Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (15.2.15): மனைவியை உற்சாகப்படுத்தும் மந்திர வார்த்தைகள்!

அன்புடன் அந்தரங்கம் (15.2.15): மனைவியை உற்சாகப் படுத்தும் மந்திர வார்த்தைகள்!

அன்புள்ள அம்மா,

என் வயது, 50; கணவர் வயது, 55. எங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். வீட்டு நிர்வாகம் முழுவதும் என்னு டையது. வீட்டுக்காக எவ்வளவோ உழைத்தும்,

நல்ல பேர் இல்லையே என்ற வருத்தம் உண்டு. கண வனின் பாராட்டும், அக்கறையும் ஒரு உற்சாக டானிக் என நினைப்பவள் நான். அது கிடைக்கவில்லை என் றால்கூட பரவாயில்லை. ஆனால், தற்போது, என்கண வர் எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டர், மொபைல் போன், ‘வாட்ஸ்அப்’ என, அதிலேயே மூழ்கி யுள்ளார்.

பொதுவாக, என் கணவருக்கு ஆண் நண்பர்களை விட, பெண் நண்பிகளே அதிகம். எப்போதும், அவர்களோடு, எஸ்.எம்.எஸ்., ‘வாட்ஸ்அப்’ என, பிசி யாக இருப்பார். நாங்கள் யாராவது அருகில் சென்றா ல், உடனே மாற்றிவிடுவார். ஏதோ தப்புசெய்வதால் தான், எங்களைப்பார்த்ததும் மறைக் கிறார் என நினைக் கிறேன்.

நானும், மிகப்பொறுமையாக கண்டும்காணாமல்தான் இருந்தேன். ஆனால், சமீபகாலமாக, அவர், என்னை விட, மற்றப் பெண்களோடு தான் அதிகம் பேசுகிறார். இது, எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்ததால், அவ ரைக் கண்டித்தேன். அதிலிருந்து, அவர் என்னிடம் பேசுவ தில்லை.

இது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது. என் வளர்ந்த இருபிள்ளைகளும், இணைய தளங்களை கவனமாக கையாளும் போது, என் கணவர் இப்படி இருப்பது கவலையாக இருக்கிறது. மகன்களிடம் என் மனக் குமுறலைக் கூற முடியவில்லை. ஆனால், இவ ருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என நினை க்கிறேன்.

வயதான காலத்தில், மனைவியின் உதவி கணவனுக் கும், கணவனின் உதவி மனைவிக்கும் எவ்வளவு தே வை என்பதையும், இத்தகைய பரஸ்பர உதவிகள் தான் நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக் கும் என்பதையும் உணராமல் இருக்கிறார். என்னை மனைவியாக மட்டும் இல்லை, மனுஷியாகக் கூட மதிப்பதில்லை. சம்பளம் இல்லா வேலைக்காரி போல் இருக்கிறேன்.

இதை யாரிடமும் கூற முடியாத நிலையில், உங்களு க்கு கடிதம் எழுதி, உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். எனக்கு நல்ல வழிகாட்டுங்கள். தினமும் மன உளைச் சலுடன் வாழ்கிறேன்.

நீங்கள் அளிக்கும் பதிலை, என் கணவரிடம் காட்டி, நல்ல கணவராக இருங்கள் எனக் கூறப் போகிறேன். மறுத்தால், அவரை விட்டுப் பிரிந்து விடலாம் என நினைக்கிறேன். விரைவில், என் கடிதத்திற்கு நல்ல பதிலை அளித்து, என்னை மன உளைச்சலில் இருந்து காப்பாற்றும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள் கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கும்.
— உங்கள் சகோதரி.

அன்பு சகோதரிக்கு,

திருமணத்திற்கு முன், ஓர் ஆணின் புறத்தேவைகளை, அவனது பெற்றோரும், திருமணத்திற்கு பின், அதே ஆணின் அக மற்றும் புறத்தேவைகளை, அவனது மனைவியும் நிறைவேற்றி விடுகின்றனர். இதனால், பெரும்பாலான ஆண்கள், ஆண் தேனீக்கள் போல முழு சோம்பறிகளாய் மாறி விடுகின்றனர்.

உன்னுடையது ஒரு அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம். உன் குடும்பத்தில் வறுமையோ, பண பற்றாக்குறை யோ இருக்க வாய்ப்பில்லை. பல லட்சங்களை செலவ ழித்து, திருமணம் செய்து வைக்க மகள் இல்லை. தந் தைக்கு தொந்தரவு தராத, அம்மாவின் நற்குணத்தில், இரு மகன்களும் உள்ளனர். வீட்டு நிர்வாகத்தை முழு க்க முழுக்க நீயே கவனித்துக் கொள்வதால், அந்த பார மும் உன் கணவனை அழுத்தாது.

உன் கணவர் அரசு பணியில் இருந்தால், வெகு சீக்கிரம் ஓய்வு பெறுவார். சிலர், விரைவில் ஓய்வுப் பெற போ கிறோமே என்கிற மன பதட்டத்தில் இருப்பர். இன்னும் சிலரோ, பொறுப்பிலிருந்து விட்டு விடுதலையாகும் பரவசத்தில் திளைப்பர்; உன் கணவர் இரண்டாவது வகை!

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோர், 24 மணி நேரமும் மொபைல் போனும், கையுமாக திரிகின் றனர். விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் மனித குலத் தின் மாண்பையும், நியதியையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் சிதைத்து வருகின்றன. கணினி, மொபைலில் மூழ்கி கிடப்பதும், ஒரு வகையான போ தைதான்! ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய். நானும், ‘நெட்டிசன்’டா என மார்தட்டிக் கொள்வது, பேஷனாகி வருகிறது.

உன்கணவர், இளைஞர்களோடு இளைஞனாய்தன்னை அடையாளப்படுத்தி காட்டவே, இணையதளத்தில் தவம் கிடக்கிறார். நிஜவாழ்க்கையில், பெண்கள் எளி தாய் சிக்குவதில்லை. கணினி, மொபைல் போன் மூல ம் வலை விரித்து, பெண்களை பிடித்துவிடலாம் என் கிற நப்பாசையில். எஸ்.எம்.எஸ்., ‘வாட்ஸ் அப்’ மூலம் பெண்களுடன் பேசி, சந்தோஷப்படுகிறார் உன் கணவ ர். தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக் கே நன்றியாய் இல்லாத ஆண், இடையில் வந்த மனைவிக்கு எப்படி நன்றியாய் இருப்பான்!

‘என் சட்டையை அயன் செய்து வைத்ததற்கு நன்றி; இந்தப் புடவையில் மிக அழகாய் இருக்கிறாய்; இன்று நம் திருமணநாள். திருமணத்தின் போது இருந்ததை விட இப்போது மிக அழகாய் இருக்கிறாய். உன்னிடம் மோசமாகபேசிவிட்டேன் மன்னித்துவிடு; மதியஉணவு சூப்பர்…’ போன்ற கணவனின் சின்னச் சின்ன பாராட்டு வார்த்தைகள் மனைவியை உற்சாகப்படுத்தும் மந்திர வார்த்தைகள்!

ஆணாதிக்க திமிரால், உன் கணவன் உட்பட நிறைய கணவன்மார்கள், இந்த வார்த்தைகளை சொல்ல விரு ம்புவதில்லை.

‘கணினி, மொபைல்போன் கையாளும் போது, திருட்டு த்தனம் இல்லாமல், ஒரு பொழுதுபோக்கிற்காக பார்க் கிறேன், பேசுகிறேன். பெண் தோழிகளுடன், எந்த உள் நோக்கத்தோடும் பழகவில்லை. உனக்கு பின்தான் எனக்கு எல்லாம் …   என்று உன் கணவன் சொல்லியி ருந்தால், உனக்கு ஒரு மன ஆறுதல் கிடைத்திருக்கும். அதை உன் கணவன் செய்யவில்லை. இதனால், நீ எந்த அளவு மன வருத்தத்தை அனுபவித்து வருகிறா ய். அதனால், உடலில், மனதில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை கொஞ்சம் அன்பும், கனிவும் காட்டி பக்குவமாக கூறு.

கணினியிலும், மொபைலிலும் அதிக நேரம் செலவிடு கிறான் எனக் கூறி, தமிழக பெண்கள் தங்கள் கணவன் மார்களை விவகாரத்து செய்யத் துணிந்தால், தமிழகம் ஒரு விவகாரத்து பூமி ஆகிவிடும். அதற்கு பதில், ‘தினம் சில மணி நேரம் மட்டும் கணினியை, மொபை லை உபயோகபடுத்து புருஷா…’ என, கணவனிடம் கறார் கண்டிப்பு காட்டு.

மகன்களிடம் நாகரிகமாய்கூறி, தந்தையை நைச்சிய மாய் திருத்த சொல். உன் மனக்குறைகளை, ஆவலா திகளை கணவன் தனித்திருக்கும்போது, மனம் விட்டு பேசி, அவனை உன் பக்கம் இழு. மாதம் ஒரு முறை கணவன், மகன்களுடன் பிக்னிக் போ. வாரம் ஒரு நாள் கணினிக்கும், மொபைலுக்கும் முழு ஓய்வு கொடுக்க சொல்.

கணவனை மட்டும் முழுக்க சார்ந்திருக்காது உபயோக மான பொழுது போக்குகளுடன் நேரத்தை செலவழி. கோவிலுக்கு போ; மாடியில் காய்கறி தோட்டம் போடு; திருமணத்திற்கு முந்திய தோழிகளை தேடி பேசு.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

Leave a Reply