Thursday, February 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழைப்பழம் இருக்க‍ வாழ பயம் ஏன்?

வாழைப்பழம் இருக்க‍ வாழ பயம் ஏன்?

வாழைப்பழம் இருக்க‍ வாழ பயம் ஏன்?
வாழைப்பழம் இருக்க‍ வாழ பயம் ஏன்?

இந்த நாட்டில் ஏழைகளுக்கும் சரி பணக்காரர்களு க்கும் சரி, வெயில் காலத்திலும் சரி, மழைக்காலத்தி லும் சரி எப்போது எளிதாக கிடைக்கும் ஒரே பழம் இந்த வாழைப்பழம் மட்டுமே! அதுமட்டுமா

முக்க‍னிகளில் ஒன்றான விளங்குவதும் இந்த வாழை ப்பழம் தான். வாழைப்பழம் இருக்கும்போது உங்களுக் கு வாழ பயம் ஏன்?

உங்கள் மனதில் ஒரு வித மான பயம் உண்டாகும் போது, சற்று வியர்வையும் ,படபடப்பும் அதிகமாகும். அச்சமயத்தில் நீங்கள் வா ழைப்பழம் ஒன்றோ அல்ல‍து இரண்டோ வாங்கி சாப் பிட்டுவிட்டு தண்ணீர் குடித்து விட்டு சிறிது நேரம் அ மைதியாக அமர்ந்தோ அல்ல‍ து படுத்துக்கொண்டோ இருங் கள். பின் மனதில் தோன்றிய ஒரு வித பயம் இருந்த சுவடே தெரியாமல் காணாமல்போய் இருக்கும். மேலும் உங்கள் மனதில் புதிய உற்சாகம் பிற ந்திருக்கும். மேலும் தினமும் ஒரு வாழைப்பழம் சாப் பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.
மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப் பழ ம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். வயது ஆக ஆக எல்லோரு க்கும் கண்பார்வை குறை யத் தொடங்கிவிடும். அத்த கைய பாதிப்புக்கு ஆளான வர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நா ட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

=> சுகுமாரன்

One Comment

Leave a Reply