Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – சுடச்சுட சுவையான கரண்டி ஆம்லேட்

சமையல் குறிப்பு – சுடச்சுட சுவையான ‘கரண்டி ஆம்லேட்

சமையல் குறிப்பு-சுடச்சுட சுவையான கரண்டி ஆம்லேட்

பொதுவாக முட்டையை என்றாலே அனைத்து வயதி னருக்கும் பிடித்த‍மான

உணவு. இந்த முட்டையை பச்சையாக குடிப்ப‍வர்கள் சிலருண்டு. சிலருக்கு வேக வைத்த‍ முட்டை பிடிக்கு ம். சிலருக்கு ஆஃப் பாயில் பிடிக்கும், சிலருக்கு முழு ஆம்லேட் பிடிக்கும், சிலருக்கு இந்த முட்டை ஆம்லேட் டோடு சிறிது வெங்காயம், மிளகுத்தூள் கலந்த ஆம் லேட் பிடிக்கும். சரி விஷயத் திற்கு வருவோம் வழக்க மான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இந்த கரண்டி ஆம்லேட்  நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம்.

தேவையானவை
முட்டை-1
சின்ன வெங்காயம் – கைப்பிடி
கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொ டியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக் க வேண்டும்.

பிறகு மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட் டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும். ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்று செய்துகொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக்கல் லிலேயே குழிகள் அமை க்கப் பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.

இந்த கரண்டி ஆம்லெட் விருதுநகரின் இன்னொரு சிறப்பாகும்.

=>இந்து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: