Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க அழகைக் கெடுக்கும் முகப்பருக்களுக்கு காரணமான உணவு வகைகள்

உங்க அழகைக் கெடுக்கும் முகப்பருக்களுக்கு காரண மான உணவு வகைகள்

பல வருடங்களாக உணவுக்கும், பருக்களுக்கும் இருக் கும் உறவைபற்றி வாக்குவாதம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால்

நாம் உண்ணும் உணவிற்கும், நம் சருமத்திற்கும் தொ டர்பு இருப்பதில் எந்தஒரு மாற்று கருத்தும் இல்லை.

சாக்லெட், பர்கர், பொரித்த உணவு கள் மற்றும் இன்னு ம் பல சுவையான உணவுகளால் பருக்கள் ஏற்படும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்க ள் அதிகமாக வரும் என்று பலரும் நம்புகின்றனர். பரு க்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக் கிறது.

செனை பசுக்களில் இருந்து எடுக்கப் படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் ஹார்மோன்கள் அதிக ளவில் இருப்பதால், பருக்களுடன் பா ல் பொருட்களுக்கு தொடர்பு இருப்பது நம்பப்படுகிறது.

மிட்டாய், பிஸ்கட் அல்லது வெள்ளை பிரட்டை போன்ற பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க் கரையை ஊக்கு விக்கும் வகையை சேர்ந்தவை என்ப தால், அது ஹார்மோனில் ஏற்ற இறக்கங்களை உண்டா க்கும்.

அதனால் பருக்கள் வருவ தோடு மட்டுமல்லாமல், இரு க்கும் பருக்களையும் மோசம டையச் செய்யும். பருக்கள் வருவதற்கு சாக்லெட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்பப்படுகிறது. இதி ல் சிறிதளவு உண்மை யும் கூட இருக்கிறது. சாக்லெ ட்டில் பால் பொருட்கள், சுத்தரிக்கப்பட்ட சர் க்கரை மற்றும் காப்ஃபைன் உள்ள து.

இவை மூன்றுமே பருக்கள் உரு வாக காரணமாக இருக்கும் பொருட்கள். எண்ணெய் பசையுடன், ஸ்டார்ச் அதிகமாக உள்ள பிரெஞ்சு ப்ரை ஸில் சுத்தரிக்கப்பட்ட கா ர் போஹைட் ரேட் நிறை ந்துள்ளது. இவை பருக் களை உருவாக்கும்.

அதிகளவில் இறைச்சி யை உண்ணும் போது, அ வை பருக்கள் உருவாக காரணமாகஅமையும். மே லும் இறைச்சி சாப்பிடுவதால், உடலில் உள்ள அமிலக் கார க் குறியீடு இருக்கவேண்டிய அள வை விட, அதிகமாக உயர்த்திவிடும்.

 இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவுஅல்ல‍

Leave a Reply