Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – முளைக்கட்டிய பச்சைப்பயறு டோக்ளா

0000சமையல் குறிப்பு – முளைக்கட்டிய பச்சைப்பயறு டோக்ளா

நாக்கிற்கு ருசியான உணவுகளையே நாம் பார்த்து வருகிறோம். இப்போது நமது உடல் ஆரோக்கியத்திற் கான உணவு வகைகளை பார்ப்போமா?

ஆரோக்கியமான

முளைக்கட்டிய பச்சைப்பயிறு டோக்ளா

தேவையானவை:

முளைகட்டிய பச்சைப்பயறு – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2 (விழுதாக்கவும்),
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (விழுதாக் கவும்),
ஆப்பசோடா – ஒரு சிட்டிகை,
சர்க்கரை நீர் – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு.
தாளிக்க: எண்ணெய் – 3 டீஸ்பூன்,
கடுகு – சிறிதளவு,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய் – 2.

அலங்கரிக்க:

நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இதனுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர் த்து, பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு சேர்த்து, எண் ணெய்தடவிய பாத்திரத்தில்போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போடவேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.

0000தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனு டன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலா க ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக்கிய கொத்த மல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.

=> தினகரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: