Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் 22-2-15- உடலுறவுக்கு ஒத்துழைக்காத மனைவி மீது . . .

அன்புடன் அந்தரங்கம் 22-2-15- உடலுறவுக்கு ஒத்துழைக்காத மனைவி மீது . . .

அன்புடன் அந்தரங்கம் 22-2-15- உடலுறவுக்கு ஒத்து ழைக்காத மனைவி மீது . . .

அன்புள்ள தங்கைக்கு,

நான் ஓய்வு பெற்ற இன்ஜினியர், 70; என் மனைவியும் ஓய்வுபெற்ற பேராசிரியை, 69. எங்களுக்கு ஒரு மகனு ம், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் தனித்தனி யே திருமணமாகி தனியாக

வசிக்கின்றனர். மகனுக்கு பெங்களூரில் வேலை; நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, குடும்பத்தோடு வந்து மூன்று, நான்கு நாட்கள் தங்கி விட்டு போவான். மகள் உள்ளூரில் வசித்தாலும், எப்போதாவது ஒரு முறை தான் வருவாள்.

தோட்டத்துடன் கூடிய சொந்த வீடு, கார், கையிருப்பில் பணம் எல்லாம் இருந்தும், மன தில் நிம்மதி இல்லை. எப்போ தும் எனக்கும், என் மனைவிக் கும் சண்டை தான்.

வீட்டின் கீழ்ப்பகுதியில் நாங்க ளும், மேல் பகுதியில் வாடகை க்காரர்களும் இருக்கின்றனர். பென்ஷன், வா டகை, மற்றும் இதர வருமானங்கள், என, மாதம் 65,000 ஆயிர ம் ரூபாய்க்கு மேல் வருகிறது. கீழ்ப்பகுதியில், நாங்க ள் இருவர் மட்டும் தான். எங்களுக்குள் பிரச்ச னைகள் ஏற்படுவதற்கு மூல காரணம், என்னுடைய ஆணவம், வறட்டு பிடிவாதம், எல்லாம் தெரியும் என்ற அகம் பாவம் தான் என்று, எனக்கே தெரிகிறது.

என் மனைவி, டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் அமைதியான வள்; வெளிஉலகம், பொதுஅறிவு , மற்றவர்களை வேலை வாங்கு ம் திறமை இதிலெல்லாம் அவள் கொஞ்சம் விவரம் அறியாதவள். சொல்லிக் கொடுத்தா லும், இந்த வயதிற்கு மேல், இதெல்லாம் தெரிந்து கொ ள்ள வேண்டியதில்லை என்பாள்.

இதனால், அவளை அடிக்கடி மட்டந்தட்டி பேசுவதால், பல நேரங்களில் வாய்ச்சண்டை முற்றி, சில சமயம், அவள் மனம் நோகும் அளவுக்கு, அவள் குடும்பத்தா ரையும் திட்டி பேசி விடுகிறேன்.

பொதுவில் அவள் நல்லவள்; குணசாலி; குடும்பப் பாங்கா னவள். இரு பிள்ளைகளையு ம் வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தவ ளே அவள் தான். நான், என் வேலைஉண்டு, என்தொழில் உண்டு என்றே இருந்தவன். எனக்குத் தொழிலில் சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம், பண உதவிசெய்ததுடன், ஆறு தலாக வும் இருந்திருக்கிறாள்.

நான் உருப்படியாகச் செய்தது, அலையாய் அலைந்து மனை வாங்கியது, தொழிலைக் கவனித்துக் கொண் டே வீட்டையும் கட்டி முடித்தது, வீட்டில் ஏதாவது பிரச் சனை என்றால், அதிகாரம் செய்து அடக்குவது தான்!

சுருக்கமாகச் சொன்னால், என் குடும்பத்தை அவள் தான் முழுமையாகப் பராமரி த்தாள்; இன்றும் பராமரிக்கி றாள். தெய்வ பக்தி உடையவ ள்; இருவரும் அடிக்கடி கோ விலுக்கு போவதும் உண்டு. ஆண்டுக்கு 25,000 ரூபாய்வ ரை தான, தர்மங்களும் செய் வோம். இருப்பினும், இப்போ தெல்லாம் எங்களுக்குள் அடிக்கடி பிரச்ச‌னை உண் டாகி, பெரிதாகி, வார்த்தை தடித்து விடுகிற து.

சிறுவயதிலிருந்தே மற்றவர்களை அடக்கிப்பழகிவிட் ட நான், எதற்கெடுத்தாலும் அவளிடம் வாதம் செய்ய ஆரம்பித்து விடுகிறேன். அவளது இயலாமையையும், வெகுளித்தனத்தையும் குத்திக்காட்டி பேசுவதுடன், அதை, வீட்டிற்கு வரும் நண்பர்க ளிடமும், உறவினர்களிடமும் சொ ல்லி, அவளை கிண்டல் செய்கி றேன்.

இதனால், அவள் இப்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப் பதாக உணர்கிறாள். எல்லா வசதி கள் இருந்தும், தான் ஓர் அடிமை போல் வாழ்வதாக நினைக்கிறாள். நான், இப்படி அவ ளை நோகடிப்பதால், மக னிடமும், மகளிடமும் தான் தன் கவலைகளைப் பகிர் ந்து கொள்கிறாள். இப்போ தெல்லாம், மகன் எனக்கு புத்தி சொல்ல ஆரம்பித்து வி ட்டான். ‘எல்லாம் இருந்தும், வயதான காலத்தில் நிம் மதியாக இல்லாமல், ஏனப்பா, அம்மாவை இப்படி படுத்துகிறீங் க?’ என்கிறான்.

எனக்கு என்ன செய்வதென்றே தெ ரியவில்லை. நான் செய்வது தவ று என்று தெரிகிறது. உணர்ச்சி வசப்பட்டு, அச்சமயத்தில் அவளைக் கடிந்து கொண் டாலும், நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது என்பதை உணர்ந்து மானசீகமாக, மனதளவில் அவளிடம் மன் னிப்பு கேட்கிறேன். இரவு நேரங்களில், அவளுக்குத் தெரியாமல், அவள் காலடியில் அமர்ந்து அழுதிருக் கிறேன்.

மற்றவர்களுக்கெல்லாம், தொழி லிலும், வியாபாரத்திலும், முதலீ ட்டு விஷயங்களிலும், ஆலோச னைகள் சொல்கிற எனக்கு, என் பிரச்னைக்காக மனோதத்துவ மருத்துவரை பார்ப்பது, வறட்டு கவுரவமாக தெரிகிற து.

நான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. என் பிரச்னைக்கு என்ன தான் தீர்வு? இத்தனைக்கும் மன அமைதிக்காக, தினமும் காலையி ல் ஒரு மணி நேரமும், மாலையில் அரை மணி நேரமு ம், பூஜையும், மந்திரமும் சொல்கிறேன்.

அன்பு தங்கையே… நான், என் மனைவியை அமைதியாகவு ம், நிம்மதியாகவும் வைத்திரு க்க முடியாதா? மூன்று, நான் கு நாட்கள் அமைதியாக இரு ந்தாலும், ஐந்தாவது நாள் மறுபடியும் ஏதாவது வெடித்து விடுகி றது! அதை எப்ப டி சமாளிப்பது. என் மன‌வேதனையை உங்களால் குறைக்க முடியுமா?

— இப்படிக்கு,
உங்கள் சகோதரன்.
அன்புள்ள அண்ணனுக்கு,

நாற்பதுவயதானால் நாய் குணம் வந்து விடும் என்பர்.  ௭ன் வயதான உங்களுக்கு, ஒன்றே முக்கால் நாய் குணம். சில‌ ஆண்டுகள் கூட வே இருக்கும் மனைவி மீது காதலாகி, கசிந்துருகி, உச்ச க்கட்டத்தில் வெறுப்பை உமி ழ்கிறீர்கள். ஆயிரக்கணக்கா ன பணியாளர்க ளை அதட்டி, மிரட்டி வேலை வாங்கிய நீங்கள், வீட்டி லும் மனைவி மீது அதே அதிகாரத்தை பிரயோகிக்கிறீ ர்கள். மீண்டும் பல் முளைப்பது போல, சில ஆண்களு க்கு, 70 வயதி லும், ஆண்மை பொங்கி வழியும். உடலு றவுக்கு ஒத்து ழைக்காத மனைவி மீது, கோபம் கொப்ப ளிக்கும். மகள் மற்றும் மகன் தனிக்கூடு அமைத்து, பறந்து விட் டனர். மனைவி முகத்தை மட்டும், 24 மணி நேரமும் பார்ப்பது, தனிமை துயரத்தை விஸ்வரூபிக் கச் செய்கிறது.

பெரும்பான்மையான கணவன் மார்கள், தங்களது மனைவிமா ர்களின் திறமைகளை குறைத் தே மதிப்பிடுவர்; நீங்களும் அப்படித்தான். டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும், கொ ஞ்சம் விவரம் அறியாதவள் என, மனைவியை கணிக் கிறீர்கள். இந்த கணிப்பால் தான், மனைவியுடன் அடிக் கடி சண்டைபோடுகிறீர்கள். பிறரை குத்திக்காட்டுவது ம், மட்டம் தட்டுவதும் உங்கள் பிறவிக் குணம். உங்கள் தந்தையாரிடமிருந்து இக்குணம் உங்களுக்கு தொற்றி யிருக்கக் கூடும். மனைவி யை தினம் தினம் வார்த் தைகளால் மரண காயப்ப டுத்தி விட்டு, என்னுடைய துர்நடத்தைக்கு வருந்துகி றேன் என, ஒப்புதல் வாக் குமூலம் தருவது நொண்டி சமாதானம்.

உங்களது பிரச்னைக்கான தீர்வை அலசி ஆராய் வோம்…

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு இவற்றை அள ந்து பாருங்கள். முன்னே பின்னே இருந்தால், தகுந்த மருத்துவம் மேற்கொள்ளுங்கள். மருத்துவரி ன் ஆலோசனை இல்லாது, நீண் ட நாட்களாக ஒரே உயர் ரத்த அழுத்த மாத்திரை எடுத்து கொ ள்கிறீர்கள் என்றால், நிறுத்தி விட்டு மருத்துவ ஆலோசனை பெற்று, புது மாத்திரை உட்கொ ள்ளுங்கள்.

மாதத்தில், ஏழு நாட்கள், நீங்க ளோ அல்லது உங்களது மனைவியோ மகள் அல்லது மகன் வீடுகளுக்குசென்று இளைப்பாருங்கள். மாதத்தி ல், இருநாட்கள் மகன் அல்லது மகள் குழந்தை களுடன், உங்கள் வீட்டி ல் வந்து தங்கி செல்ல ட்டும். மாதம் முழுக்க, உங்கள் வீட்டில் ஆள் நடமாட்டம் இருக்கட்டும். உற வினர் வீடுகளுக்கு செ ன்று வாருங்கள். விருந்தினர் களை வீட்டிற்கு அழைத் து உபசரியுங்கள். மாதம் ஒரு நாள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும்சென்று, அவர்களுடன் கலந்துரை யா டி, அவர்களது மன பார த்தை லேசாக்குங்கள். இரு இல்லங்களின் ஒருவே ளை உணவை, ‘ஸ்பான்சர்’ செய்யு ங்கள்.

மனைவி மீது கோபம் வரும் போது, அவளுடனான சிற ப்பான தாம்பத்ய நாட்களை, அவளின் சேவைகளை, உதவிகளை மற்றும் சிறப்பான சமையலை மனக் கண் ணில் ஓட்டிப் பாருங்கள். அவளுடைய முதுமையான முகத்தை புறந்தள்ளி, திருமணத்தன்று இருந்த இளம் மனைவி முகத்தை அசை போடுங்கள். மீதி வாழ்நாட் கள் எத்தனை நாட்களோ, எத்தனை மாதங்களோ அல் லது எத்தனை ஆண்டுகளோ… எ தற்கு கட்டின மனைவியின் சாப த்தை பெற வேண்டும். அவளை அனுசரித் து அன்பாய் நடத்தி, புண்ணியம் பெறுங்கள். தினமு ம், காலையில் எழுந்ததும் ம னைவிக்கு ஒரு முத்தம் கொடுத் து, மனைவியிடம் ஒரு முத்தம் பெறுங்கள்!

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: