Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – ராகி பகோடா

சமையல் குறிப்பு – ராகி பகோடா

சமையல் குறிப்பு – ராகி பகோடா

ருசியான உணவுகளை சாப்பிடுவதை அரிதாக வைத் துக்கொண்டு

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் உணவுகளையும் நாம் அதிகளவில் உட்கொண்டோமேயானால், நமக்கு ஆரோக்கியமான நீடித்த‍ ஆயுள் கிட்டும்.

அந்த வகையில் இதோ ராகி பகோடா, சமைத்து ருசிப் போம்.

தேவையானப் பொருட்கள்:

கடலை மாவு – அரை கப்
கேழ்வரகு மாவு – ஒரு கப்
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி, முட்டைகோஸ் – 2 கப்
வெங்காயம், பச்சைமிளகாய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள் ளவும்.

* கடலை மாவு, கேழ்வரகு மாவு, மிளகாய்த்தூள், உப்பு, நறுக்கிவைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி,முட்டை கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய் உடன் சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

* கலந்த கலவையை சிறிது சிறிதாக கொதிக்கும் எண் ணெயில் போட்டு, பொன்நிறம் வரும்வரை பொரித்தெ டுத்தால்… ராகி பகோடா ரெடி.

=>மா. மலர்

Leave a Reply