கள்.

அம்மாவை நேசியுங்கள். உங்கள் அம்மாவை இல் லை. அவரது அம்மாவை. கொஞ்சம் கஷ்டம்தான். இரு ந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். பிறகென்ன, மனி தர் உங்களைத் தலையில் வைத்துக்கொண்டாட ஆரம் பித்து விடுவார்.போனால் போன இடம், வந்தால் வந்த இடம் என்று இருப்பவரா உங்களவர்? உங்களை எங் கேயாவது அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறி விடுகிறாரா? ஆளைப்பார்த்தும் ஆத்திரமாகக் கத்தாதீர் கள். ஏமாற்றத்தை வார்த்தைகளிலோ, முகத்திலோ காட்டிக்கொள்ளாதீர்கள். அவரது செயல் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்கிறபடி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும். மனிதர் தானாக வழிக்கு வருவார். அடுத்தமுறை அதே தவறைச் செய்யத் தய ங்குவார்.

அவரது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமு ம் நன்றாகப் பேசிப் பழகுங்கள். யார் மீதாவது உங்களு க்கு வெறுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்.உங்களவருக்கு நெருங்கிய நண்பர்களாவோ, உறவினர்களாகவோ இருந்தாலும் கூட மூன்றாம் நபருக்கு எதிரில் அவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள்.

எக்காரணம் கொண்டும் உங்களவரை மற்ற ஆண்களு டன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் பெரும் பாலான ஆண்களுக்குப் பரந்த மனப்பான்மை கிடை யாது.கணவன்-மனைவிக்குள் சண்டைகளே இருக்கக் கூடாது என்று நினைக்காதீர்கள். அப்படி சண்டைகளே இல்லாமல் வாழ்வதாகச் சொல்பவர்களையும் நம்பா தீர்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: