Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – மஷ்ரூம் ஃப்ரை (காளான் வறுவல்)

சமையல் குறிப்பு – மஷ்ரூம் ஃப்ரை (காளான் வறுவல்)

சமையல் குறிப்பு – மஷ்ரூம் ஃப்ரை (காளான் வறுவல்)

இந்த காளானை, பெரும்பாலானோர் மசாலா அல்லது குழம்பு என்றுதான் செய்து சாப்பிடுவார்கள். ஆனால்

அதனை வறுவல் கூட செய்து சாப்பிடலாம்.

இங்கு காளானைக் கொண்டு எப்படி வறுவல் செய்வ தென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

காளான் – 1 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 டேபி ள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வரமிளகாய் சேர்த்து 30 நொடி தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காய த்தை சேர்த்து பொன்னிறமா க வதக்க வேண்டும்.

பின் அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, காளானை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அப்போது காளானது தானாக தண்ணீரை வெளியேற் றும்.

அப்படி வெளியேற்றிய தண்ணீ ரானது முற்றிலும் வற்றி நன்கு வெந்த பின், அதில் கரம் மசா லா சேர்த்து பிரட்டி கொத்த மல் லி தூவி இறக்கினால், காளான் வறுவல் ரெடி!!!

=> மகா

Leave a Reply